மதூஷை இரகசியமாகவே கொண்டுவர திட்டமிட்டோம்

ஊடகங்கள் குழப்பிவிட்டன என்கிறார் கிரியெல்ல

0 651

விடு­தலைப் புலி­களின் முக்­கிய நப­ரான கே.பியை எவ்­வாறு நீதி­மன்ற, பொலிஸ் தலை­யீ­டில்­லாது நாட்­டுக்கு வர­வ­ழைக்க முடிந்­ததோ அது­போன்றே மதூஷையும் இர­க­சி­ய­மாக நாட்­டுக்கு கொண்­டு­வரத் திட்டம் வகுக்­கப்­பட்­டது. எனினும் ஊட­கங்­களின் தகவல் பரவல் மூல­மா­கவே மதூஷின் இலங்கை வலைய­மைப்பை முற்­றாக முடக்கும் பணி­களை பொலிஸார் ஆரம்­பித்­துள்ள நிலை­யி­லேயே அடை­யாளம் காணப்­பட்­டுள்ள இந்த ஏழு பேரையும் தேடி இவ்­வி­சா­ர­ணைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.  9 பேரைத் தேடி இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்ட நிலையில், நேற்று முன்தினம் சூரி­ய­வெ­வயில் வைத்து கெசா எனும் அசேல எரங்க, சுசந்­த­கு­மார ஆகிய இருவர் தங்­காலை குற்­றத்­த­டுப்புப் பிரிவு மற்றும் பாதாள உலக தடுப்பு பொலிஸ் குழு­வி­னரால் கைது செய்­யப்­பட்­டனர். இதன்­போது ரீ 56 ரக துப்­பாக்கி மற்றும் தோட்­டாக்கள், ஹெரோயின் என்­ப­னவும் கைப்­பற்­றப்­பட்­டன. இந் நிலை­யி­லேயே தென் மாகா­ணத்தில் மதூ­ஷுக்கு மிக நெருக்­க­மான  மேலும் 7 பேரைத் தேடி விசா­ரணை தொடர்­வ­தாக தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலு­வ­லக தக­வல்கள் சுட்­டிக்­காட்­டின.

குறிப்­பாக நேற்று மாலை வரை  தென் மற்றும் மேல் மாகா­ணங்­களில், மதூஷ் வலை­ய­மைப்­புடன் தொடர்­புள்ள  12 பேர் வரையில் கைது செய்­யப்­பட்­டுள்ள நிலையில் அவர்கள் அனை­வ­ரி­டமும்  தீவிர விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உய­ர­தி­காரி ஒருவர் கூறினார்.

தேட­ப்படும் தெற்கின் ஏழு பேரும் தற்­போது இருப்­பி­டங்­களை விட்டுத் தலை­ம­றை­வா­கி­யுள்ள நிலையில் பொலிஸ் அதி­ரடிப் படை, திட்­ட­மிட்ட குற்­றங்­களை தடுக்கும் பிரி­வுடன் இணைந்து விசா­ர­ணை­களை தென் மாகா­ணத்தின் சிறப்பு பொலிஸ் குழுக்கள் முன்­னெ­டுத்­துள்­ளன.

இத­னி­டையே  மதூஷின் சகாக்­க­ளுக்கு மேல­தி­க­மாக தற்­போது டுபாயில் வைத்து கைது செய்­யப்­பட்­டுள்ள அங்­கொட லொக்கா எனும் பாதாள உலகத் தலை­வரின் சகாக்­க­ளுக்குள் சிக்கல் ஏற்­பட்­டுள்­ளது. அங்­கொட லொக்­காவின்  சகா ஒருவர் நேற்று பத்­த­ர­முல்­லையில் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார்.  வலான துஷ்­பி­ர­யோக தடுப்புப் பிரி­வி­ன­ருக்கு கிடைத்த தக­வ­லொன்­றுக்கு அமை­வாக மோட்டார்  வாக­ன­மொன்றில் பய­ணிக்­கும்­போது அவர் இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ளார். 40 கிராம் 600 மில்லி கிராம் ஹெரோயின் இதன்­போது மீட்­கப்­பட்­ட­தாகக் கூறிய பொலிசார், அவரை மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக மிரி­ஹான விஷேட விசா­ரணைப் பிரி­வி­ன­ரிடம் கைய­ளித்­த­தாகக் கூறினர்.

கடந்த 5 ஆம் திகதி அதி­காலை மாகந்­துரே மதூஷ் உள்­ளிட்ட பாதாள உலக கும்பல் ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தில் கைதா­னதைத் தொடர்ந்து,  மதூஷ் மற்றும் மதூஷின்  சார்­பி­லான பாதாள உலக கும்­பல்­களை வேட்­டை­யாடும் நட­வ­டிக்­கை­களும், மதூ­ஷுடன் கைகோர்த்­தவர்கள் யார் என்­பதைக் கண்­ட­றி­வ­தற்­கான விசா­ர­ணை­களும் ஆரம்­ப­மா­கின. இந்­நி­லையில் கடந்த 7 ஆம் திகதி மாலை அமீ­ர­கத்தில் மதூ­ஷுடன் கைதான பாடகர் அமல் பெரேரா  மற்றும் நாடக நடிகர்  ரயன் வேன் ரொயன் ஆகி­யோரின் வீடுகள் பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை மற்றும் போதைப்­பொருள் தடுப்புப் பிரி­வி­ன­ரினால் சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்பட்­டன. அதி­ரடிப் படைக் கட்­டளைத் தள­ப­தியும் போதைப்­பொருள் தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதி­ப­ரு­மான  எம்.ஆர். லத்­தீபின்  உத்­த­ர­வுக்­க­மைய இந்த சோத­னைகள் மஹ­ர­கம மற்றும் தெஹி­வளை  ஆகிய பகு­தி­களில் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.  இதன்­போது பாடகர் அமல் பெரே­ராவின்  மஹ­ர­கம வீட்­டி­லி­ருந்து கொக்கைன் போதைப் பொருள் பயன்­பாட்­டுக்கு உதவும் ஒரு வகை உப­க­ரணம் மற்றும் வெற்று கொக்கைன் பக்­கற்­றுக்கள் மீட்­கப்­பட்­டன. இது தொடர்பில் அவ­ரது சகோ­த­ரரை பொலிசார் விசா­ரித்த நிலையில் வாக்­கு­மூலம்  பெற்­றுக்­கொண்­டனர்.

இந்­நி­லையில் அதே தினம் இரவு தெஹி­வ­ளை­யி­லுள்ள நடிகர் ரயனின் வீடும்  அதி­ரடிப் படை­யி­னரால் சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்பட்­டது. இதன்­போது போதைப்­பொருள் கடத்த­லுக்கு பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக சந்­தே­கிக்­கப்­படும் பயணப் பொதி­யொன்று, போதைப்­பொருள் நிறு­வைக்குப் பயன்­ப­டுத்­தப்­படும்  டிஜிட்டல் தராசு ஒன்றும் மீட்­கப்­பட்­ட­துடன் ரயனின் உற­வினர் ஒருவர் பொலிஸ் பொறுப்பில் எடுக்­கப்­பட்டார்.  விசா­ர­ணையின் பின்னர் அவரின் வாக்­கு­மூலம் பதிவு செய்­யப்­பட்டு விடு­விக்­கப்­பட்டார்.

இந்த நட­வ­டிக்­கை­களின் ஊடா­கவே மதூஷ் வலை­ய­மைப்பை தேடிய பொலிஸ் நட­வ­டிக்­கைகள் இலங்­கையில் தீவி­ர­ம­டைந்­தன.

குறிப்­பாக கடந்த 8, 9 ஆம் திக­தி­களில்  இந்­ந­ட­வ­டிக்­கைகள் உச்ச அளவில் இடம்­பெற்­றன.

குறிப்­பாக 8 ஆம் திகதி,  தெற்கின் மாத்­தறை மாவட்­ட­மெங்கும்  மதூஷின் சகாக்­களை தேடி சிறப்பு நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்­றன.  அமீ­ர­கத்தில் கைதான மதூஷ் மற்றும் அவ­னது கிட்­டிய கூட்­டா­லிகள் ஐவ­ருக்கு சொந்­த­மான வீடுகள், இடங்கள்,  அவர்­க­ளுடன் அங்கு கைதா­கி­யுள்ள தெற்கின் பிர­பல ஹோட்டல் வர்த்தகர் ‘சைன்ஷைன் சுத்தா’  எனும் வர்த்தகரின் ஹோட்டல்களில் இந்த விஷேட தேடுதல்கள் இடம்பெற்றன.

இவை தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்  ரவீ விஜே குணவர்தனவின் மேற்பார்வையில் பிரதி பொலிஸ்மா அதிபர் விஜித்த குணரத்ன மற்றும் மாத்தறை பொலிஸ் அத்தியட்சகர்  கயங்க ஹசஸ்த மாரப்பனவின்  நேரடி கட்டுப்பாட்டில் இடம்பெற்றன.

இந்நிலையிலேயே தற்போது அடையாளம் காணப்பட்ட 7 பேரைத் தேடி விசாரணைகள் இடம்பெறுகின்றன.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.