புத்தளத்தில் மூன்று நாட்கள் கறுப்பு தினங்களாக பிரகடனம்

புத்தளம் மாவட்ட சர்வமத செயற்குழு அறிவிப்பு

0 603

புத்­தளம் அறு­வக்­காட்டில் குப்பை கொட்டும் திட்­டத்­திற்கு எதிர்ப்பு தெரி­விக்கும் வகையில் இந்த வாரம் மூன்று நாட்­களை புத்­த­ளத்தின் கறுப்பு நாட்­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்­து­வ­தாக புத்­தளம் மாவட்ட சர்­வ­மத செயற்­குழு அறி­வித்­துள்­ளது.

புத்­தளம் பெளத்த மத்­திய நிலையம், இந்து மகா சபை, கிறிஸ்­தவ சபை,  ஜம்­இய்­யத்துல்  உலமா, புத்­தளம் பெரிய பள்­ளி­வாசல் ஆகி­யன இணைந்தே எதிர்­வரும் புதன்­கி­ழமை (13), வியா­ழக்­கி­ழமை (14) மற்றும் வெள்­ளிக்­கி­ழமை (15) ஆகிய நாட்­களை கறுப்பு நாட்­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இதன் அடிப்­ப­டையில், பெப்­ர­வரி 13ஆம் திகதி புதன்­கி­ழமை புத்­த­ளத்­தி­லுள்ள அனைத்து வீடு­க­ளிலும், வாக­னங்­க­ளிலும் கறுப்புக் கொடி­யேற்றி எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­து­வ­துடன், அன்­றைய தினம் அரச அலு­வ­ல­கங்­க­ளுக்கு கட­மை­க­ளுக்­காக செல்லும் உத்­தி­யோ­கத்­தர்கள் அனை­வரும் கறுப்பு பட்­டி­ய­ணிந்து செல்ல வேண்­டு­மெனக் கேட்­டுள்­ளது.

அத்­துடன், பெப்­ர­வரி 14 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை  ஊரின் ஒவ்­வொரு ஆத்­மாவும் நோன்பு நோற்று, ஏக வல்ல இறை­வ­னிடம் பிரார்த்­திக்­கு­மாறும் கோரி­யுள்­ளது.

அத்­தோடு, அன்­றைய தினம் தோன்பு நோற்­கின்ற முஸ்­லிம்­க­ளுக்­காக கொழும்பு முகத்­தி­டலில் நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்வு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, பெப்­ர­வரி 15ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை புத்­த­ளத்­தி­லுள்ள அனைத்து வர்த்­தக நிலை­யங்­களும் பூட்­டப்­பட்டு பூரண ஹர்த்தால் அனுஷ்­டிப்­ப­துடன், பிற்­பகல் 1 மணிக்கு கொழும்பு முகத்­தி­டலில் நடை­பெ­ற­வுள்ள மாபெரும் மக்கள் எழுச்சி பேர­ணியில் அனை­வ­ரையும் கலந்­து­கொள்­ளு­மாறும் மேற்­படி புத்­தளம் மாவட்ட சர்வ மத செயற்­கு­ழு­வினர் அழைப்பு விடுத்­துள்­ளனர்.

இம்­மாதம் 15 ஆம் திகதி முதல் புத்­தளம் அறு­வக்­காட்டில் குப்பை கொட்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதால், அந்த திட்டத்தை கண்டித்தே இவ்வாறு மூவின மக்களும் ஒன்றினைந்து குறித்த பிரகடனத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.