சட்டக் கல்வியும் குற்றச் செயல்களும்

0 715

நாட்டில் அண்­மைக்­கா­ல­மாக குற்­றச்­செ­யல்கள் அதி­க­ரித்துச் செல்­வதைக் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. கோடிக்­க­ணக்­கான ரூபாய் பெறு­மதி வாய்ந்த போதைப் பொருட்கள் கைப்­பற்­றப்­பட்­ட­மையும், போதைப் பொரு­ளுடன் தொடர்­பு­பட்ட பாதாள உலக கோஷ்டி குழுக்­க­ளுக்­கி­டை­யி­லான கொலைச் சம்­ப­வங்­களும் இதனை உறு­திப்­ப­டுத்­து­கின்­றன.

சட்ட விரோத ஆயு­தங்கள் இந்தக் குற்றச் செயல்­க­ளுக்குப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. நாட­ளா­விய ரீதியில் கடந்த வருடம் 1064 சட்ட விரோத துப்­பாக்­கிகள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­தா­கவும் இவற்­றுடன் சம்­பந்­தப்­பட்ட 685 சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் தர­வுகள் தெரி­விக்­கின்­றன. இந்த எண்­ணிக்கை 2017 ஆம் ஆண்­டுடன் ஒப்­பி­டும்­போது மிகவும் அதி­க­மாகும். 2017 ஆம் ஆண்டு 781 சட்­ட­வி­ரோத ஆயு­தங்­களே மீட்­கப்­பட்­டுள்­ளன.

பொலிஸார் திடீர் சிறப்பு நட­வ­டிக்­கைகள் மூலமே சட்­ட­வி­ரோத ஆயு­தங்­களைக் கைப்­பற்­றி­யுள்­ளனர். இவ்­வா­றான திடீர் சிறப்பு நட­வ­டிக்­கை­க­ளினால் மாத்­திரம் குற்றச் செயல்­களைத் தடுத்து விட­மு­டி­யாது.

சட்ட விரோத செயல்­களின் பின்­ன­ணியில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் வர்த்­த­கத்தின் பின்­ன­ணியில் அர­சி­யல்­வா­தி­களின் தலை­யீடு இருப்­ப­தாக குற்றம் சுமத்­தப்­பட்டு வரு­கி­றது. இவ்­வா­றான ஒரு சூழ்­நி­லையில் அர­சாங்கம் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு நாட்டின் சட்­டங்­களை படிப்­பிப்­ப­தற்கு நட­வ­டிக்­கைகள் மேற்­கொண்டுள்ளது. சட்டக் கல்வி ஒரு பாட­மாக பாட­சா­லை­களில் கற்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. இதற்­கான அங்­கீ­கா­ரத்தை அமைச்­ச­ரவை வழங்­கி­யுள்­ளது.

சட்­டத்தை ஒரு பாட­மாக போதிப்­பதன் மூலம் சட்­டங்­களைப் பேணும், சட்­டங்­களை மதிக்கும் ஒரு சமு­தா­யத்தை உரு­வாக்க முடியும் என நீதி­ய­மைச்சர் தெரி­வித்­துள்ள கருத்­துகள் வர­வேற்­கத்­தக்­க­தாகும். அவ்­வா­றான ஒரு சமு­தா­யத்தை உரு­வாக்­கு­வ­தற்கு தசாப்த காலம் தேவைப்­பட்­டாலும் இது சிறந்­ததொரு திட்­ட­மாகும்.

இதே­வேளை பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு சட்­டத்தை ஒரு பாட­மாகக் கற்­பிப்­பதன் மூலம் மாத்­திரம் நாட்டில் நாளாந்தம் அதி­க­ரித்துச் செல்லும் குற்­றச்­செ­யல்­களை இல்­லாமற் செய்ய முடி­யுமா? என்­ப­தையும் சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது.

மக்கள் நாட்டின் சட்­டங்­களைப் பற்றி அறிந்து கொள்­ளா­மல் குற்றச் செயல்கள் கார­ண­மாக கிடைக்கும் தண்­ட­னைகள் பற்றி அறி­யா­மலா குற்றச் செயல்­களில் ஈடு­ப­டு­கின்­றார்கள். வீட்டை உடைத்து கள­வெ­டுக்கும் திரு­டர்­க­ளுக்கு அவர்கள் புரி­வது குற்றச் செயல் என்று தெரி­யாதா? உண்­மையில் குற்றச் செயல் என்று தெரிந்து கொண்­டுதான் அவர்கள் இதனை செய்­கி­றார்கள். இந்­நி­லையில் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு நாட்டின் சட்­டத்தைப் பற்றி கற்­பிப்­பதால் மாத்­திரம் குற்றச் செயல்­களை ஒழித்து விட முடி­யாது.

நாட்டில் இடம்­பெற்ற பாரிய நிதி மோச­டி­யாகக் கரு­தப்­படும் மத்­திய வங்கி பிணை­முறி ஊழல். இந்த ஊழலில் பேபர்சுவல் டிர­சரீஸ் நிறு­வ­னத்தின் ஊடாக பல பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பயன்­களைப் பெற்றுக் கொண்­டார்கள். இவர்­களில் அநேகர் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணிகள். இது குற்றச் செயல்கள் என அவர்­க­ளுக்கு தெரி­ய­வில்­லையா?

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ கூட ஒரு சட்­டத்­த­ர­ணியே, சட்­டத்தை படித்­தி­ருந்த அவர் தனது ஆட்­சிக்­கா­லத்தில் பல சந்­தர்ப்­பங்­களில் சட்­டத்தை மீறி செயற்­பட்­டி­ருக்­கிறார்.

நாட்டில் அமு­லி­லுள்ள சட்டம் எண்­ணற்ற சந்­தர்ப்­பங்­களில் அமை­தி­யாக இருந்­தி­ருக்­கி­றது. பல கொலை வழக்­கு­களில் தீர்ப்­புகள் கூட தசாப்­தங்கள் கடந்து வழங்­கப்­பட்­டுள்­ளன.

இவ்வாறான நிலையில் பாடசாலைகளில் சட்டத்தை ஒரு பாடமாகப் படிப்பிப்பதனால் மாத்திரம் குற்றச் செயல்களை ஒழித்து விட முடியாது. குற்றச் செயல்களின் பின்னணியில் இருக்கும் சட்டம் படித்த அரசியல் வாதிகள் குற்றச் செயல்களை ஒழிப்பதற்கு முதலில் களமிறங்க வேண்டும். அவர்கள் தம்மை நாட்டுப்பற்றுள்ளவர்களாகவும் சமூக நலன் பேணுபவர்களாகவும் தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.