தெற்கு சிரியா எறிகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் ஒரு பின்னணியாக இருந்தது

நெட்டன்யாஹு ஒப்புதல்

0 567

தெற்கு சிரி­யாவில் இரவு வேளையில் எறி­கணைத் தாக்­கு­தல்­களை இஸ்ரேல் மேற்­கொண்­ட­தாக இஸ்ரேல் பிர­தமர் பெஞ்­சமின் நெட்­டன்­யாஹு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை உறு­திப்­ப­டுத்­தினார்.

பெப்­ர­வரி 13–-14 ஆம் திக­தி­களில் போலந்தின் வோர்­சோவில் நடை­பெறும் ‘மத்­திய கிழக்கில் சமா­தானம்’ என்ற தொனிப் பொரு­ளி­லான மாநாட்டில் கலந்­து­கொள்­வ­தற்கு புறப்­பட்டுச் செல்­வ­தற்கு முன்­ன­தாக டெல் அவிவில் அமைந்­துள்ள பென்­கு­ரியன் விமான நிலை­யத்தில் வைத்து ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் பேசிய நெட்­டன்­யாஹு இக்­க­ருத்­தினை வெளி­யிட்டார்.

குறித்த மாநாட்டின் முக்­கி­யத்­துவம் தொடர்பில் கருத்துத் தெரி­வித்த அவர், இம் மாநாட்டில் ஈரான் தொடர்பில் முக்­கிய கவனம் செலுத்­தப்­ப­டு­மெனத் தெரி­வித்தார்.

ஈரானை முடக்­கு­வ­தற்கு நாம் எல்லா சந்­தர்ப்­பங்­க­ளிலும் பணி­யாற்­று­கின்றோம். நாம் தினமும் அந்த இலக்­கி­லேயே செயற்­ப­டு­கின்றோம். பிராந்­தி­யத்தில் ஈரான் தன்னை நிலை­நி­றுத்திக் கொள்­வ­தற்கு எதி­ரா­கவே நாம் செயற்­ப­டு­கின்றோம் எனவும் அவர் தெரி­வித்தார்.

இதன் மூலம் தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இஸ்ரேல் இருந்­ததை அவர் தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளார்.

பஸார் அல்-­–அ­சாத்தின் அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வ­ளித்­து­வரும் ஹிஸ்­புல்லாஹ் அமைப்பின் தெற்கு குனெய்ற்­ரா­வி­லுள்ள நிலைகள் மீது இஸ்ரேல் எறி­கணைத் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­தாக சிரி­யா­வி­லுள்ள உள்ளூர் ஊட­கங்கள் தெரி­விக்­கின்­றன. இந்த விவ­காரம் தொடர்பில் இஸ்­ரே­லிய அதி­கா­ரிகள் எவ்­வித கருத்­துக்­க­ளையும் வெளி­யி­ட­வில்லை.

ஈரா­னியப் படை­யினர் பிராந்தியத்தில் இருப்பதை காரணம் காட்டி சிரியா வின் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்களை அண் மைய ஆண்டுகளில் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.