அரச ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் அதிகரிப்பு

2500 முதல் 10 ஆயிரம் வரை கூடும் என்கிறது நிதி அமைச்சு

0 564

அரச ஊழி­யர்­களின்  அடிப்­படைச்  சம்­ப­ளத்தை  இந்த மாதத்­தி­லி­ருந்து 2500 ரூபா­வுக்கும்  10 ஆயிரம் ரூபா­வுக்கும்  இடையில் அதி­க­ரிப்­ப­தற்கு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்ளப்பட்­டுள்­ள­தாக நிதி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இத­ன­டிப்­ப­டையில்  அரச சேவை­யி­லுள்ள ஆரம்ப தர ஊழி­யர்­களின் அடிப்­படைச் சம்­பளம்  2500 ரூபா­வாலும்  உயர் பத­வி­யி­லுள்ள  ஊழி­யர்­களின்  அடிப்­படைச் சம்­பளம் 10 ஆயிரம் ரூபா­வாலும்  அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக நிதி­ய­மைச்சு குறிப்­பிட்­டுள்­ளது.

அர­சாங்கம் 2015 ஆம் ஆண்டு  அரச ஊழி­யர்­க­ளுக்கு சம்­பள  உயர்­வாக 10 ஆயிரம்  ரூபா­வினை வழங்­கி­ய­துடன் அந்தக் கொடுப்­ப­ன­வினை 2016 முதல் 2020  ஆம் ஆண்டு வரையி லான காலப்­ப­கு­திக்குள் அடிப்­ப­டைச்­சம்­ப­ளத்­துடன் இணைப்­ப­தற்குத்  தீர்­மா­னித்­தி­ருந்­தது.

இந்தத் தீர்­மா­னத்­திற்­க­மை­வாக அரச ஊழி­யர்­களின் அடிப்­படைச் சம்­பளம்  2019 ஜன­வரி  மாதத்­தி­லி­ருந்து 2500 ரூபா முதல் 10 ஆயிரம்  ரூபா­வ­ரையில்  அதி­க­ரிக்­கப்­படவுள்­ளது.  அரச ஊழி­யர்­களின்  அடிப்­படைச்  சம்­பளம் இறுதிக் கட்­ட­மாக 2020 ஆம்  ஆண்­டிலும்  அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது என  நிதி­ய­மைச்சு  தெரி­வித்­துள்­ளது.

2015 ஆம் ஆண்­டுடன்  ஒப்­பிடும் போது அரச ஊாழி­யர்­களின் அடிப்­படைச் சம்­பளம் தற்­போது   நூற்­றுக்கு 85 வீத­மாக  அதி­க­ரித்­துள்­ளது.

2015  ஆம் ஆண்டில் ஆரம்­ப­தர அரச ஊழி­யர்­களின் அடிப்­படைச் சம்­பளம் 11730 ரூபா­வாக  இருந்­தது.  இது இந்த வருடம்  21,745 ரூபா­வாக  அதி­க­ரித்­துள்­ளது எனவும்  நிதி­ய­மைச்சு தெரி­வித்­துள்­ளது.

மேலும் உயர் பதவி வகிக்கும் அரச ஊழி­யர்­களின்  அடிப்­படைச் சம்பளம்  2015 ஆம் ஆண்டுடன்  ஒப்பிடும் போது தற்போது  50 ஆயிரம்  ரூபாவாக  அதிகரித்துள்ள தாகவும்  நிதியமைச்சு வெளியிட்டுள்ள  அறிக்கையில்  தெரிவித்துள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.