33.9 மில்லியன் ரூபா மோசடி விவகாரம்: கோத்தாவின் ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டது

22 முதல் தொடர் விசாரணை

0 503

இலங்கை காணி மீட்பு மற்றும் அபி­வி­ருத்திக் கூட்­டுத்­தா­ப­னத்­துக்கு சொந்­த­மான 33.9 மில்­லியன் ரூபா பணத்தை நம்­பிக்கை மோசடி செய்­தமை தொடர்பில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக்ஷ உள்­ளிட்ட 7  பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராகத் தொட­ரப்­பட்­டுள்ள வழக்கு பிர­தம நீதி­ய­ர­சரின் கட்­ட­ளைக்­க­மை­யவே நிரந்­தர விசேட மேல் நீதி­மன்றில்  விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­தாக அந்த நீதி­மன்றம் நேற்று அறி­வித்­தது. அதனால் குறித்த வழக்கை விஷேட மேல் நீதி­மன்று விசா­ரிக்க முடி­யா­தென்ற கோத்தா உள்­ளிட்ட பிர­தி­வா­திகள் சார்பில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள அடிப்­படை ஆட்­சே­ப­னையை நிரா­க­ரித்த விஷேட மேல் நீதி­மன்றம், குறித்த வழக்கை எதிர்­வரும் 22 ஆம் திகதி முதல் தொடர்ச்­சி­யாக விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­வ­தாக அறி­வித்­தது.

கோத்­தா­பய ராஜபக்ஷ உள்­ளிட்ட 7  பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டுள்ள வழக்கை  நிரந்­தர விசேட மேல் நீதி­மன்றில் விசா­ரிக்க முடி­யுமா? முடி­யாதா? என்­பது குறித்த தீர்ப்பை அறி­விக்க அந்த வழக்­கா­னது நேற்று விசா­ர­ணைக்கு வந்­தது.

விஷேட மேல்­நீ­தி­மன்ற தலைமை நீதி­பதி சம்பத் அபேகோன்,  நீதி­ப­தி­க­ளான சம்பத் விஜே­ரத்ன, சம்பா ஜானகி ராஜ­ரத்ன ஆகியோர் முன்­னி­லையில் இவ்­வாறு அவ்­வ­ழக்கு விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது தீர்ப்பை அறி­வித்த தலைமை நீதி­பதி சம்பத் அபேகோன்,

“சட்ட மா அதி­பரால் தொடுக்­கப்­பட்­டுள்ள  இவ்­வ­ழக்கை  பிர­தம நீதி­யர­சரின் கட்­ட­ளைக்­க­மை­யவே இம்­மன்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொண்­டது. அதனால் இவ்­வ­ழக்கை விசா­ரிக்க இந்த மன்­றுக்கு அதி­காரம் உள்­ளதா இல்­லையா என எம்மால் முடி­வெ­டுக்க முடி­யாது. எனவே பிர­தி­வா­தி­களின்  அடிப்­படை ஆட்­சே­ப­னையை நிரா­க­ரிக்­கின்றோம்” என அறி­வித்தார்.

இந்­நி­லையில் பிர­தி­வா­திகள் மன்றில் முன்­வைத்த கோரிக்­கைக்­க­மைய, இவ்­வ­ழக்கை நிரந்­தர விஷேட மேல் நீதி­மன்றில் விசா­ரிக்­கு­மாறு பிர­தம நீதி­யர்சர் விடுத்த கட்­ட­ளையின் எழுத்­து­மூலப் பிர­தி­யையும்  தலைமை நீதி­பதி பிர­தி­வா­தி­களின் சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கு வழங்­கினார்.

இந்­நி­லையில் குறித்த வழக்கின் விச­ர­ணை­களை ஆரம்­பிக்க,  சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு பிர­தி­வா­திகள் குற்­ற­வா­ளியா, சுற்­ற­வா­ளியா என்ற பதிலை அவர்­க­ளிடம் கோர நீதி­மன்றம் முற்­பட்­டது. இதன்­போது வழக்கின் 6 ஆவது பிர­தி­வா­தி­யான மாறுக்கு தேவகே மஹிந்த சாலிய சுக­யீனம் கார­ண­மாக நேற்று நீதி­மன்றில் ஆஜ­ராகி இருக்­கா­மையை அவ­ரது சட்­டத்­த­ர­ணிகள் மருத்­துவ அறிக்­கை­யுடன் மன்றில் சுட்­டிக்­காட்­டினர். இந் நிலையில் பிர­தி­வா­திகள் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு குற்­ற­வா­ளியா சுற்­ற­வா­ளியா என்ற பதிலை பெறும் போது பிர­தி­வா­திகள் அனை­வரும் இருப்­பது சிறந்­த­தெனத் தீர்­மா­னித்த நீதி­மன்றம், அந்தப் பதிலை எதிர்­வரும் 22 ஆம் திகதி அனைத்து பிர­தி­வா­தி­களும் மன்றில் ஆஜ­ராகி  வழங்­கவும் அதன் பின்னர் விசா­ர­ணை­களை ஆரம்­பிக்­கவும் தீர்­மா­னித்து உத்­த­ரவு பிறப்­பித்­தது.

33.9 மில்­லியன் ரூபா அரச பணத்தை நம்­பிக்கை மோசடி செய்­தமை தொடர்பில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ உள்­ளிட்ட 7 சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டுள்ள வழக்கை கடந்த ஜன­வரி 22 முதல் நாளாந்தம் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்ள மூவ­ர­டங்­கிய நிரந்­தர விசேட மேல் நீதி­மன்றம் கடந்த ஜன­வரி 17 ஆம் திகதி தீர்­மா­னித்­தி­ருந்­தது. எனினும் அன்­றைய தினம் பிர­தி­வா­திகள் முன்­வைத்த அடிப்­படை ஆட்­சே­பனை கார­ண­மாக அவ்­வ­ழக்கு  விசா­ரணை அது தொடர்பில் ஆராய ஒத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. .

விஷேட மேல் நீதி­மன்றின் 2 ஆம் வழக்­காக சட்­டமா அதி­பரால் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள இந்த வழக்கில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ,  காணி மீட்பு மற்றும் அபி­வி­ருத்திக் கூட்­டுத்­தா­பன முன்னாள் தலைவர் லிய­னா­ராச்­சிகே பிரசாத் ஹர்ஷான் டி சில்வா, அக்­கூட்­டுத்­தா­பன பணிப்­பாளர் சபை உறுப்­பி­னர்­க­ளான கம­எத்தி ரால­லாகே சந்ரா உது­லா­வத்தி கம­ல­தாஸ, சுதம்­மிக கேமிந்த ஆட்­டி­கல, சமன்­கு­மார அப்­ரஹாம் கலப்­பத்தி, மாறுக்கு தேவகே மஹிந்த சாலிய, மதம்­பெ­ரும ஆரச்­சி­லாகே ஸ்ரீமத்தி மல்­லிகா குமாரி சேனா­தீர ஆகியோர் ஒன்று முதல் 7 வரை­யி­லான சந்­தேக நபர்­க­ளாக முறையே பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு செப்­டம்பர் மாதம் 3 ஆம் திக­திக்கும் 2015 பெப்­ர­வரி 2 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் காணி மீட்பு மற்றும் அபி­வி­ருத்திக் கூட்­டுத்­தா­ப­னத்­துக்கு சொந்­த­மான 33.9 மில்­லியன் ரூபாவை  செல­வ­ழித்து வீர­கெட்­டிய -மெத­மு­லன டீ.ஏ. ராஜ­பக் ஷ ஞாப­கார்த்த கோபு­ரத்தை நிர்­மா­ணிக்க சதி செய்­த­தாக அனைத்துப் பிர­தி­வா­தி­க­ளுக்கும் எதி­ராக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.  இவ்­வாறு அந்த ஞாப­கார்த்த கோபுரம், நூத­ன­சா­லையை நிர்­மா­ணிக்­கும்­போது குறித்த 33.9 மில்­லியன் ரூபாவை தவ­றாகப் பயன்­ப­டுத்­தி­ய­தாக காணி மீட்பு மற்றும் அபி­வி­ருத்தி ஆணைக்­கு­ழுவின் அப்­போ­தைய தலைவர் மற்றும் பணிப்­பாளர் சபை உறுப்­பி­னர்­க­ளான 2 முதல் 6 வரை­யி­லான பிர­தி­வா­திகள் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. அதற்கு உதவி ஒத்­தாசை புரிந்­த­தாக முதல் பிர­தி­வாதி கோத்­தா­பய மீதும் 7 ஆம் பிர­தி­வாதி மீதும் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

1982 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்டம் மற்றும் தண்­டனை சட்டக் கோவை­களின் பிர­காரம் இக்­குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டி­ருந்­தன.

இந்­நி­லையில் முதலில் அடிப்­படை ஆட்­சே­ப­னையை முன்­வைத்த கோத்­தா­பய ராஜபக் ஷவின் சட்­டத்­த­ர­ணி­யான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ரொமேஷ் டி சில்வா, ‘2018 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நீதி­மன்ற கட்­ட­மைப்பு திருத்தச் சட்டப் பிர­காரம் இந்த விஷேட மேல் நீதி­மன்­றுக்கு பாரிய நிதி மற்றும் பொரு­ளா­தார மோசடி தொடர்­பி­லான வழக்­கு­களை மட்­டுமே விசா­ரிக்க முடியும். இந்த வழக்கு அந்தப் பட்­டி­ய­லுக்குள் சேராது. இவ்­வ­ழக்கு சாதா­ரண மேல் நீதி­மன்றில் விசா­ரிக்­கப்­படல் வேண்டும். எனவே இவ்­வ­ழக்கை விசா­ரிக்க இந்த விஷேட மேல் நீதி­மன்­றுக்கு அதி­காரம் இல்லை’ என வாதிட்­டி­ருந்தார். இந்த வாதத்தை ஏனைய பிர­தி­வா­தி­களும் முன்­வைத்த நிலையில் அது தொடர்பில் பதில் வாதத்தை கடந்த ஜன­வரி 31 ஆம் திகதி சட்ட மா அதிபர் முன் வைத்தார்.

சட்­டமா அதிபர் சார்பில்  சிரேஷ்ட அரச சட்­ட­வாதி உதார கரு­ணா­ரத்ன, பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் துஷித் முத­லி­கே­யுடன் ஆஜ­ரான சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், இந்த மன்­றுக்கு முன்­வைக்­க­பப்டும் வழக்­கு­களை விசா­ரிக்­கவே பிர­தம நீதி­யரசர் இந்த மன்றை நிய­மித்­துள்ளார். அதனால் இங்கு முன்­வைக்­க­பப்டும் வழக்­கு­களை விசா­ரிக்­கா­ம­லி­ருக்க இம்­மன்­றுக்கு அதி­காரம் இல்லை.

இம்­மன்றில் முன்­வைக்கும் ஒரு வழக்கை மீளப்­பெற சட்­டமா அதி­ப­ருக்கு அதி­காரம் இல்லை. அதனைப் போன்றே மன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்காமலிருக்க இம்மன்றுக்கும் அதிகாரமில்லை.  நீதிமன்ற அமைப்பு திருத்தச் சட்டம் பிரகாரம் சில வழக்குகளை இம்மன்றினால் விசாரிக்க முடியாதெனப் பிரதிவாதிகள் தரப்பில் கூறப்பட்டாலும், பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டம் மற்றும் கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க இம்மன்றுக்கு அதிகாரம் உள்ளது’ என சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையிலேயே அது தொடர்பில் தீர்மானத்தை நேற்று அறிவித்த விஷேட மேல் நீதிமன்றம், கோத்தா உள்ளிட்ட பிரதிவாதிகளின் அடிப்படை ஆட்சேபனையை நிராகரித்து வழக்கை விசாரணைக்கு ஏற்றது. வழக்கானது எதிர்வரும் 22 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.