சிரிய அர­சாங்­கத்­துடன் எந்த உறவும் கிடை­யாது; கட்டார் திட்­ட­வட்டம்

0 527

சிரிய அர­சாங்­கத்­துடன் சுமுக உற­வினை ஏற்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக நல்­லெண்ண சமிக்­ஞை­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கோ அல்­லது டமஸ்­கஸில் கட்டார் தூத­ர­கத்தைத் திறப்­ப­தற்கோ எந்த ஒரு அவ­சி­யமும் இல்­லை­யென கட்டார் வெளி­நாட்­ட­மைச்சர் தெரி­வித்தார்.

கடந்த திங்­கட்­கி­ழமை ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் பேசிய கட்டார் வெளி­நாட்­ட­மைச்சர் ஷெய்க் மொஹம்மட் பின் அப்­துல்­ரஹ்மான் அல் தானி, அரபு லீக்கில் சிரி­யாவின் அங்­கத்­துவம் வழங்­கு­வ­தற்கு எதி­ராகத் தொடர்ந்தும் கட்டார் ஆட்­சே­பனை தெரி­வித்து வரு­கின்­றது எனவும் தெரி­வித்தார்.

தற்­போது எட்டு ஆண்­டு­கால யுத்­த­மாக மாறி­யுள்ள சிரிய அர­சாங்­கத்தின் வன்­மு­றை­யு­ட­னான பதில் நட­வ­டிக்­கைக்கு எதி­ராக கடந்த 2011 ஆம் ஆண்டு அரபு லீக்­கி­லி­ருந்து சிரியா இடை­நி­றுத்­தப்­பட்­டது.

சிரியா, அரபு லீக்­கி­லி­ருந்து இடை நிறுத்­தப்­ப­டு­வ­தற்கு எந்தக் கார­ணங்­களின் அடிப்­ப­டையில் கட்டார் ஆத­ர­வ­ளித்­ததோ, அதே கார­ணங்கள் இன்னும் அங்கே காணப்­ப­டு­கின்­றன. நாம் அவற்றில் எவ்­வித முன்­னேற்­ற­க­ர­மான விட­யங்­க­ளையும் காண­வில்லை எனவும் அல் தானி தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி பஷர் அல்-­அ­சாத்­திற்கு எதி­ரான கிளர்ச்­சிக்­கா­ரர்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கி­ய­வர்கள் உள்­ளிட்ட சில நாடுகள் அவரும் அவ­ரது நேச நாடு­களும் வெற்­றி­க­ர­மான முன்­னேற்­றத்தைக் கண்­டுள்ள நிலையில் அவ­ருடன் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள விரும்­பு­கின்­றன.

கடந்த டிசம்பர் மாதம் ஐக்­கிய அரபு அமீ­ரகம் டமஸ்­கஸில் தனது தூத­ர­கத்தைத் திறந்­தது. பிராந்­தி­யத்தில் எதி­ரி­யாகப் பார்க்­கப்­பட்ட ஜனா­தி­பதி அஸாத்­து­ட­னான இரா­ஜ­தந்­திரத் தொடர்­பு­களை மேம்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கான நகர்­வாக இது பார்க்­கப்­ப­டு­கின்­றது எனினும் அவ­ரது படை­க­ளுக்கு எதி­ராக சண்­டை­யிட்ட கிளர்ச்­சிக்­கா­ரர்­க­ளுக்கு அது முன்னர் ஆத­ரவு வழங்­கி­யி­ருந்­தது.

தூத­ரகம் மீளத் திறக்­கப்­ப­டு­வதன் நோக்கம் சிரி­யா­வு­ட­னான உற­வினை சுமுக நிலைக்குக் கொண்டு வரு­வதும் அரபு, சிரிய விவ­கா­ரங்­களில் பிராந்­தியத் தலை­யீ­டுகள் இடம்­பெறும் ஆபத்தை தடுப்­ப­து­மாகும் என ஐக்­கிய அரபு அமீ­ரகம் தெரி­வித்­த­தாக சவூ­திக்குச் சொந்­த­மான அல்-­அ­ரே­பியா தொலைக்­காட்சி அலை­வ­ரிசை தெரி­வித்­தி­ருந்­தது.

ஈரானும் துருக்­கியும் ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் எதிர்­நிலை நாடு­க­ளாகும், அவற்றின் படைகள் சிரி­யாவில் உள்­ளன. மோதலில் எதி­ரெதிர்த் தரப்­பி­ன­ருக்கு அவை ஆத­ர­வ­ளித்து வரு­கின்­றன.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.