ஐக்கிய நாடுகள் சபையும் பலஸ்தீன அகதிகளும்

0 1,230
  • தமிழில்: எம்.ஐ.அப்துல் நஸார்
    22.01.2019 டெய்லி மிரர் ஆசிரியர் தலையங்கம்

இரண்டாம் உலக மகா யுத்­தத்தின் அழி­வு­க­ளை­ய­டுத்து உலகம் முழு­வ­திலும் வாழ்ந்த மக்­களால் சமா­தா­னமும் அமை­தியும் எதிர்­பார்க்­கப்­பட்ட காலத்தில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ரூஸ்­வெல்­டினால் உரு­வாக்­கப்­பட்ட சொற்­ப­தமே ‘ஐக்­கிய நாடுகள் சபை’ என்ற பெய­ராகும். நாம் இப்­போது அறிந்து வைத்­தி­ருப்­பதைப் போன்று ஐக்­கிய நாடுகள் சபை என்­பது சர்­வ­தேச சமா­தானம் மற்றும் பாது­காப்­பினை பேணிக் காப்­பதை ஆரம்பப் பணி­யா­கவும் நாடு­க­ளி­டையே நட்­பு­றவை விருத்தி செய்­வதை இலக்­கா­கவும் கொண்டு செயற்­படும் அர­சாங்­கங்­க­ளுக்­கி­டை­யே­யான அமைப்­பாகும்.

மிகவும் துர­திஷ்­ட­வ­ச­மாக, சர்­வ­தேச ரீதி­யா­கவோ அல்­லது வேறு வித­மா­கவோ அவ்­வ­மைப்பு மேற்­கொண்ட முத­லா­வது செயற்­பாடு வர­லாற்றில் மிக நீண்­ட­கால முரண்­பாட்டை தோற்­று­வித்த செய­லாக மாறி­யுள்­ளது. ஐக்­கிய நாடுகள் சபை 1948 ஆம் அண்டு மே மாதம் 14 ஆம் திகதி உண்­மை­யான பலஸ்தீன் எதுவோ அந்த இடத்தில் இஸ்ரேல் என்ற நாட்டை உரு­வாக்­கி­யது. அது மட்­டு­மல்­லாது முழு­மை­யான அங்­கத்­துவ நாடா­கவும் ஏற்­றுக்­கொண்­டது. பலஸ்­தீன மக்­க­ளி­னதும், அவர்­க­ளது அரபு அண்டை நாடு­க­ளி­னதும் ஆக்­ரோ­ஷ­மான எதிர்ப்­புக்கு மத்­தி­யி­லேயே இந்த அநி­யாயம் அரங்­கேற்­றப்­பட்­டது.

இந்த ஒற்றைச் செயற்­பாட்டின் மூலம் சர்­வ­தேச சமா­தா­னத்தைப் பேணிக் காப்­ப­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட அந்த அமைப்பு சர்­வ­தேச சமா­தா­னத்­திற்கு முட்­டுக்­கட்­டை­யாக அமை­யக்­கூ­டிய பல தொடர் நிகழ்­வு­களை செயற்­ப­டுத்­தி­ய­தோடு இரு நாடு­க­ளுக்­கி­டை­யேயும், பல நாடுகள் தமக்­குள்ளும் நல்­லு­றவை விருத்தி செய்து கொள்­வ­தற்கு தடை­யா­கவும் காணப்­ப­டு­கின்­றது.

இதில் ஆச்­ச­ரியம் தரு­கின்ற விடயம் என்­ன­வென்றால், உலக அமைப்பில் முழு­மை­யான அங்­கத்­துவ நாடாக இஸ்­ரேலை ஏற்­றுக்­கொண்ட ஐக்­கிய நாடுகள் சபை, இஸ்ரேல் எங்கு உரு­வாக்­கப்­பட்­டதோ அந்தப் பலஸ்­தீ­னத்தை இன்று வரை முழு­மை­யான அங்­கத்­துவ நாடாக அங்­கீ­க­ரிக்­க­வில்லை. பலஸ்­தீ­னத்­திற்கு வாக்­க­ளிக்கும் அதி­கா­ர­மில்­லாத வெறு­மனே பார்­வை­யாளர் அந்­தஸ்தை மாத்­தி­ரமே இந்த உலகம் வழங்­கி­யுள்­ளது. அதற்குக் காரணம் இஸ்­ரேலின் செயற்­பா­டு­களே என்­பதும் அதற்­காக பிராந்­தி­யத்தில் இடம்­பெறும் நிகழ்­வு­களை சர்­வ­தேசம் கேள்­வி­யுற்று அவற்றை நம்­பு­கின்­றது என்­பதும் அனை­வரும் அறிந்த விட­ய­மாகும்.

ஐக்­கிய நாடுகள் சபையின் 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாத அறிக்­கையின் பிரா­கரம் இஸ்­ரேலின் தாக்­கு­தல்கள் கார­ண­மாக முகாம்­களில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள 1,603,018 அக­திகள் உள்­ள­டங்­க­லாக மொத்­த­மாக பதிவு செய்­யப்­பட்­டுள்ள அக­தி­களின் எண்­ணிக்கை 5,149,742 ஆகும். இது இஸ்ரேல் என்ற தேசம் உரு­வாக்­கப்­பட்­டதன் விளை­வாகும்.

ஐக்­கிய நாடுகள் சபை தொடர்­பான மற்­று­மொரு ஆச்­ச­ரியம் தரும் விடயம் என்­ன­வென்றால், அவ்­வ­மைப்பு யுத்­தத்தை இல்­லா­தொ­ழித்து சமா­தா­னத்தை பாது­காப்­ப­தற்­காக உரு­வாக்­கப்­பட்­டது, எனினும் பாது­காப்புச் சபையின் நிரந்­தர அங்­கத்­துவ நாடு­க­ளான அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா, பிரான்ஸ் , ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் உலகின் மிகப் பாரிய ஆயுத ஏற்­று­ம­தி­யா­ளர்கள். இன்­னு­மொரு வித­மாகக் கூறு­வோ­மானால், அங்­கத்­துவ நாடுகள் மீது கட்­டுப்­ப­டுத்தும் தீர்­மா­னங்கள் விதிப்­ப­தற்கு அதி­காரம் கொண்ட அங்­கத்­துவ நாடுகள் உலகில் முரண்­பா­டு­களில் சிக்­குண்ட நாடு­க­ளுக்கு ஆயு­தங்­களை ஏற்­று­மதி செய்­வதன் மூலம் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் முரண்­பா­டு­களை மேலும் தீவி­ர­ம­டையச் செய்­கின்­றன.

இன்று இஸ்ரேல் உலகின் பெரும் ஆயுத ஏற்­று­மதி நாடு­களுள் ஒன்­றாகக் காணப்­ப­டு­கின்­றது. உலகின் ஆயுத ஏற்­று­மதி செய்யும் முதல் பத்து நாடு­களுள் எட்­டா­வது இடத்தில் இஸ்ரேல் காணப்­ப­டு­வ­தாக ஸ்டொக்ஹோம் சர்­வ­தேச சமா­தான ஆய்வு நிறு­வகம் தெரி­வித்­துள்­ளது. உலகில் ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்ற ஆயு­தங்­களில் 2.9 வீதம் இஸ்­ரேலின் ஆயு­தங்­க­ளாகும். 2008 – 2012 வரை­யான ஆண்­டு­க­ளுடன் ஒப்­பி­டும்­போது அதன் ஏற்­று­மதி 55 வீதத்தால் அதி­க­ரித்­துள்­ளது. உலகின் அதி­கூ­டிய தலா­வீத ஆயுத ஏற்­று­மதி நாடாகக் காணப்­படும் இஸ்ரேல், அந் நாட்டு நிறு­வ­னங்­களின் ஆயுத சந்­தைப்­ப­டுத்­தலின் போது அவை உண்­மை­யான தாக்­கு­தல்­களில் பரீட்­சிக்­கப்­பட்­டவை எனத் தெரி­வித்தே விற்­பனை செய்­கின்­றது.

இஸ்­ரே­லினால் 2014 ஆம் ஆண்டு நடத்­தப்­பட்ட ‘விளிம்­பினைப் பாது­காப்­ப­தற்­கான நட­வ­டிக்கை’ என்ற பெயரிலான தாக்­கு­தலில் 2,100 இற்கும் அதி­க­மான பலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­பட்­டனர். கொல்­லப்­பட்­ட­வர்­களுள் 500 இற்கும் மேற்­பட்ட சிறு­வர்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர். அதே­வேளை இஸ்ரேல் ஆளில்லா விமானம் தொடர்­பான வரு­டாந்த மாநாட்­டையும் நடத்­தி­யது என ஊட­க­வி­ய­லாளர் ரானியா ஹாலெக்­கினை மேற்­கோள்­காட்டி எம்.பி.என். செய்­தியில் மைக்கோ பேலெட் எழு­தி­யுள்ளார்.

டெல் அவிவில் அமைந்­தி­ருந்த அமெ­ரிக்கத் தூத­ர­கத்தின் பங்­கு­ட­மை­யுடன் ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்த மேற்­படி ‘இஸ்­ரேலின் ஆளில்லா செயன்­மு­றைமை – 2014’ என்ற பெய­ரி­லான இம்­மா­நாடு, இஸ்­ரே­லிய ஆயுத உற்­பத்­தி­யா­ளர்­க­ளுக்கு தமது உற்­பத்­தி­களை காட்­சிப்­ப­டுத்­து­வ­தற்கு சந்­தர்ப்­பத்தை ஏற்­ப­டுத்திக் கொடுத்­தி­ருந்­தது. அவற்றுள் பல அதே ஆண்டின் முற்­ப­கு­தியில் கஸா பள்­ளத்­தாக்கில் பலஸ்­தீ­னர்கள் மீது பரீட்­சிக்­கப்­பட்­ட­வை­யாகும். G-NIUS என்ற ஆளில்லா விமானம் தொடர்­பான கட்­டு­ரை­யொன்­றின்­படி குறித்த G-NIUS  யுத்­தத்தில் பரீட்­சிக்­கப்­பட்டு நிரூ­பிக்­கப்­பட்­டது என அம் மாநாட்டின் ஏற்­பாட்­டா­ளர்­களுள் ஒருவர் குறிப்­பிட்­ட­தற்­கான காரணம் காஸா மீதான தாக்­கு­த­லின்­போது அதனைப் பயன்­ப­டுத்தி தாக்­குதல் மேற்­கொண்­ட­மை­யாகும். 2014 கோடை காலத்­தின்­போது ஆளில்லா ஆயுதம் தரித்த விமானம் காஸாவில் உப­யோ­கிக்­கப்­பட்­டது. அதுவே தூரத்­தி­லி­ருந்து இயக்கக் கூடிய ஆளில்லா ஆயுதம் தரித்த விமானம் தாக்­கு­த­லுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட முத­லா­வது சந்­தர்ப்­ப­மாகும்.

விளிம்­பினைப் பாது­காப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைக்கு முதன்­மு­றை­யாக செயற்­பாட்டு ரீதி­யாக பயன்­ப­டுத்­தப்­பட்ட மற்­று­மொரு வகை ஆளில்லா விமானம் Elbit’s Hermes – 900  என்­ப­தாகும். இது முன்­னேற்­ற­க­ர­மான வான்­வழித் தாக்­குதல் மற்றும் கண்­கா­ணிப்பு ஆளில்லா விமா­ன­மாகும். 2008–2009 இல் காஸாவில் இடம்­பெற்ற தாக்­கு­தலின் போது இஸ்­ரே­லிய ஆளில்லா விமா­னங்கள் கண்­மூ­டித்­த­ன­மாக பலஸ்­தீனப் பொது­மக்கள் மீது தாக்­குதல் நடத்­தி­ய­தாக மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­ப­கத்­தினால் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யொன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வெளி­நாட்டு ஆயுதக் கொள்­வ­னவு நிறு­வ­னங்­க­ளுக்­காக சோதனைப் பொருட்­க­ளாக பலஸ்­தீன மக்­களை எவ்­வாறு இஸ்ரேல் பயன்­ப­டுத்­து­கின்­றது என்­ப­தற்கு எலக்­ரோனிக் இந்­தி­பாதா சிறந்த உதா­ர­ண­மாகும். கிழக்கு ஜெரூ­ச­லத்தில் அமெ­ரிக்­கர்கள் மென்­பஞ்­சினால் அமைந்த துப்­பாக்கி ரவைகள் வழங்­கப்­பட்­டன என ஜெரூ­ச­லத்தை தள­மாகக் கொண்ட மனித உரி­மைகள் சட்­டத்­த­ர­ணியும் செயற்­பாட்­டா­ள­ரு­மான இடெயி மக் தெரிவித்தார்.

கறுப்பு மென்பஞ்சினால் அமைந்த துப்பாக்கி ரவைகள் இஸ்ரேலுக்கு கண்ணீர்ப் புகைக் குண்டுகளை விநியோகிக்கும் பென்சில்வேனியாவைத் தளமாகக் கொண்ட கெம்பைன் டெக்டிகல் சிஸ்டம் என்ற நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டதாகும். அந்த நிறுவனத்தின் விளம்பரச் சிற்றேட்டில் ‘எச்சரிக்கை’ எனக் குறிப்பிட்டு ‘தலை, கழுத்து, தொண்டை, இதயம் முள்ளந்தண்டில் சுடப்பட்டால் உயிராபத்து அல்லது பாரதூரமான காயம் ஏற்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் சர்வதேச வர்த்தகத்திற்காகவா பலஸ்தீனர்கள் மீது அவற்றைப் பரீட்சிக்கின்றன? என டெல் அவிவிலுள்ள தேசிய பாதுகாப்புக் கற்கைகளுக்கான நிறுவகத்தில் பணியாற்றும் ஓய்வு பெற்ற பிரிகேடியர் ஜெனரலான ஷ்லமோ புரெம் ‘ஆம், நிச்சயமாக’ என உறுதிபடத் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.