அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட்ட மைத்திரி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடின் ஆதரவளியோம்

பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம திட்டவட்டமாக தெரிவிப்பு

0 551

அர­சி­ய­ல­மைப்­புக்கு எதி­ராக செயற்­பட்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஜனா­தி­பதி தேர்­தலில்  வேட்­பா­ள­ராக நிய­மிக்க ஆத­ர­வ­ளிக்கப் போவ­தில்­லை­யென ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குமார வெல்­கம தெரி­வித்தார்.

எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை வேட்­பா­ள­ராக நிய­மிக்க பொது­ஜன பெர­முன ஆத­ர­வ­ளிப்­பது தொடர்­பாக கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்­பாக அவர் தொடர்ந்து தெரி­விக்­கையில்,

ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் அனை­வரும் தங்கள் கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கின்­றனர். என்னை பொறுத்­த­வ­ரையில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட முடியும். 19ஆவது திருத்­தத்தில் அவ­ருக்குப் போட்­டி­யிட முடி­யா­தென்று எந்த தடையும் இல்லை. அதே­போன்று ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷ வேட்­பு­மனு தாக்கல் செய்தால் அதனை நிரா­க­ரிக்­கப்­போ­வ­தில்லை என தேர்­தல்கள் ஆணை­யா­ளரும் தெரி­வித்­தி­ருக்­கின்றார். அதனால் மஹிந்த ராஜபக் ஷவே எனது தெரி­வாகும்.

அத்­துடன் பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சியில் இருப்­பதில் எமக்கு எந்தப் பிரச்­சி­னையும் இல்லை. எதிர்க்­கட்­சியில் இருந்­து­கொண்டு அர­சாங்­கத்தின் பிழை­யான வேலைத்­திட்­டங்­களை விமர்­சித்­துக்­கொண்டு நாங்கள் முன்­னுக்­கு­செல்வோம்.

இன்று நாடு அழி­வின்பால் சென்று கொண்­டி­ருக்­கின்­றது. அந்த அழி­வுக்கு ஆரம்ப கார­ண­மாக இருந்­தது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இணைந்து மேற்­கொண்ட தேசிய அர­சாங்­க­மாகும். நாடு சீர­ழிந்­த­பின்னர் பிர­தமர் மீது மாத்­திரம் குற்­றம்­சாட்டி ஜனா­தி­பதி தப்­பித்­துக்­கொள்ள முயற்­சிக்­கின்றார்.

அத்­துடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த ஒக்­டோபர் 26ஆம் திகதி மேற்­கொண்ட நட­வ­டிக்­கையால் அர­சியல் ரீதியில் நாடு மேலும் சீர­ழிந்­தது.  பது­ளையில் இருப்­ப­வர்தான் மைத்­திரி -– மஹிந்த உற­வுக்கு தர­கர்­வேலை பார்த்தார். பின்னர்  மஹிந்த ராஜபக் ஷவையும் அவரே இல்­லா­ம­லாக்­கினார். இவர்­கள்தான் மஹிந்த ராஜபக் ஷவுக்கு தேவை­யற்ற கதை­களை கூறி அவரை இந்த நிலைக்கு தள்­ளி­விட்­டனர். இவர்கள் யார் என்­பது மக்­க­ளுக்குத் தெரியும்.

மேலும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  அர­சி­ய­ல­மைப்­பையும் தவ­றாகப் பயன்­ப­டுத்­தி­யுள்ளார். நான்­கரை வரு­டங்­க­ளுக்கு முன்னர் பாரா­ளு­மன்­றத்தை கலைக்கும் அதி­காரம் தனக்­கில்லை என்­பதை தெரிந்­து­கொண்டே அதனை செய்தார். இவ்­வாறு தீர்­மா­னங்­களை எடுக்கும் ஒரு­வ­ரை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மிக்க என்னால் ஆத­ர­வ­ளிக்க முடி­யாது. அதனை நான் எதிர்க்­கின்றேன் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.