முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம்: இறுதித் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு முஸ்லிம் எம்.பி.க்களிடம்

0 676

முஸ்லிம் விவாக வவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட குழு முன்­வைத்­துள்ள திருத்த சிபா­ரி­சு­களை ஆராய்ந்து இறுதித் தீர­்மா­னத்தை மேற்­கொள்­ளு­மாறு நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­கான இறுதித் தீர்­மா­னத்தை எட்டும் வகையில் அமைச்சர் தலதா அத்­து­கோ­ர­ளவின் தலை­மையில் பாரா­ளு­மன்றக் கட்­டடத் தொகு­தியில் நேற்று மாலை விஷேட கூட்­ட­மொன்று இடம்­பெற்­றது.

அக்­கூட்­டத்­திலே அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­க­ளுக்­கான இறுதித் தீர்­மா­னத்தை எட்டும் பொறுப்­பினை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கினார்.

நேற்­றைய கூட்­டத்தில் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்ட குழுவின் தலைவர் முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் மற்றும் குழுவின் உறுப்­பி­னர்­களும் கலந்து கொண்­டி­ருந்­தனர். குழுவின் உறுப்­பினர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா மற்றும் ஜம்­இய்­யத்துல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி உள்­ளிட்ட குழு­வி­னரும் கலந்து கொண்­டி­ருந்­தனர். முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா தலை­மை­யி­லான பிரி­வி­னரும் தயா­ரித்து வழங்­கி­யி­ருந்த இரு வேறு­பட்ட சிபா­ரிசு அறிக்­கைகள் கூட்­டத்தில் ஆரா­யப்­பட்­டன. இரு­த­ரப்பும் சில விட­யங்­களில் முரண்­பா­டான கருத்­துக்­களை அறிக்­கையில் தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இது தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் கருத்து தெரி­விக்­கையில், ‘அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள சட்­டத்தில் மேற்­கொள்ள வேண்­டிய திருத்­தங்கள் தொடர்பில் இறு­தித்­தீர்­மானம் எடுக்கும் பொறுப்­பினை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கே வழங்­கி­யுள்ளார்.

நாம் அமைச்­ச­ரிடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள இரு தரப்­பி­ன­ரதும் அறிக்­கையை ஆரா­ய­வுள்ளோம். முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா மற்றும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­ச­பையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி ஆகி­யோ­ரு­டனும் கலந்­து­டை­யா­டல்­களை நடத்­த­வுள்ளோம். முரண்­பா­டான கருத்­துக்­களில் நாம் இணக்­கப்­பாட்­டினை எட்ட வேண்­டி­யுள்­ளது. இந்த பொறுப்­பு­களை விரைவில் முன்­னெ­டுப்போம் என்றார். கூட்­டத்தில் கலந்­து­கொண்­டி­ருந்த அகில் இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி கருத்து தெரி­விக்­கையில், இன்­றைய (நேற்று) அமைச்சர் தலதா அத்­து­கோ­ர­ளவின் தலை­மை­யி­லான கூட்டம் சுமு­க­மாக இடம்­பெற்­றது. முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் முதற்­கட்­ட­மாக நிர்­வாக கட்­ட­மைப்­பிலே திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. அதற்­கான பரிந்­து­ரை­களை ஆரா­யு­மாறு அமைச்சர் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை கோரி­யுள்ளார். முதற்­கட்­ட­மாக காதி நீதி­மன்ற முறைமை காதி நீதி­ப­தி­களின் கொடுப்­ப­னவு அவர்­க­ளுக்­கான பயிற்­சிகள் தொடர்பில் தீர்­மா­னங்­களை மேற்­கொள்­ளப்­படும். அதன் பின்பு கட்டம் கட்­ட­மாக ஏனைய விட­யங்கள் தொடர்பில் தீர்­மானம் எடுக்­கப்­படும் என்றார்.

இது தொடர்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா கருத்து தெரி­விக்­கையில், இன்­றைய (நேற்று) கூட்டம் முன்­னேற்­ற­க­ர­மாக அமைந்­தி­ருந்­தது. எமது சட்­டத்­தி­ருத்த சிபா­ரிசு அறிக்­கைகள் தொடர்பில் ஆராய்ந்து முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தங்­க­ளது ஆலோசனைகளை நீதி­ய­ர­ச­ரிடம் வழங்­கு­வார்கள். தேவை­யேற்­படின் எங்­க­ளு­டனும் கலந்­து­ரை­யா­டு­வார்கள் என்றார்.

இது தொடர்பில் முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்­தி­ருத்த சிபா­ரிசு குழுவின் தலைவர் முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் கருத்து தெரி­விக்­கையில்,

சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்வதற்கான அறிக்கையை தயாரிக்கும்போது முஸ்லிம் சமூகத்தின் கருத்துகள் பெறப்பட்டன. அதுபோன்று தற்போது அறிக்கை மொழி பெயர்க்கப்பட்டு முஸ்லிம் சமூகத்தின் கருத்துக்கள் பெறப்பட வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தேன். எமது அறிக்கைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளை அமைச்சர் கோரியுள்ளார். அதன் பின்பு அவர் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.