வட – கிழக்கு இணைப்பு எமது தீர்மானம் அல்ல

இனப்பிரச்சினையை தீர்க்க இறுதியான சந்தர்ப்பம் இதுவே என்கிறது ஐ.தே.க.

0 627

அர­சி­ய­ல­மைப்பு செயற்­பா­டு­களில்  இது­வரை தமிழ் தரப்பின் ஒத்­து­ழைப்பு வழங்­கப்­ப­டாத நிலையில் முதல் தட­வை­யாக புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தில் தமிழ் அர­சியல் தலை­மைகள் ஈடு­ப­டு­கின்­றன. இந்த சந்­தர்ப்­பத்தை தவ­ற­விட்டால் இனி எப்­போதும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு கிடைக்­காது. எனினும், சமஷ்­டியோ, வடக்கு கிழக்கு இணைப்போ எமது தீர்­மா­ன­மல்ல என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் அமைச்­சரும் பாரா­ளு­மன்ற சபை முதல்­வ­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் குறித்து அர­சியல் கட்­சிகள் கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கின்ற நிலையில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் நிலைப்­பா­டு மற்றும் அடுத்­த­கட்ட நகர்­வுகள் குறித்து கருத்து தெரி­விக்கும் போதே அமைச்சர்  லக் ஷ்மன் கிரி­யெல்ல இதனைக் குறிப்­பிட்டார்.

இது­கு­றித்து அவர் மேலும் கூறு­கையில்,

நாட்டில் அனை­வரும்  இன்று புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்துப் பேசு­கின்­றனர். புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்து பல்­வேறு கருத்­துக்கள் நில­வு­கின்­றன. எனினும் ஒரு தரப்­பினர் இதனை தவ­றான வகை­யி­லேயே சித்­த­ரித்து வரு­கின்­றனர்.  எமது நாட்டில் இரண்டு தட­வை அர­சி­ய­ல­மைப்­புகள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. இந்த இரண்டு அர­சி­ய­ல­மைப்­பு­களை உரு­வாக்கும் நேரத்தில் எந்­த­வொரு தமிழ் கட்­சி­களும் அர­சி­ய­ல­மைப்­பிற்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­வில்லை.

பண்­டா­ர­நா­யக்க அம்­மையார் உரு­வாக்­கிய போதும் தமிழர் தரப்பு இணங்­க­வில்லை, பின்னர் ஜே.ஆர். புதிய அர­சியலமைப்­பினை உரு­வாக்­கிய போதும் அதற்கும் தமிழ்ர் அர­சியல் தலை­மைகள் இணக்கம் தெரி­விக்­க­வில்லை. இரண்டு சந்­தர்ப்­பங்­க­ளிலும் அவர்கள் எதிர்ப்­பையே முன்­வைத்­தனர். எனினும், இப்­போது புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்றை உரு­வாக்க நாம் எடுக்கும் முயற்­சி­க­ளுக்கு  முதல்  தட­வை­யாக தமிழ் கட்­சி­களின் முழு­மை­யான ஆத­ரவு கிடைத்­துள்­ளது. புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான யோச­னை­களை முன்­வைத்­த­போது பிர­தான தமிழ் கட்­சி­களும் தமது முழு­மை­யான ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கி­யுள்­ளன. இது வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த சம்­ப­வ­மாகும்.

புதிய அர­சி­ய­ல­மைப்பில்  சமஷ்டி என்ற பேச்­சு­வார்த்­தையோ வடக்கு, கிழக்கு இணைப்பு என்­ற­தற்­கான பேச்­சு­வார்த்­தையோ ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால்  முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இப்­போ­துள்ள மாகா­ண­சபை முறை­மையை பலப்­ப­டுத்­து­வது எப்­படி  என்ற  பேச்­சு­வார்த்­தையை மட்­டுமே நாம் முன்­னெ­டுத்தோம். இது­கு­றித்து சகல தரப்­பு­டனும் நாம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளோம். சில விட­யப்­ப­ரப்­பு­களில் மத்­திய அர­சாங்­கமும் தலை­யிடும். அதேபோல் மாகாண சபை­களும் கையாளும் தன்­மைகள் உள்­ளன. இவற்றை கையாள்­வது எவ்­வாறு என்­பது குறித்து ஆராய்ந்து வரு­கின்றோம். அதேபோல் ஒற்­றை­யாட்சி என்ற பதம் குறித்து சகல தரப்­பு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளோம். இதில் முக்­கி­ய­மாக ஒற்­றை­யாட்­சிக்குள் அதி­காரப் பர­வ­லாக்கல் என்ற விட­யத்­திற்கு தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு இணக்கம் தெரி­வித்­துள்­ளது. இலங்கை அர­சியல் வர­லாற்றில் முதல் தடவையாக  இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இப்போது நாம் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பொன்றை முன்வைக்கவில்லை. யோசனை யொன்றை  மட்டுமே முன்வைத் துள்ளோம். இதில் சகல கட்சிகளின் யோசனைகளும் உள்ளன. இதுகுறித்து அடுத்த கட்டமாக ஆராயவேண்டியது மட்டுமே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.