பலஸ்தீனர்களின் பிறப்பிடமாக காஸாவை நெதர்லாந்து அரசாங்கம் அங்கீகரிக்கவுள்ளது

0 569

இஸ்­ரேலின் உரு­வாக்­கத்­திற்குப் பின்னர் பிறந்த பலஸ்­தீ­னர்­களின் உத்­தி­யோ­க­பூர்வ பிறப்­பி­ட­மாக காஸா பள்­ளத்­தாக்­கி­னையும் கிழக்கு ஜெரூ­சலம் உள்­ளிட்ட ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மேற்குக் கரை­யையும் அங்­கீ­க­ரிக்­க­வுள்­ள­தாக நெதர்­லாந்து அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது.

பலஸ்­தீன தேசத்தை இது­வரை அங்­கீ­க­ரிக்­காத நெதர்­லாந்து, பிரித்­தா­னியப் பிர­க­டனம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக முடி­வ­டைந்த பலஸ்­தீன ஆள்­புலப் பிர­தே­சங்­களை பலஸ்­தீ­னர்­க­ளது உண்­மை­யான பிறப்­பி­ட­மாக அங்­கீ­க­ரிக்­க­வுள்­ளது. இந்த அறி­வித்தல் ஹேக்கில் வைத்து நெதர்­லாந்து இரா­ஜாங்க செய­லாளர் ரேமொண்ட் நொப்­ஸினால் வெளி­யி­டப்­பட்­டது.

கடந்த சனிக்­கி­ழமை உள்­துறை அமைச்சு வெளி­யிட்ட தக­வலில் காஸா பள்­ளத்­தாக்­கி­னையும் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மேற்குக் கரை­யையும் நெதர்­லாந்து சிவில் பதி­வேடு அங்­கீ­க­ரிக்கும் ஆள்­புலப் பிர­தே­சங்­களில் சேர்க்­கப்­போ­வ­தாக நொப்ஸ் தெரி­வித்­த­தாகக் குறிப்­பிட்­டது.

இந்தப் பிர­தே­சங்­களில் இஸ்­ரே­லுக்கு எவ்­வித இறை­மையும் கிடை­யாது. மற்றும் பலஸ்­தீ­னத்தை ஒரு தேச­மாக அங்­கீ­க­ரிக்க மறுப்­பது என்ற நிலைப்­பா­டு­க­ளுக்கு அமை­வா­கவே இந்த வகைப்­ப­டுத்தல் இருக்கும் எனவும் நொப்ஸ் தெரி­வித்­தள்ளார்.

இப்­பு­திய வகைப்­ப­டுத்தல் 1990 ஆம் ஆண்டுகளில் இஸ்­ரே­லுக்கும் பலஸ்­தீன விடு­தலை இயக்­கத்­திற்கும் இடையே மேற்­கொள்­ளப்­பட்ட ஒஸ்லோ சமா­தான உடன்­ப­டிக்­கையின் சரத்­துக்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த ஐக்­கிய நாடுகள் சபையின் தீர்­மா­னத்­தினைப் பிர­தி­ப­லிப்­ப­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

நெதர்­லாந்­தி­லுள்ள பலஸ்­தீ­னர்­க­ளுக்­கி­ருந்த பதிவுத் தெரி­வு­களில் ‘இஸ்ரேல்’ மற்றும் ‘தெரி­யாது’ எனக் குறிப்­பி­ட­வேண்­டி­யி­ருந்­தது. தமது பெயர்­களின் பின்னால் அவர்­க­ளது பிறப்­பிடம் இஸ்ரேல் எனக் குறிப்­பிட வேண்­டி­யி­ருந்­தது. அவ்­வாறு குறிப்­பி­டு­வ­தற்கு 2014 ஆம் ஆண்டு பலஸ்­தீ­னர்­களால் எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­ட­தை­ய­டுத்து ‘தெரி­யாது’ என்ற தெரிவு சேர்க்­கப்­பட்­டது.

இஸ்­ரேலில் பிறந்­தவர் என்­ப­தற்குப் பதி­லாக பலஸ்­தீ­னத்தில் பிறந்­த­வ­ரென தான் பதிவு செய்­யப்­பட வேண்டும் என பலஸ்­தீ­னத்தைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட நெதர்­லாந்து நாட்­ட­வரால் நெதர்­லாந்­திற்கு எதி­ராக ஐரோப்­பிய மனித உரிமை நீதி­மன்­றத்தில் வழக்குத் தொடுக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து இந்தத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­ட­தாக நெதர்­லாந்தின் உத்­தி­யோ­க­பூர்வ செய்தி நிறு­வ­ன­மான நொஸ் தெரி­வித்துள்­ளது.

குறைந்­தது 136 நாடு­களும் ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையும் பலஸ்தீனத்தை இறைமைமிக்க தேசமாக அங்கீகரித்துள்ளன. எனினும் ஐரோப்பிய யூனியனின் பெரும்பாலான நாடுகள் அவ்வாறு அங்கீகரிக்கவில்லை. அதற்குக் காரணம் அவ்வமைப்பு இஸ்ரேலுடன் செய்துகொண்டுள்ள சமாதான உடன்படிக்கையில் அது ஒரு நிபந்தனையாகக் காணப்படுகின்றமையாகும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.