ஞானசார தேரருக்கு விடுதலையளிக்குக

ஜனாதிபதிக்கு புத்தசாசன அமைச்சர் கடிதம்

0 566

நீதிமன்றினை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு புத்தசாசனம் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். குறிப்பிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஞானசாரதேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு மகாநாயக்க தேரர்கள், தியவதன நிலமே பிரதீப் நிலங்கதேவ மற்றும் இந்து சம்மேளனத்தின் தலைவர் என்.டி. அருள்காந்த் ஆகியோர் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்கள். அந்தக் கடிதங்களின் பிரதிகளை இத்துடன் உங்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன். எனவே இந்தக் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு வேண்டிக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.