பஹ்ரைன் உதைபந்தாட்ட வீரரை தாய்லாந்து விடுவிக்கவுள்ளது

0 637

பஹ்ரைன் உதை­பந்­தாட்ட வீரரை தாய்­லாந்­தி­லி­ருந்து பஹ்­ரை­னுக்கு நாடு­க­டத்த வேண்டும் என்ற நிபந்­த­னை­யினை தாய்­லாந்து கைவிட்­டுள்­ளதால், இரண்டு மாதங்­க­ளுக்கு முன்னர் கைது செய்­யப்­பட்ட பஹ்ரைன் அகதி உதை­பந்­தாட்ட வீரரை தாய்­லாந்து விடு­விக்­க­வுள்­ள­தாக குறித்த வழக்கின் சட்­டத்­த­ரணி தெரி­வித்துள்ளார்.

பேங்­கொக்­கி­லுள்ள க்லோங் பிரெம் சிறைச்­சா­லையில் 25 வய­தான உதை­பந்­தாட்ட வீரர் ஹகீம் அல்-­அ­ரைபி பல மாதங்­க­ளாக தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே கடந்த திங்­கட்­கி­ழமை இவ்­வ­றி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது. 2014 ஆம் ஆண்டு பஹ்­ரைனில் பொலிஸ் நிலை­ய­மொன்­றிற்கு தீயிட்ட குற்­றச்­சாட்டில் அவர் ஆஜ­ரா­காத நிலையில் அவ­ருக்கு 10 ஆண்­டுகள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. இக் குற்­றச்­சாட்­டினை மறுத்­துள்ள அவர் சம்­பவம் இடம்­பெற்­ற­போது தான் உதை­பந்­தாட்டப் போட்­டி­யொன்றில் விளை­யாடிக் கொண்­டி­ருந்­த­தாகத் தெரி­வித்­துள்ளார்.

பஹ்­ரைனின் வேண்­டு­கோ­ளுக்கு அமை­வாக சர்­வ­தேச பொலி­ஸா­ரான இன்­ட­போ­லினால் வெளி­யி­டப்­பட்ட அறி­வித்­தலைத் தொடர்ந்து தாய்­லாந்து விமான நிலை­யத்தில் வைத்து கடந்த நவம்பர் மாதம் அவர் கைது செய்­யப்­பட்டார்.
எவ்­வா­றெ­னினும், பஹ்ரைன் தனது நிபந்­த­னையை விலக்கிக் கொண்­டதைத் தொடர்ந்து உதை­பந்­தாட்ட வீர­ருக்கு எதி­ரான வழக்கை கைவி­டு­மாறு சட்­ட­வா­தி­களால் நகர்வு மனு தாக்கல் செய்­யப்­படும் பட்­சத்தில் அது நீதி மன்­றத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­படும் என தாய்­லாந்தின் சட்­டமா அதிபர் அலு­வ­லக அதி­கா­ரி­யான சட்சொம் அகாபின் தெரி­வித்தார்.

நீதி­மன்றம் ஹக்­கீமை சிறை­யி­லி­ருந்து விடு­விக்­கு­மாறு இன்று உத்­த­ர­விடும் என சர்­வ­தேச விவ­காரத் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் நாயகம் சட்சொம் தெரி­வித்தார்.

நாடு கடத்­து­வது தொடர்பாக பஹ்ரைன் தனது நிபந்தனையினை கைவிட்டுள்ளதா என்பது சம்பந்தமாக உடனடியாக எதுவும் தெரியவரவில்லை. இந்த வழக்கு தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் வெளியிட விரும்பவில்லை என தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.