புத்தளத்தில் குப்பைக்கு எதிராக வலுவடையும் போராட்டம்

0 669
  • ரஸீன் ரஸ்மின்

இலங்­கையைப் பொறுத்த வரையில் எல்­லா­வற்­றையும் போரா­டியே பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்ற நிலை உரு­வா­கி­யி­ருக்­கி­றது. இலங்கை ஆசி­யாவின் ஆச்­ச­ரி­ய­மான நாடல்­லவா…

மலை­யக மக்கள், பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள், வடக்கு, கிழக்கு மக்கள், தொழிற்­சங்­கங்கள் என எல்லா தரப்­பி­னரும் தமது அடிப்­படை உரி­மை­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக வீதியில் இறங்கி போரா­டிக்­கொண்டே இருக்­கி­றார்கள்.

அது­போல கொழும்­பி­லி­ருந்து புத்­த­ளத்­திற்கு கொண்டு வரப்­ப­ட­வுள்ள குப்பைத் திட்­டத்­திற்கு எதி­ராக புத்­த­ளத்தில் வாழும் மூவின மக்­களும் கடந்த 150 நாட்­க­ளுக்கும் மேலாக கவ­ன­யீர்ப்பு போராட்­டங்­களை நடத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இதே­வேளை, தொழிற்­சங்­கங்கள் போராட்­டங்­களை நடத்தும் போது அவர்­களை மேசைக்கு அழைத்து அவர்கள் விடுக்கும் கோரிக்­கை­களை உட­ன­டி­யாக நிவர்த்தி செய்து கொடுக்­கின்ற இந்த அர­சாங்கம் புத்­தளம் மக்­களின் நியா­ய­மான இந்த கோரிக்­கை­களை கண்டும் காணா­த­து போல இருப்­பது கவ­லைக்­கு­ரி­யதே.

தலை­நகர் கொழும்பை அழ­கு­ப­டுத்தும் நோக்கை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அழகும், வளமும் கொண்ட புத்­த­ளத்தை குப்பை மேடாக ஆக்­கு­வ­தற்கு அர­சாங்கம் மிகத் தீவி­ர­மாக  முயற்­சித்து வரு­கின்­றது.

கொழும்பில் சேக­ரிக்­கப்­படும் குப்­பை­களை புத்­தளம் அரு­வாக்­காடு சேராக்­குளி எனும் பிர­தே­சத்தில் கொட்­டு­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.

முன்னாள் ஜனா­தி­ப­தியும் தற்­போ­தைய எதிர்க் கட்சித் தலை­வ­ரு­மான மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்சிக் காலத்­தி­லேயே இந்த திண்மக்­க­ழிவு அகற்றும் திட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

எனினும், அப்­போது கிடப்பில் இருந்த இந்த திட்­டத்தை இப்­போது நடை­மு­றைப்­ப­டுத்த அர­சாங்கம் முயற்­சித்து வரு­கி­றது. பெரு­ந­கரம் மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சு இந்த திட்­டத்தை நடை­முறைப் படுத்­த­வுள்­ளது.

கொழும்பு மீதொட்­ட­முல்ல பகு­தியில் உள்ள குப்­பை­க­ளையும், கொழும்பு உள்­ளிட்ட பிற இடங்­களில் நாளாந்தம் சேக­ரிக்­கப்­படும் குப்­பை­க­ளையும் புத்­தளம் அரு­வாக்­காட்டில் ரயில் மூலம் கொண்­டு­வந்து கொட்­டு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

வணாத்­த­வில்லு பிர­தேச சபைக்கு உட்­பட்ட அரு­வாக்­காடு பிர­தே­சத்தில் சீமெந்து தொழிற்­சா­லைக்­காக சுண்­ணாம்­புக்கல் எடுக்­கப்­படும் அந்த பாரிய குழி­களில் இந்த குப்­பை­களை கொட்டி சுற்­றுப்­புறச் சூழ­லுக்கும், மக்­க­ளுக்கும் எந்தப் பாதிப்­புக்­களும் வரா­த­படி அதனை பாது­காப்­ப­தற்கும் அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக ௯று­கி­றது.

எனினும், அர­சாங்­கத்தின் வாக்­கு­று­தி­களை நம்பத் தயா­ரில்லை எனக் ௯றும் மக்கள் இந்த திட்­டத்தை புத்­த­ளத்தில் நடை­மு­றைப்­ப­டுத்தக் ௯டாது என்று அங்கு வாழும் மூவின மக்­களும் தொடர் போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றார்கள்.

அழ­கிய புத்­த­ளத்தை அசுத்­தப்­ப­டுத்தும் திட்டம்

கொழும்பில் சேக­ரிக்­கப்­படும் குப்­பை­களை புத்­த­ளத்தில் கொட்­டு­வ­தனால் சுற்­றுப்­புறச் சூழல் பெரும் அச்­சு­றுத்­த­லாக காணப்­ப­டு­வ­துடன், அங்கு வாழும் மக்கள் பொரு­ளா­தார மற்றும் சுகா­தார ரீதி­யிலும் பெரும் பாதிப்­புக்­களை எதிர்­நோக்க வேண்டி ஏற்­படும் என்றும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

குப்பை கொட்­டு­வ­தற்­காக அடை­யாளப் படுத்­தப்­பட்­டுள்ள அரு­வாக்­காட்­டுக்குப் பக்­கத்­தில்தான் வில்­பத்து தேசிய வனமும், கங்­கே­வாடி எனும் கிறிஸ்­தவ மக்கள் அதி­க­மாக வாழும் மீனவர் கிரா­மமும், முஸ்­லிம்கள் அதி­க­மாக வாழும் கலைத்­தீவு கிரா­மமும் இருக்­கி­றது.

எனவே, இந்த குப்பை மேட்டின் துர்­நாற்­றத்தால் வில்­பத்­துவில் வாழு­கின்ற விலங்­குகள் குப்பை மேட்டை தேடி வெளியே வர ஆரம்­பிக்கும். இதனால், மனி­தர்­க­ளுக்கும் விலங்­கு­க­ளுக்கும் இடையில் முரண்­பா­டுகள் ஏற்­படும்.

அத்­துடன், அங்கு வாழும் மக்கள் தாழ்­வுப்­ப­கு­தியில் இருந்தே குடி­நீ­ரையும் பெற்­றுக்­கொள்­கின்­றனர். இவ்­வாறு குப்­பை­களை கொட்­டு­வ­தனால் அந்த மக்கள் அசுத்­த­மான நீரை அருந்தும் நிலை ஏற்­படும்.

அது­மாத்­தி­ர­மன்றி, குப்பை கொட்­டு­வ­தற்கு எதிர்­பார்த்­துள்ள அரு­வாக்­காட்­டிற்கு பக்­கத்­தில்தான் கலா ஓயா ஆறும் இருக்­கி­றது. இந்த ஆற்­றி­லி­ருந்து குழாய் மூலம் சுத்­த­மான குடிநீர் வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரும் நிலையில் இவ்­வாறு குப்­பை­களை கொட்­டு­வதால் கலா ஓயா ஆற்றின் நீரும் அசுத்­த­ம­டை­யலாம் எனவும் சொல்­லப்­ப­டு­கி­றது.

அத்­தோடு உப்பு வளம், கடல் வளம் நிறைந்த புத்­த­ளத்தில் இந்த குப்பைத் திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்தப் படு­மானால் உப்பு வளம் பாதிப்­ப­டையும் என்று அச்சம் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

மாத்­தி­ர­மன்றி, இது­வரை காலமும் சுத்­த­மான உப்பை உட்­கொண்ட நாட்டு மக்கள் இந்தக் குப்பைத் திட்­டத்தால் அசுத்த நீர் கலந்த உப்­பையே உட்­கொள்ளும் நிலை உரு­வா­வ­துடன் மீன்­பிடித் தொழிலும் பாதிப்­ப­டையும் எனவும் சொல்­லப்­ப­டு­கி­றது.

போராட்­டங்­களில் ஈடு­பட்­டுள்ள மக்கள்   

இவ்­வாறு நிகழ்­கால மற்றும் எதிர்­கால சந்­த­தி­யி­னரின்  வளங்­க­ளையும் பொரு­ளா­தா­ரத்­தையும் இல்­லாமல் செய்யும் இந்த திட்­டத்தை எதிர்த்து புத்­த­ளத்தில் வாழும் மூவின மக்­களும் போராட்­டங்­களை நடத்தி வரு­கி­றார்கள்.

எவ்­வா­றான போராட்­டங்­களை நடத்­தி­னாலும், கொஞ்சம் ௯ட விட்­டுக்­கொ­டுக்­காமல் மக்­களின் குரலை நசுக்கி அவர்­களின் உணர்­வு­களை மதிக்­காமல் எப்­ப­டியும் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தியே தீருவோம் என்று திட்­டத்­திற்குப் பொறுப்­பான அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க ௯று­வ­தையும் சர்­வா­தி­கார போக்­குடன் நடந்து கொள்­வ­தையும் ஒரு போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

இவ்­வா­றான திட்­டங்கள் புத்­த­ளத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது இது முதல் தடவை அல்ல. புத்­தளம் மக்­க­ளுக்கு அபி­வி­ருத்தி திட்­டங்­களை வழங்­கு­வ­தற்கு பதி­லாக மக்­க­ளுக்கு பாத­கங்­களை விளை­விக்கக் கூடிய திட்­டங்­க­ளையே ஆட்­சி­யா­ளர்கள் பரி­சாக கொடுத்­தி­ருக்­கி­றார்கள்.

இதற்கு முன்னர் சீமெந்து தொழிற்­சா­லை­யையும் அதற்குப் பின்னர் அனல் மின்­சார நிலை­யத்­தையும் அமைக்கும் போது ௯ட மக்கள் தமது எதிர்ப்­பினை தெரி­வித்­தார்கள்.

ஆனால், இந்த திட்­டங்­களால் மக்­க­ளுக்கு நன்­மையே கிடைக்கும், ஒரு­போதும் தீங்கு வராது என்று பொய்­யான வாக்­கு­று­தி­களை வழங்கி அந்த திட்­டங்­களை நடை­முறைப் படுத்­தி­யுள்­ளனர். அவ்­வா­றான திட்­டங்­களால் புத்­தளம் மக்கள் இன்­று­வ­ரைக்கும் பாதிப்­புக்­களை அனு­ப­வித்துக் கொண்டே இருக்­கி­றார்கள்.

அது­போ­லவே, இந்த குப்பைத் திட்ட விவ­கா­ரத்­திலும் அர­சாங்­கத்தின் எந்த வாக்­கு­று­தி­க­ளையும் மக்கள் நம்­பு­வ­தற்கு தயா­ரில்லை என்­பதை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்கள்.

இந்த குப்பை திட்­டத்­திற்கு எதி­ராக க்ளீன் புத்­தளம் அமைப்­பி­ன­ரோடு இணைந்து புத்­த­ளத்தில் வாழும் ஆண்கள், பெண்கள், சிறு­வர்கள், இளை­ஞர்கள் மற்றும் வயோ­தி­பர்கள் என்று மூவின மக்­களும் கடந்த ஐந்து மாதங்­க­ளுக்கும் மேலாக சத்­தி­யாக்­கி­ரக போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கி­றார்கள்.

இந்த போராட்­டத்­திற்கு கட்சி வேறு­பா­டுகள் இன்றி, அர­சியல் கட்­சி­களும் அதன் உறுப்­பி­னர்­களும் தமது முழு­மை­யான ஆத­ர­வினை வழங்கி வரு­கின்­றார்கள்.

அர­சி­யல்­வா­தி­க­ளுக்குப் பொறுப்பு

இந்த திட்­டத்தை எதிர்த்து போராட்­டங்­களை நடத்­திய மற்றும் தலைமை தாங்கி வழி­ந­டத்­திய அர­சியல் பிர­மு­கர்கள், சமயத் தலை­வர்கள் , சமூக ஆர்­வ­லர்கள் எனப் பலர் கைது செய்­யப்­பட்­டார்கள். இவ்­வா­றான கைதுகள் மூலம் மக்­களை உள­ரீ­தி­யாக நலி­வ­டையச் செய்து, அச்­சு­றுத்தி திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தவும் கொழும்பில் இருந்து முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

எனினும், சமயத் தலை­வர்­களின் பூரண வழி­காட்­ட­லோடு எதற்கும் அஞ்­சாமல், மனம் தள­ராமல் இந்த போராட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­ற­து.

இதே­வேளை, குறித்த திட்டம் தொடர்பில் அர­சியல் கட்­சிகள் அவ்­வப்­போது அறிக்­கை­களை விட்­டாலும், அது மக்­க­ளுக்கு ஒரு­வித மன ஆறு­தலைக் கொடுக்­கின்ற போதிலும் அது நிரந்­தர தீர்­வாக இருக்­காது என்­பது மக்­க­ளுக்கும் புரி­யாமல் இல்லை.

அர­சியல் கட்­சிகள் இந்த விட­யத்தை அர­சி­ய­லாக பார்க்­காமல் ஒரு சமூ­கத்­தின் உரிமையாகப் பார்க்க வேண்டும். இது ஒரு சமூ­கத்­திற்கு மாத்­திரம் சம்­பந்­தப்­பட்ட பிரச்­சி­னையும் அல்ல. இந்த குப்பைத் திட்­டத்தின் பாதிப்­புக்கள் இன, மத, பிர­தேசம் என்று பார்க்­காமல் எல்­லோ­ருக்கும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தவே போகி­றது.

எனவே, இந்த விட­யத்தில் சகல கட்­சி­க­ளையும் சார்ந்த அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகாண சபை மற்றும் பிர­தேச சபை உறுப்­பி­னர்கள் என எல்­லோரும் இணைந்து செயற்­பட வேண்­டிய கட்­டாயத் தேவை இப்­போது ஏற்­பட்­டுள்­ளது.

குறித்த திட்டம் தொடர்­பாக களத்தில் மக்­க­ளையும், அறைக்குள் ஆட்­சி­யா­ளர்­க­ளையும் திருப்திப் படுத்தி இரட்டை வேடம் போடு­வதை தவிர்க்க வேண்டும்.

மக்கள் ஒரு­புறம் தமது எதிர்ப்­புக்­களில் ஈடு­பட்­டாலும், தமது கட்சி அல்­லது தனிப்­பட்ட நிலைப்­பாட்டை கடு­மை­யான அழுத்­தங்கள் மூலம் பிர­யோ­கிக்க வேண்டும்.

அமைச்­சர்­களின் பெயர் பட்­டி­யலை தயா­ரிக்­கின்ற போது தமக்கு இத்­தனை அமைச்சு, பிரதி அமைச்சு என்று பேரம் பேசு­கின்ற சிறு­பான்மை கட்சித் தலை­மைகள் மற்றும் ஏனைய கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஏன் இந்த குப்பை விட­யத்தில் அர­சுக்கு அழுத்­தங்­களை வழங்க முடி­யாது.

அர­சியல் மாயைக்குள் மயங்கிக் கிடந்த புத்­த­ளத்து மக்கள் இப்­போ­துதான் விழிப்­ப­டைந்­தி­ருக்­கி­றார்கள் .

அரசின் புதிய யுக்தி

கொழும்பில் இருந்து புத்­த­ளத்­திற்கு குப்­பை­களைக் கொட்டும் அர­சாங்­கத்தின் திட்­டத்­திற்கு புத்­தளம் மக்­களின் எதிர்ப்பு வலுக்­கின்ற இந்­நி­லையில், திட்­டத்­திற்குப் பொறுப்­பான பெரு­ந­கரம் மற்றும் மேல்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சு புதிய யுக்­தி­யொன்றை கையாண்­டி­ருக்­கி­றது.

அதா­வது, கொழும்பு குப்­பை­களை கொட்­டு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்டுள்ள புத்­தளம் அரு­வாக்­காடு சேராக்­குளி பகு­தியில் தமது உள்­ளூ­ராட்சி மன்ற எல்­லைக்­குட்­பட்ட பகு­தி­களில் சேக­ரிக்­கப்­படும் குப்­பை­களை அடுத்த மாதம் 15ஆம் திகதி முதல் கொட்­டு­மாறு புத்­தளம் நகர சபை, புத்­தளம் பிர­தேச சபை, கற்­பிட்டி பிர­தேச சபை, சிலாபம் நகர சபை, வணாத்­த­வில்லு, கரு­வ­ல­கஸ்­வெவ ஆகிய உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் தலை­வர்­க­ளுக்கு பெரு­ந­கரம் மற்றும் மேல்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சின் செய­லாளர் கடந்த ஜன­வரி மாதம் 30 ஆம் திகதி  கடிதம் மூலம் உத்­த­ர­விட்­டுள்ளார்.

இங்கு அவ­தா­னிக்க வேண்­டிய விடயம் என்­ன­வெனில், கொழும்பு குப்­பை­களை புத்­த­ளத்தில் கொட்டும் திட்­டத்­திற்கு இந்த மக்கள் எதிர்ப்பை வெளிப்­ப­டுத்தும் போது அதனை நடை­மு­றைப்­ப­டுத்த பல சிக்­கல்­களை எதிர்­நோக்க வேண்­டி­வரும் என்­ப­தால்தான், முதலில் புத்­தளம் மாவட்­டத்தில் சேக­ரிக்­கப்­படும் குப்­பை­களை கொட்­டு­மாறு ஆலோ­சனை வழங்­கப்­பட்­டுள்­ளது.

முதலில் நீங்கள் கொட்­டுங்கள் பிறகு நாங்கள் வந்து கொட்­டு­கிறோம் என்­பதே அவர்­க­ளு­டைய மறை­மு­க­மான திட்­ட­மாகும்.

எனவே, மேற்­சொன்ன அனைத்து உள்­ளு­ராட்சி மன்­றங்­களின் தலை­வர்­களும் உறுப்­பி­னர்­களும் இந்த மறை­முகத் திட்­டத்­திற்கு ஒரு­போதும் துணை போகக் ௯டாது என்­பதே மக்­களின் வேண்­டு­கோ­ளாகும்.

இந்த விட­யத்தில் மக்­களின் எதிர்ப்­புக்கள் அதி­க­மாக இருப்­பதால் இதனை நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாது என்ற கார­ணங்­களைக் காட்டி சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­ன­ருக்கு தெரி­யப்­ப­டுத்த வேண்டும்.

ஏனெனில், இந்த திட்­டத்­திற்கு எதி­ராக மேற்­கு­றித்த உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­த­மை­யையும் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த அனு­ம­திக்க மாட்டோம் என்று ஊட­கங்­களில் அறிக்கை விட்­டதும் குறிப்பிடத்தக்கது.

கறுப்பு தினம் அனுஷ்­டிப்பு

புத்­தளம் அரு­வாக்­காட்டில் குப்பை கொட்டும் திட்­டத்­திற்கு எதிர்ப்பு தெரி­விக்கும் வகையில் கடந்த புதன்­கி­ழமை (13) முதல் இன்று வெள்­ளிக்­கி­ழமை வரை­யான மூன்று நாட்­களை புத்­த­ளத்தின் கறுப்பு நாட்­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்­து­வ­தாக புத்­தளம் மாவட்ட சர்வ மத செயற்­குழு அறி­வித்­துள்­ளது.

புத்­தளம் பெளத்த மத்­திய நிலையம் , இந்து மகா சபை , கிறிஸ்­தவ சபை, அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் புத்­தளம் கிளை , புத்­தளம் பெரிய பள்ளி ஆகி­யன இணைந்தே புதன்­கி­ழமை (13), வியா­ழக்­கி­ழமை (14), மற்றும் வெள்­ளிக்­கி­ழமை ( 15 ) ஆகிய மூன்று நாட்­களை கறுப்பு தினங்­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இதன் அடிப்­ப­டையில் புதன்­கி­ழமை புத்­தளம், கரைத்­தீவு, கற்­பிட்டி மற்றும் முந்தல் ஆகிய பிர­தே­சங்­களில் வீடு­க­ளிலும், வர்த்­தக நிலை­யங்­க­ளிலும், வாக­னங்­க­ளிலும் கறுப்புக் கொடிகள் பறக்­க­விட்டு மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

அத்­துடன் பாலர் பாட­சாலை, அரச, தனியார் பாட­சாலை மாண­வர்கள், ஆசி­ரி­யர்கள் மற்றும் அரச உத்­தி­யோ­கத்­தர்கள், வங்கி ஊழி­யர்கள் ஆகியோர் கறுப்பு பட்டி அணிந்து பாட­சா­லை­க­ளுக்கும், அரச அலு­வ­ல­கங்­க­ளுக்கும் சென்­றனர்.

அத்­தோடு, நேற்று வியா­ழக்­கி­ழமை நோன்பு நோற்­ற­துடன், பள்­ளி­வா­சல்கள், அரபு மத­்ர­சாக்கள் என்­ப­ன­வற்றில் விஷேட துஆ பிரார்த்­த­னைகள் இடம்­பெற்­றன.

இதே­வேளை, இன்று வெள்­ளிக்­கி­ழமை புத்­த­ளத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்­டிக்­கப்­ப­டு­வ­துடன், ஜும்ஆத் தொழு­கையின் பின்னர் எழுச்சிப் பேரணி ஒன்றும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு மக்கள் தமது வாழ்­வு­ரி­மைக்­காக இன, மத வேறு­பா­டு­க­ளுக்கு அப்பால் மாதக் கணக்கில் வீதியில் இறங்கி போராடிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

சட்ட நட­வ­டிக்­கைக்கு முஸ்­தீபு

புத்­தளம் அரு­வாக்­காடு சேராக்­குளி பகு­தியில் இவ்­வாறு குப்­பை­களை கொட்டும் நட­வ­டிக்­கையை உட­ன­டி­யாக நிறுத்தக் கோரி மூவின மக்­களும் ஒரு­புறம் போராட்­டத்தில் ஈடு­பட்டு வரும் நிலையில் மறு­புறம் திட்­டத்தை நிறுத்­து­மாறு உத்­த­ர­விடக் கோரி வழக்குத் தாக்கல் செய்­வ­தற்­கான முயற்­சி­களும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

மக்­க­ளுக்கும், சூழ­லுக்கும் பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்தும் குறித்த குப்பைத் திட்­டத்தை உட­ன­டி­யாக நிறுத்தக் கோரி உயர் நீதி­மன்­றத்தில் மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் ஒன்று செய்­யப்­ப­ட­வுள்­ளது.

ஜனா­தி­பதி தலை­யிட வேண்டும்

இலங்­கையில் இருந்து போதையை முற்­றாக ஒழிப்­ப­தற்கும், சுற்­றுப்­புறச் சூழலை பாது­காப்­ப­தற்கும் ஜனா­தி­பதி மிகத் தீவி­ர­மாக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கிறார்.

எனவே, இந்தக் குப்பைத் திட்­டத்தால் மனி­தர்­க­ளுக்கு மாத்­தி­ர­மல்ல சூழ­லுக்கும் பெரும் சவா­லாக இருக்கும் இந்த  திட்­டத்தை தடுத்து நிறுத்­து­வ­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உட­ன­டி­யாக தலை­யிட வேண்டும் என்­பதே புத்­த­ளத்தில் வாழும் மூவின மக்­க­ளி­னதும் கோரிக்­கை­யாகும்.

அத்­துடன், குப்பைத் திட்டம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்­காக பெரு­ந­கரம் மற்றும் மேல்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்­ச­ர­வை­யையோ அல்­லது அதி­கா­ரி­க­ளையோ சந்­திப்­ப­தற்கு தாங்கள் தயா­ரில்லை என புத்­த­ளத்தில் உள்ள சர்வ மதக் குழு­வி­னர்­களும் அறி­வித்­துள்­ளனர்.

இந்த விடயம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தாக இருந்தால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் மாத்­தி­ரமே பேசு­வ­தா­கவும் அவர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர். இந்த விடயம் தொடர்பில் ஜனா­தி­பதி மற்றும் உயர்­நீ­தி­மன்­றத்தின் மீதுமே முழு புத்­தளம் மக்­களும் நம்­பிக்கை வைத்­துள்­ளனர்.

எனவே, குப்­பை­களை கொட்­டு­வ­தற்கு தகுந்த பல இடங்கள் காணப்­ப­டு­கின்ற போதிலும், பல­வந்­த­மாக புத்­த­ளத்­தில்தான் கொட்ட வேண்டும் என்ற அர­சாங்­கத்தின் பிடி­வாதக் கொள்கைகளை ஒருபுறம் வைத்து விட்டு புத்தளம் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.