முஸ்­லிம்­களின் கோரிக்­கை­க­ளுக்கு பிர­தமர் ரணில் இணக்கம்

0 677

நீண்­ட­கா­ல­மாகத் தீர்க்­கப்­ப­டா­துள்ள முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு பெற்­றுத்­த­ரு­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­காரம், மௌலவி ஆசி­ரியர் நிய­மனம், கொழும்பில் ஆண்கள் பாட­சா­லை­யொன்­றினை நிறுவுதல், யாழ்ப்­பா­ணத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு வீட­மைப்புத் திட்டம் ஒன்றை நிறுவுவதை எனும் கோரிக்­கைகள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் முன்­வைக்­கப்­பட்­டன.

நேற்று முன்­தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில், பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் பிர­தமர் ரணில் விக்­கி­ரம­சிங்­கவைச் சந்­தித்து இப்­பி­ரச்­சி­னை­களைத் தெளி­வு­ப­டுத்­தியதுடன் இவற்­றுக்குத் தீர்வு பெற்­றுத்­தருமாறும் வேண்­டிக்­கொண்­டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் பிர­தி­நி­தி­க­ளின் பிர­த­ம­ரு­ட­னான கலந்­து­ரை­யா­டலில் அமைச்­சர்­க­ளான கபீர் ஹா-ஷிம், ரிசாத் பதி­யுதீன் ஆகி­யோரும் கலந்து கொண்­டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் சார்பில் அதன் தலைவர் என்.எம்.அமீன், செய­லாளர் அஸ்கர் கான், உப­த­லைவர் ஹில்மி அஹமட், கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் ஆளுநர் சபைத் தலைவர் பௌஸுல் ஹமீட் ஆகியோர் பங்­கு­கொண்­டி­ருந்­தனர். பிர­த­மரின் செய­லா­ளரும் பேச்­சு­வார்த்­தையில் கலந்­து­கொண்­டி­ருந்தார்.

தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வாசல் பிரச்­சினை நீண்­ட­கா­ல­மாக இழுத்­த­டிக்­கப்­பட்டு வரு­வது பற்றி பிர­த­ம­ரிடம் விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டது. அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க ஏற்­க­னவே பள்­ளி­வா­சலை இட­மாற்றிக் கொள்­வ­தற்­காக 20 பேர்ச்சஸ் காணியை ஒதுக்­கி­யி­ருந்தும் அக்­காணி தற்­போது மறுக்­கப்­பட்டு வரு­வ­தாக பிர­த­ம­ரிடம் தெரி­விக்­கப்­பட்­ட­துடன் நிரந்­த­ரத்­தீர்வு பெற்­றுத்­த­ரு­மாறு கோரப்­பட்­டது.

மாத்­தளை அர­சாங்க அதி­ப­ரு­டனும், சம்­பந்­தப்­பட்ட ஏனைய தரப்­பி­ன­ரு­டனும் கலந்­து­ரை­யாடி தம்­புள்ளை பள்­ளி­வாசல் பிரச்­சி­னைக்கு விரைவில் தீர்­வு­பெற்றுத் தரு­வ­தாக பிர­தமர் உறு­தி­ய­ளித்தார்.

மௌலவி ஆசி­ரியர் நிய­ம­னமும் வழங்­கப்­ப­டாது நீண்­ட­கா­ல­மாக புறக்­க­ணிக்­கப்­பட்டு வரு­வது தொடர்­பிலும் பிர­த­ம­ரிடம் முறை­யி­டப்­பட்­டது. மௌலவி ஆசி­ரியர் நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­டு­மென தேர்­த­லின்­போது வாக்­கு­று­தி­ய­ளிக்­கப்­பட்­டமை பிர­த­ம­ருக்கு நினைவு கூரப்­பட்­டது. இது தொடர்பில் கல்வி அமைச்­ச­ருடன் கலந்­து­ரை­யாடி மௌலவி ஆசி­ரியர் நிய­ம­னங்­களை வழங்­கு­வ­தற்கு ஏற்­பாடு செய்­வ­தாக பிர­தமர் இதன்­போது உறு­தி­ய­ளித்தார்.

கொழும்பில் கல்வி கற்­ப­தற்கு தமிழ்­மொழி மூல பாட­சா­லைகள் பற்­றாக்­கு­றை­யாக இருப்­பதால் கொழும்பு தெற்கில் ஆண்­க­ளுக்­கான தமிழ் மொழி மூல பாட­சா­லை­யொன்றும், கொலன்­னா­வையில் தமிழ்­மொழி மூல பாட­சா­லை­யொன்றும் நிறு­வித்­த­ரு­மாறும் பிர­த­ம­ரிடம் கோரிக்கை விடுக்­கப்­பட்­டது. யாழ்ப்­பா­ணத்தில் முஸ்­லிம்­க­ளுக்­கான வீட­மைப்புத் திட்­ட­மொன்றின் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­திய அமைச்சர் ரிசாத் பதியுதீன் அங்கு முஸ்லிம்களுக்கென்று மாடி வீட்டுத்திட்டமொன்றினை நிர்மாணிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் படியும் அதற்கான காணியை ஒதுக்கித்தருமாறும் வேண்டுகோள் விடுத்தார். அத்தோடு முல்லைத்தீவில் வீடமைப்புத் திட்டமொன்றினையும் வேண்டினார். இக்கோரிக்கைகள் தொடர்பில் தனது கவனத்தைச் செலுத்துவதாக பிரதமர் உறுதியளித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.