திருப்­பு­மு­னையை அடைந்­துள்ள காஷ்மீர் போராட்டம்

0 672
  • சஜ்ஜாத் சஹிகாத்

இந்­திய ஆக்­கி­ர­மிப்பு காஷ்­மீரில் மக்கள் மீதான கடு­மை­யான தந்­தி­ரோ­பாய நட­வ­டிக்­கைகள் தொடர்ந்தும் அரங்­கே­றி­னாலும், சுதந்­தி­ரத்­திற்­கான போராட்டம் காஷ்­மீ­ரி­களின் மத்­தியில் மேலும் தீவி­ர­ம­டைந்­துள்­ளது. இந்­தியா காஷ்­மீ­ரினை இழந்­து­விட்­டதா? என்ற கேள்­விக்­கு­றி­யுடன் இத்­த­ரு­ணத்தில் காஷ்மீர் போராட்டம் ஓர் திருப்­பு­மு­னை­யினை அடைந்­துள்­ளது என்­பதில் எவ்­வித ஐய­மு­மில்லை. இந்­திய ஆக்­கி­ர­மிப்பு காஷ்­மீரில் இடம்­பெறும் விடு­த­லைக்­கான தீவிர போராட்­டத்­தி­னாலும், அரச தீவி­ர­வா­தத்­தி­னாலும் ஆளும் பா.ஜ.க. அர­சாங்கம் உள்­நாடு மற்றும் சர்­வ­தே­சத்தில் பாரிய அழுத்­தங்­களை எதிர்­கொண்­டுள்­ளது.

“இந்­தியா காஷ்­மீ­ரினை இழந்து கொண்­டி­ருக்­கின்­றதா?” என்ற தலைப்பின் கீழ் பி.பி.சியின் பதிப்­பிலே பிர­சு­ர­மான கட்­டு­ரை­யா­னது காஷ்­மீ­ரிலே இந்­திய எதிர்ப்பு விடு­தலைப் போராட்­டத்தின் உச்­சத்­தினை விவ­ரிக்­கின்­றது. காஷ்­மீ­ரிலே “கற்­க­ளுடன் மிரட்­டு­கின்ற காஷ்­மீரின் இளம் பெண்கள்” இந்­தி­யாவின் காஷ்மீர் பிரச்­சி­னை­யிலே புதிய அச்­சு­றுத்தல் என தி வோஷிங்டன் போஸ்ட் பதிப்­பிலும் பிர­சு­ர­மா­கி­யி­ருந்­தது. “காஷ்­மீரின் கொடூரம் மற்றும் கோழைத்­தனம்” என நியூயோர்க் டைம்ஸ் பதிப்பில் பிர­சு­ர­மான ஆசி­ரியர் தலை­யங்­கத்­தி­லேயும் காஷ்­மீரின் நிகழ்­கால நிலை­மைகள் குறித்து விளக்­கப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன், காஷ்­மீ­ரிலே இடம்­பெறும் வன்­மு­றை­க­ளுக்­கெ­தி­ராக ஒரு புது­வி­த­மான எதிர்ப்புப் போராட்டம் எழுச்சி பெற்­றி­ருக்­கின்­றது என ‘தி அட்­லாந்திக்’ அவ­தா­னித்­தி­ருந்­தது.

இந்­திய புல­னாய்வு அமைப்­பான ரோவின் முன்னாள் தலைவர் ஏ.எஸ். துலத், தனிமை மற்றும் இளை­ஞர்­களின் கோபத்­தினால் இளம் காஷ்­மீ­ரிகள் கட்­டுப்­பாட்டை இழந்­துள்­ள­துடன் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் கீழ் ஆயு­த­மில்­லாத போராட்­ட­மா­னது மிகத் தீவி­ர­ம­டைந்­துள்­ள­தாக உணர்ந்­தி­ருந்தார். மேலும்  “நம்­பிக்­கை­யற்ற ஓர் உணர்வு காணப்­ப­டு­கின்­றது. அவர்கள் இறப்­ப­தற்கு அஞ்­ச­வில்லை. பொது­மக்கள், மாண­வர்கள் மற்றும் பெண் பிள்­ளைகள் வீதியில் நிற்­கின்­றனர். இது முன்­னெப்­போதும் இடம்­பெ­ற­வில்லை” என அவர் வருந்­தி­யி­ருந்தார். சந்தோஷ் பாத்­தியா என்ற இந்­திய ஊட­க­வி­ய­லாளர் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடிக்கு எழு­திய “ எழு­கின்ற காஷ்மீர்” என்ற திறந்த மட­லிலே “காஷ்மீர் என்ற பிர­தேசம் எங்­க­ளுடன் காணப்­பட்­டாலும், காஷ்மீர் மக்கள் எங்­க­ளுடன் இல்லை. ஒவ்­வொரு மரத்­திலும், தொலை­பேசிக் கோபு­ரங்­க­ளிலும் பாகிஸ்­தானின் தேசி­யக்­கொடி அசைந்து கொண்­டி­ருக்­கின்­றது” என விளக்­கி­யி­ருந்தார்.

காஷ்மீர் மீதான புது­டில்­லியின் கொள்­கைகள் “ஓர் குழப்பம் நிறைந்த தொகுதி” என வர்­ணிக்­கின்ற பா.ஜ.க.வின் முன்னாள் சிரேஷ்ட தலைவர் யஷ்­வந்த் சிங், இந்­தியா உணர்­வு­பூர்­வ­மாக காஷ்மீர் பள்­ளத்­தாக்கின் மக்­க­ளினை இழந்­து­விட்­டது என சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். “உணர்­வு­பூர்­வ­மாக நாம் காஷ்மீர் மக்­களை இழந்­து­விட்டோம். எம்­மீது அவர்­க­ளுக்கு நம்­பிக்­கை­யில்லை என்­ப­தனை நீங்கள் அறிய காஷ்­மீ­ருக்குச் செல்ல வேண்டும். மோடி மற்றும் இந்­திய மாநிலக் கோட்­பாட்டில் அல்­லது காஷ்மீர் மக்­களை கொடூ­ர­மான முறையில் அடக்­கு­வ­திலே நம்­பிக்கை கொண்டு செயற்­பட்டு வரு­கின்­றது” என அவர் ஒளி­வு­ம­றை­வின்றி ஏற்­றுக்­கொண்டார்.

1949 இலே பொது­வாக்­கெ­டுப்பின் மூலம் காஷ்­மீரில் சுய- நிர்­ணய உரி­மை­யினை வழங்­கு­வது தொடர்­பான தீர்­மா­னத்­தினை ஐ.நா.விற்கு நினை­வூட்­டு­மு­க­மாக காஷ்­மீ­ரி­யர்­களும், பாகிஸ்­தா­னி­யர்­களும் ஒவ்­வொரு வரு­டமும் ஜன­வரி 5 ஆம் திக­தி­யினை இந்­தியா மற்றும் பாகிஸ்­தா­னிற்­கான ஐ.நா.வின் காஷ்மீர் தீர்­மா­னத்தின் தின­மாக அவ­தா­னிக்­கின்­றனர் என அவர் மேலும் சுட்­டிக்­காட்­டினார்.

2016 ஆகஸ்ட் 27 ‘தி வயர்’ என்ற சஞ்­சி­கை­யிலே பிர­சு­ர­மான அறிக்­கை­யிலே இந்­திய புல­னாய்வு அமைப்­பான ரோவின் முன்னாள் தலைவர் ஏ.எஸ். துலத், காஷ்மீர் பிரச்­சி­னையில் முக்­கி­ய­மான அங்­க­மாகத் திகழும் பாகிஸ்­தானின் வகி­பா­கத்­துடன் ஹுரியத் தலை­வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடாத்­து­வ­தற்­கான தேவை இந்­திய அர­சாங்­கத்­திற்கு காணப்­ப­டு­கின்­றது என்று கூறி­யி­ருந்தார். காஷ்­மீ­ரி­களின் எழுச்­சியின் பின்­பு­லத்தில் நூறு வீதம் சுதே­சி­களே காணப்­ப­டு­கின்­றனர் எனவும் கூறி­யி­ருந்தார். காஷ்­மீ­ரிலே இந்­திய அர­சாங்­கத்தின் அதீத  தலை­யீட்­டிற்­கான கண்­டனம் இதன்­மூலம் புலப்­ப­டு­கின்­றது.

அதே­நேரம், 2016 ஆகஸ்ட் 16 முன்னாள் பாகிஸ்­தா­னிய பிர­தமர் எழு­திய கடி­தத்­திற்கு பதி­ல­ளிக்கும் வகையில் ஐ. நா.வின் செய­லாளர் நாயகம் பான் கீ மூன், காஷ்­மீரில் இடம்­பெறும் கொலை­களை வெறுத்­த­துடன் பேச்­சு­வார்த்­தையின் மூலம் காஷ்மீர் சர்ச்­சை­யினை தீர்வு காணு­மாறு இந்­தியா மற்றும் பாகிஸ்­தானை வலி­யு­றுத்­தினார்.

அத்­துடன், பாகிஸ்­தா­னிற்கு விஜயம் மேற்­கொண்ட துருக்கி ஜனா­தி­பதி ரிசெப் தயிப் ஏர்­டொகன், 2016 நவம்பர் 17 ஆம் திகதி முன்னாள் பாகிஸ்­தா­னிய பிர­த­ம­ருடன் இணைந்து மேற்­கொண்ட கூட்டுப் பத்­தி­ரி­கை­யாளர் மாநாட்­டிலே, இந்­தியா மற்றும் பாகிஸ்தான் எல்­லை­யிலே பெரு­கி­வரும் பதற்­றங்கள் மற்றும் காஷ்­மீரில் இடம்­பெறும் அட்­டூ­ழி­யங்கள் புறக்­க­ணிக்­கப்­பட முடி­யாது எனவும் காஷ்மீர் பிரச்­சி­னைக்கு துரி­த­மான ஒரு தீர்வு வேண்டும் என அவர் வலி­யு­றுத்­தினார். துருக்கி அர­சாங்கம் எப்­பொ­ழுதும் காஷ்மீர் மக்­க­ளுக்­கான ஆத­ர­வினை வழங்கும் என துருக்­கிய ஜனா­தி­பதி அழுத்திக் கூறி­யி­ருந்தார்.

முன்­ன­தாக பாகிஸ்­தா­னிற்கு வருகை தந்­தி­ருந்த இஸ்­லா­மிய மாநாட்டு அமைப்பின் செய­லாளர் நாயகம் அயத் அமீன் மதானி, கஷ்­மீ­ரிலே இடம்­பெறும் சட்­ட­வி­ரோத கொலைகள் குறித்து கடு­மை­யான கவலை வெளி­யிட்­டி­ருந்தார். மேலும் காஷ்மீர் பிரச்­சி­னை­யிலே இஸ்­லா­மிய மாநாட்டு அமைப்­பா­னது பாகிஸ்­தா­னிற்கு ஆத­ர­வ­ளிக்­கு­மெனக் கூறி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

மோச­ம­டைந்­து­வரும் காஷ்­மீரின் நிலை­மைகள் குறித்து மேலைத்­தேய அர­சி­யல்­வா­தி­களும் ஊட­கங்­களும் சந்­தே­கத்­திற்­கி­ட­மின்றி மிகுந்த கரி­ச­னை­யினை கொண்­டுள்­ளனர். உதா­ர­ண­மாக, 2016 செப்­டெம்பர் 19 இல் பாகிஸ்­தா­னிற்கு விஜயம் மேற்­கொண்ட இத்­தா­லியின் பாது­காப்பு அமைச்சர் திரு­மதி ரொபேர்தா பினோடி, தங்­க­ளது நாடு அமை­தி­யான முறையில் போராடும் காஷ்­மீ­ரிகள் மீதான படை நட­வ­டிக்­கைகள் மற்றும் கடு­மை­யான ஆயு­தங்­களின் பயன்­பாட்­டினை எதிர்க்­கின்­றது எனவும் அதனை மென்­மேலும் அனு­ம­திக்க முடி­யாது எனவும் கூறி­யி­ருந்தார். இத்­தாலி, இந்­திய ஆக்­கி­ர­மிப்பு காஷ்­மீரில் இடம்­பெ­று­கின்ற வன்­முறை நட­வ­டிக்­கை­களை சர்­வ­தேச சமூ­கத்­திற்கு விளக்கும் எனவும் பாது­காப்பு அமைச்சர் கூறி­யி­ருந்தார்.

2018 செப்­டெம்பர் 29இல் ஐக்­கிய நாடுகள் அமைப்பின் 73ஆவது பொதுச்­சபை கூட்­டத்­திலே உரை­நி­கழ்த்­திய பாகிஸ்­தா­னிய வெளி­யு­றவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேசி,

“ அயல்­நாடு சமா­தானப் பேச்­சு­வார்த்­தை­யினை மீண்டும் தொடங்­கு­வ­தற்­கான பாகிஸ்­தானின் அழைப்­பினை வலு­வில்­லாத கார­ணங்­களை கூறி நிரா­க­ரித்­தது. நாங்கள் இந்­தி­யா­வுடன் அனைத்­து­வி­த­மான பிரச்­சி­னைகள் தொடர்­பாக கௌர­வத்­துடன் உரை­யா­டு­வ­தற்குத் தயா­ரா­க­வி­ருக்­கின்றோம். காஷ்மீர் பிரச்­சினை பிராந்­திய ஸ்திரத்­தன்­மைக்கு மிகப்­பா­ரிய தடை­யாகும். கடந்த ஏழு தசாப்­தங்­க­ளாக இந்­தியப் படைகள் காஷ்மீர் மக்­களின் மீது அட்­டூ­ழி­யங்­களை நிகழ்த்­தி­வ­ரு­கின்­றன. இந்­தியா, பாகிஸ்­தானின் பொறு­மை­யினை பரி­சோ­திக்க கூடாது. இந்­தி­யாவின் ஆக்­கி­ர­மிப்­பிற்கு நாங்கள் பதி­ல­ளிப்போம். ஐக்­கிய நாடு­களின் புதிய அறிக்கை ஆக்­கி­ர­மிப்பு காஷ்­மீரில் இடம்­பெறும் அட்­டூ­ழி­யங்­களை அம்­ப­ல­மாக்­கி­யுள்­ளது. இரு­நா­டு­க­ளி­னதும் வெளி­யு­றவு அமைச்­சர்­களின் சந்­திப்­பா­னது பேச்­சு­வார்த்­தைக்­கான மிகச்­சி­றந்த சந்­தர்ப்­ப­மாகும். இருப்­பினும், இந்­திய அர­சாங்கம் பேச்­சு­வார்த்­தையின் பொழுது அர­சி­ய­லினை தேர்ந்­தெ­டுத்­தி­ருந்­தது. எல்­லைப்­ப­கு­தியில் துர­திஷ்­ட­வ­ச­மான தவ­றுகள் இடம்­பெ­று­மானால் இந்­தியா பாகிஸ்­தானின் பதி­ல­டி­களை தாங்கிக் கொள்­ள­வேண்டும்” என குறிப்­பிட்­டமை கவ­னிக்­கத்­தக்­கது.

மனித உரி­மை­க­ளுக்­கான ஐக்­கிய நாடுகள் சபையின் உயர் ஆணை­யா­ள­ரினால் 2018 ஜூன் 14 இல் வெளி­யி­டப்­பட்ட அறிக்கை, ஆக்­கி­ர­மிப்பு காஷ்­மீரில் இடம்­பெற்ற அட்­டூ­ழி­யங்­களை “காஷ்­மீரின் நிலை­மைகள்” என்ற தலைப்பின் கீழ் வெளி­யிட்­டி­ருந்­தது. அவ்­வ­றிக்­கையில் பின்­வ­ரு­மாறு குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. “2016 ஜுலை மாதத்­தி­லி­ருந்து மனித உரி­மை­க­ளுக்­கான ஐக்­கிய நாடுகள் சபையின் உயர் ஆணை­யாளர் அலு­வ­லகம் பல சந்­தர்ப்­பங்­களில் இந்­தியா மற்றும் பாகிஸ்­தா­னிய அர­சாங்­கங்­களை காஷ்­மீரின் மனித உரிமை நிலை­மை­களை ஆய்வு செய்­வ­தற்­கான தடை­க­ளற்ற அனு­ம­தி­யினை கோரி­யி­ருந்­தது. இருப்­பினும், அக்­கோ­ரிக்கை இந்­தி­யா­வினால் நிரா­க­ரிக்­கப்­பட்­டது. ஆனால் பாகிஸ்தான் அதற்­கான அனு­ம­தி­யினை வழங்­கி­யது. இந்­திய ஆக்­கி­ர­மிப்பு காஷ்­மீ­ரிற்குள் ஐ.நா.வின் குழு செல்­வ­தற்கு நிபந்­த­னை­க­ளற்ற அனு­மதி மறுக்­கப்­பட்­டதன் பின்னர் தொலை கண்­கா­ணிப்பு முறை­யினை பயன்­ப­டுத்தி மனித உரிமை நிலை­மைகள் தொடர்­பான அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டது. சுதந்­தி­ர­மான நிபு­ணர்­க­ளினால் தயா­ரிக்­கப்­பட்ட அவ்­வ­றிக்­கை­யா­னது பல­ரது புரு­வங்­க­ளையும் உயர்த்­தி­யது. 2016 ஜுலை தொடக்கம் 2018 ஏப்ரல் வரையில் இந்­திய ஆக்­கி­ர­மிப்பு காஷ்­மீரின் மனித உரிமை நிலை­மைகள் குறித்தே அவ்­வ­றிக்கை கவனம் செலுத்­தி­யி­ருந்­தது. இக்­கா­லப்­ப­கு­தியில் மனித உரி­மை­க­ளுக்­கான உயர் ஆணை­யா­ள­ருக்கு ஆக்­கி­ர­மிப்பு காஷ்­மீரில் இடம்­பெற்ற கடு­மை­யான மனித உரிமை மீறல்கள் குறித்த பல குற்­றச்­சாட்­டுக்கள் கிடைக்­கப்­பெற்­றன.”

இந்­திய அர­சாங்­க­மா­னது காஷ்மீர் உட்­பட பல்­வேறு பிராந்­தி­யங்­களில் மக்­களின் குறைகள் மற்றும் சுதந்­திரப் போராட்­டத்­திற்­கான தீர்­வினை வழங்­கு­வ­த­னை­விட்டு போராட்­டத்தில் ஈடு­ப­டு­கின்ற இயக்­கங்­களை நசுக்க ஆயுதப் படை­களை பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றது. ஆகவே இந்­தி­யாவின் நம்­பத்­த­காத கிளர்ச்சி எதிர்ப்பு நட­வ­டிக்­கைகள் படு­தோல்­வி­ய­டைந்­து­விட்­டது என்­பது தெளி­வாக தெரி­கின்­றது.

பார­தீய ஜனதா கட்­சி­யினை பிர­தி­நி­தித்­துவம் செய்த முன்னாள் வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சர் ஜஸ்வந்த் சிங் பாகிஸ்­தானின் முஹம்மத் அலி ஜின்னாவினை புகழ்ந்தமைக்காகவும், இந்திய முஸ்லிம்களின் வேதனைகளை தனது “ஜின்னா: இந்தியா, பகிர்வு” என்ற நூலிலே குறிப்பிட்டமைக்காகவும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். “இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் இந்தியாவிற்கு விசுவாசமானவர், இந்திய முஸ்லிம்களின் கண்களில் வேதனையை பாருங்கள்” என சிறுபான்மையினர் மீதான பா.ஜ.க.வின் நடவடிக்கைகளைக் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்தால் இந்தியா மூன்றாவது பாகப்பிரிவினையினை சந்திக்க நேரிடும் என அவர் எச்சரித்தார்.

உண்மை யாதெனில், இந்தியாவிற்கு இரு தெரிவுகள் காணப்படுகின்றன. முதலாவது இந்தியாவில் காணப்படும் விடுதலைப் போராட்ட இயக்கங்கள் மற்றும் அவர்களை ஒடுக்குவதற்கான இராணுவப் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு கொள்ளல். இரண்டாவது யதார்த்த அணுகுமுறையினை பா.ஜ.க.வின் முன்னாள் அமைச்சர் ஜஷ்வந்த் சிங் அவரது நுலிலே சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் சுதந்திரத்திற்கான போராட்டம் தீவிரமடைந்துள்ளமை பாரிய திருப்பு முனையாகும். அத்துடன் இரக்கமற்ற படைகளால் காஷ்மீரிகளின் போராட்டத்தினை அடக்குவதிலே இந்தியா தோற்றுவிடும் என்பதனை எவ்வித ஐயமுமில்லாமல் கூறமுடியும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.