உடன்பாட்டை மீறும் வகையில் வடக்கு சிரியாவில் துருக்கியின் பிரசன்னம் – டமஸ்கஸ் கண்டனம்

0 790

சிரியா மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் 1988 ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்பாட்டினை மீறும் வகையில் சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கிய இராணுவத்தின் பிரசன்னம் காணப்படுவதாக சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் தெரிவித்துள்ளார்.

சிரியா மேற்கொண்ட எட்டு வருட யுத்தத்தின் மூலம் எட்டப்பட்ட அதானா உடன்பாட்டை மீறுவதாக அங்காரா மீது குற்றம் சுமத்துவதாக டமஸ்கஸிலுள்ள வெளிநாட்டு அமைச்சு கடந்த சனிக்கிழமை தெரிவித்தது.

2011 ஆம் ஆண்டிலிருந்து துருக்கிய அரசாங்கம் இந்த உடன்பாட்டை மீறியது, தொடர்ந்தும் மீறி வருகின்றது. பயங்கரவாதத்திற்கு துருக்கி ஆதரவினையும் வழங்கி வருகிறது என அமைச்சு வட்டாரங்களை மேற்கோள்காட்டி சானா செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.

துருக்கி தனது நாட்டுடன் தொடர்புபட்ட பயங்கரவாத அமைப்புக்கள் அல்லது நேரடியாக தனது படையினர் மூலம் சிரியாவின் ஆள்புலப்பகுதிகளை ஆக்கிரமிப்பதன் ஊடாக உடன்படிக்கையினை மீறுவதாகவும் அது தெரிவித்துள்ளது.

எனினும் துருக்கிய ஜனாதிபதி தைய்யிப் அர்துகான் ‘அதானா உடன்பாடு தனது அண்டை நாட்டில் படையினரை பணியில் ஈடுபடுத்துவதற்கான உரிமையினை வழங்கியுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

சிரியாவின் வடக்கின் ஒரு பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள கிளர்சிப் பிரிவினருக்கு ஆதரவளித்து வரும் துருக்கி அஸாத்தின் நட்பு நாடுகளான ரஷ்யா மற்றும் ஈரானுடன் கடந்த 2017 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டிற்கு அமைவாக கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டிலுள்ள இட்லிப் மாகாணத்தின் கண்காணிப்பு சாவடியின் ஒரு அங்கமாகவும் இருக்கின்றது.

அமெரிக்க ஆதரவுடனான சிரிய குர்திஸ் போராளிகளை வடக்கு சிரியாவிலிருந்து விரட்டியடிப்பதற்காக புதிய தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பல மாதங்களாக அச்சுறுத்தல் விடுத்து வந்தது.

2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இரு தடவைகள் சிரியாவினுள் ஊடுருவியுள்ளது. அது தொடக்கம் குறித்த ஆள்புலப் பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் அதன் படையினரும் சிரிய ஆதரவு படையினரும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.