தாக்குதல்களை தீவிரப்படுத்துவோம்: ஹமாஸ் எச்சரிக்கை

0 723

தடை­க­ளுக்­குள்­ளா­கி­யுள்ள காஸா பள்­ளத்­தாக்கில் தற்­போது இடம்­பெறும் தாக்­கு­தல்­க­ளுக்கு டெல்­அவிவ் அர­சாங்­கமே கார­ண­மென குற்றம் சுமத்­தி­யுள்ள பலஸ்­தீன இயக்­க­மான ஹமாஸ், ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட கரை­யோரப் பகு­தி­களில் தொடர்ந்தும் தாக்­கு­தல்கள் நடத்­தப்­ப­டு­மானால் ஹமாஸ் தனது தாக்­கு­தல்­களைத் தீவி­ரப்­ப­டுத்­து­மென அவ்­வ­மைப்பு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

அமை­தி­யான முறையில் ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­து­வோ­ருக்கு எதி­ராக முட்­டாள்­த­ன­மாக தாக்­குதல் நடத்­துதல், துப்­பாக்கிப் பிர­யோகம் செய்தல் மற்றும் எதிர்ப்­புகள் மேற்­கொள்ளும் இடங்­களில் குண்டுத் தாக்­கு­தல்கள் நடத்­துதல் இவை தொட­ரு­மானால், அதற்­கான பின் விளை­வு­களை இஸ்­ரேலின் ஆக்­கி­ர­மிப்பு இரா­ணுவம் எதிர்­கொள்ள வேண்­டு­மென கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை வெளி­யிட்ட அறிக்­கையில் ஹமாஸ் அமைப்பின் பேச்­சாளர் பௌஸி பர்­ஹெளம் தெரி­வித்­துள்ளார்.

காஸாவில் இந்த நிலை­யினை மேலும் அதி­க­ரிப்­பது நெருப்­புடன் விளை­யா­டு­வ­தற்கு சம­மா­ன­தாகும். இஸ்­ரே­லுக்கும் அதன் மக்­க­ளுக்கும் பாது­காப்­பினை அது பெற்­றுத்­த­ராது எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

முற்­று­கைக்­குள்­ளா­கி­யுள்ள காஸா பள்­ளத்­தாக்கின் பல இடங்கள் மீது கடந்த சனிக்­கி­ழமை இஸ்­ரே­லிய இரா­ணுவ விமா­னங்கள் மேற்­கொண்ட தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து இந்த அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இஸ்­ரே­லிய யுத்த விமா­னங்கள் காஸா நகரின் கிழக்குப் பகு­தி­யி­லுள்ள ஹமா­ஸுக்கு சொந்­த­மான இரா­ணுவத் தளத்தின் மீது குறைந்­தது ஒரு ஏவு­கணைத் தாக்­கு­தலை நடத்­தி­ய­தாக பலஸ்­தீன மஆன் செய்தி முக­வ­ரகம் தெரி­வித்­துள்­ளது.

வடக்­கு காஸா பள்­ளத்­தாக்கில் அமைந்­துள்ள பெய்த் லாஹியா மற்றும் முற்­று­கைக்­குள்­ளா­கி­யுள்ள கான் யுனுஸ் நக­ரி­லுள்ள மற்­று­மொரு இடம் என்­பன இதன்­போது இலக்கு வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

இலக்கு வைக்­கப்­பட்ட இடங்­களில் இஸ்­ரே­லினால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­க­ளினால் தீப்­பி­ளம்­புகள் ஏற்­பட்­டன. எனினும் உயி­ரி­ழப்­புக்கள் தொடர்பில் எவ்­வித தக­வல்­களும் கிடைக்­க­வில்லை.

பொது­மக்­க­ளையே பிர­தான இலக்­காக வைத்து காஸா பள்­ளத்­தாக்கில் இஸ்­ரே­லிய இரா­ணுவம் அடிக்­கடி குண்டுத் தாக்­கு­தல்­களை மேற்­கொள்­கின்­றது. இஸ்ரேலிய அரசாங்கம் காஸாவிலுள்ள 1.8 மில்லியன் மக்களின் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கான உரிமை, பொருத்தமான சம்பளத்துடனான தொழில், போதிய சுகாதார மற்றும் கல்வி போன்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.