ஒருவிடயத்தை பூரணமாக விளங்கியபின் அடுத்தகட்ட விடயத்துக்கு செல்வேன்

0 923

உயர்தர பெறுபேறுகளின்படி உயிரியல் விஞ்ஞான பிரிவில் தேசியமட்டத்தில் மூன்றாமிடம் பெற்ற மாத்தளையைச் சேர்ந்த ஹக்கீம் கரீம்.

அறி­வார்ந்த சூழலில் வளர்ந்த பிள்­ளைதான் ஹக்கீம். பொறி­யி­ய­லா­ள­ரான மொஹமத் ரிஸ்மி மற்றும் வைத்­தி­ய­ரான நிஹாரா ரிஸ்­மியின் மூத்த புதல்­வ­ராவார். இவ­ருக்கு இளைய தம்­பி­யொ­ரு­வரும் தங்­கை­யொ­ரு­வரும் இருக்­கின்­றனர்.

முதலாம் தரம் முதல் மாத்­தளை ஸாஹிரா கல்­லூ­ரி­யி­லேயே படித்­தி­ருக்­கிறார். தரம் 5 வரை தமிழ் மொழி­யிலும் உயர்­தரம் வரை ஆங்­கில மொழி­யிலும் கற்றல் செயற்­பாட்டில் ஈடு­பட்­டி­ருக்­கிறார்.

டென்னிஸ் விளை­யாட்டில் ஆர்­வம்­கொண்ட ஹக்கீம் படிப்பில் அக்­கறை செலுத்­து­வ­தற்­காக அதனை கொஞ்சம் தள்ளி வைத்­தி­ருக்­கிறார். குறிப்­பாக சாதா­ரண தரப் பரீட்­சைக்­காக இரண்டு வரு­டங்­களும் உயர்­தரப் பரீட்­சைக்­காக இரண்டு வரு­டங்­களும் டென்னிஸ் விளை­யாட்டில் ஈடு­ப­ட­வில்லை. வீட்டில் மூத்த பிள்ளை மிகவும் பக்­கு­வ­மா­னவர். ஏனெனில் தாயும் தந்­தையும் அலு­வல்­க­ளுக்கு சென்­றாலும் தன்னை திட்­ட­மிட்டுத் தானே வழி­ந­டத்தும் ஆற்­றல்­கொண்­டவர். படி என்று கட்­ட­ளை­யிட்டு படிக்­காது தேவை என்று உணர்ந்து படித்­த­தனால் தேசிய மட்­டத்தில் சாதனை படைத்­தி­ருக்­கிறார்.

ஒரு பொறி­யி­ய­லாளர், ஒரு வைத்­தியர் வச­தி­யான பெற்­றோர்­களே. ஆனால் வீட்டில் டீ.வி. இல்லை. இதன் பின்­புலம் வீட்டில் கற்­ற­லுக்­கான சூழ­லொன்று ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. தரம் பத்தில் கற்­ற­போதே வீட்டில் டீ.வி. இருக்­க­வில்லை. எனது பெறு­பேறு குறித்த விட­யங்­களை அடுத்­த­வீட்டு தொலைக்­காட்­சி­யில்தான் பார்த்­த­தாக விப­ரிக்­கிறார் ஹக்கீம் கரீம். எனக்கு கைய­டக்கத் தொலை­பேசி இருக்­கி­றது ஆனாலும் தேவைக்குப் பயன்­ப­டுத்­து­வதை தவிர அநா­வ­சி­ய­மாக பயன்­ப­டுத்­து­வது குறைவு. பெற்­றோரும் அதனை வாங்கி வைத்­துக்­கொள்­வார்கள் என்றார்.

சிறு­வ­யதில் குர்ஆன் மனனம் செய்­வதில் ஈடு­பட்ட ஹக்கீம், உயர்­தரம் படிக்­கும்­போது குர்­ஆனை விஞ்­ஞான ரீதியில் ஆராய்ந்து படிப்­பதில் ஆர்வம் காட்டி வந்­தி­ருக்­கிறார். இது தனது கல்­விக்கு துணை­பு­ரிந்­துள்­ளதை உறு­தி­யாக நம்­பு­கிறார். நாம் படம் பார்க்­கும்­போதும், பாடல் கேட்­கும்­போதும் கற்­றலை மறந்து முழு­மை­யாக அதில் லயித்­து­வி­டு­கிறோம். எனினும், குர்­ஆ­னுடன் தொடர்­பு­பட்­டி­ருக்­கும்­போது கல்­வியில் சமாந்­தி­ர­மாக அக்­கறை செலுத்­தக்­கூ­டி­யா­தாக இருப்­ப­தாக விடி­வெள்­ளிக்கு கூறினார் ஹக்கீம்.

தேசிய மட்­டத்தில் சாதித்த ஹக்கீம் தனது கற்­ற­லுக்­காக விசே­ட­மாக எந்த கற்றல் முறை­க­ளையும் வைத்துக் கொள்­ள­வில்லை. படிப்­ப­தற்­கான தேவை­யி­ருந்தால் அல்­லது ஏதா­வது வேலை­யி­ருந்தால் அதனை முடிப்­பதில் கண்ணும் கருத்­து­மாக இருப்­பவர். குறிப்­பாக ஒரு விட­ய­தா­னத்தை படித்­துக்­கொண்­டி­ருந்தால் அதனை முழு­மை­யாக விளங்­கிய பின்­னரே அடுத்த விட­ய­தா­னத்­திற்கு செல்வார். ஒரு பகு­தியை பூர­ண­மாக தெரிந்­து­கொள்­ளும்­வரை அடுத்த பகு­திக்கு செல்­வ­தா­னது பின்­நாட்­களில் சுமை­யா­கி­விடும் என்று கருதி பாட­வி­தா­னங்­களை முழு­மை­யாக விளங்­கிக்­கொண்­டி­ருக்­கிறார். இதனால் பரீட்­சைக்கு இரண்டு வாரங்கள் இருக்­கின்ற சூழலில் கற்­ப­தற்கு எதுவும் இருக்­க­வில்லை என்­று நான் வியப்­ப­டைந்­தேன் என்றும் குறிப்­பிட்டார்.

இது­த­விர, பரீட்­சையை மைய­மாக கொண்டு கடந்­த­கால வினாப்­பத்­தி­ரங்கள் மற்றும் தெரி­வு­செய்­யப்­பட்ட மாதிரி வினாத்­தாள்­களை முழு­மை­யாக விளங்கிப் பரீட்­சைக்கு தயா­ரா­கி­யி­ருக்­கிறார். இவ்­வாறு வினாத்தாள் குறித்த அறிவை பெற்­றமை கற்­றலை இல­கு­ப­டுத்­தி­யது என்­கிறார் ஹக்கீம்.

வல்ல அல்­லாஹ்வின் அரு­ளினால் கிடைத்த கல்­வி­ய­றிவை அவ­னுக்கு விருப்­ப­மான முறையில் பயன்­ப­டுத்த வேண்­டு­மென்ற அவா ஹக்­கீ­மி­டத்தில் இருக்­கி­றது. பெற்றோர் மற்றும் கூட்டுக் குடும்பத்தினரின் உந்துதல் என்பன பரீட்சை பெறுபேற்றில் பெரும் பங்காற்றியது என தெரிவித்த அவர் பாடசாலை சமூகம் நட்பு வட்டத்தினருக்கும் நன்றி தெரிவித்தார்.

சத்திரசிகிச்சை நிபுணராக வரவேண்டும் என்பது ஹக்கீமின் விருப்பம். எனினும் அந்த துறை குறித்து தேடிப்பார்த்துவிட்டு அடுத்தகட்ட கற்றலை தொடங்கலாமென எதிர்பார்க்கிறார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.