பேதங்­க­ளின்றி நாட்டு மக்­க­ளுக்­காக அர்ப்­ப­ணிப்­புடன் சேவை­யாற்­றுவேன்

வீட­மைப்பு நிர்­மாணத் துறை மற்றும் கலா­சார அமைச்சர் சஜித்

0 557

எமக்கு கிடைத்­துள்ள இந்த சந்­தர்ப்­பத்­தினை பயன்­ப­டுத்தி பேத­மின்றி எமது நாட்டு மக்­க­ளுக்­காக உச்ச அளவில் அர்ப்­ப­ணிப்­புடன் சேவை­யாற்­றுவேன் என வீட­மைப்பு நிர்­மாணத் துறை மற்றும் கலா­சார அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ தெரி­வித்தார்.

ஹம்­பாந்­தோட்டை நகரில் இடம்­பெற்ற வர­வேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார். அமைச்சரை வர­வேற்­ப­தற்­காக ஹம்­பாந்­தோட்டை மாவட்­டத்தில் பிர­தான நக­ரங்கள் எங்கும் பாரி­ய­ளவில் மக்­க­ளினால் வர­வேற்பு நிகழ்­வுகள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­த­தோடு இதில் பிரதி அமைச்சர் திலிப் வெத­ஆ­ரச்­சி­யுடன் பெருந்­தி­ரளான மக்கள் கலந்து கொண்டு அமைச்­ச­ருக்கு வாழ்த்­துக்­களை தெரி­வித்­த­தோடு, வீதி நெடு­கிலும் அமைச்­சரை வர­வேற்­ப­தற்­காக பதா­தை­க­ளுடன் வாகனப் பேர­ணி­களும் இடம்­பெற்­றன.

வீட­மைப்பு நிர்­மாணத் துறை மற்றும் கலா­சார அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ இங்கு தொடர்ந்தும் உரை­யாற்றும் போது தெரி­வித்­த­தா­வது ஒக்­டோபர் 26  நிகழ்வின் பின்பு மீண்டும் ஹம்­பாந்­தோட்டை மாவட்­டத்தில் அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளினை ஆரம்­பிப்­ப­தற்­காக வரு­கின்ற இந்த பய­ணத்தில் மக்­களின் எதிர்­பார்ப்­புக்கள் நிறை­வேற்­றப்­படும்.

நாட்டு மக்கள் என்ற அடிப்­ப­டையில் நாட்டில் வாழக் கூடிய உரிமை இருந்தால் அந்த மக்­க­ளுக்கு தேர்­தலில் வாக்­க­ளிப்­ப­தற்­கான உரிமை இருந்தால்  இந்த மக்­க­ளுக்கு தங்­க­ளுக்­கென்றே காணி உரி­மை­யினை பெற்றுக் கொடுப்­பது அர­சாங்­கத்­தி­னதும் பொறுப்பு என நான் நினைக்­கின்றேன். காணி உரிமை இல்­லாத பிர­சைகள் பெய­ருக்கு மாத்­திரம் பிர­சை­க­ளாக பல்­வேறு அர­சாங்­கங்­களும் கருதி செயற்­பட்­டுள்­ளது.

எமது நாட்டு பிர­சை­களின் காணி உரி­மைக்கு எவ்­வித பெறு­ம­தி­யி­னையும் யாரும் பெற்றுக் கொடுக்­க­வில்லை.

நல்­லாட்சி அர­சாங்­கத்தில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் நாட்­டி­லுள்ள சகல பிர­சை­க­ளுக்கும் காணி உரி­மை­யினை பெற்றுக் கொடுத்து அதனை சட்ட ரீதி­யா­ன­தாக மாற்­றி­ய­மைத்து அர­சியல் யாப்­பிற்­குட்­ப­டுத்த வேண்­டு­மென்ற தெளி­வான கருத்தில் இருக்­கி­றார்கள்.

நானும் அதே கருத்­தில்தான் இருக்­கிறேன். கடந்த இரண்டு மாத காலத்தில் அர­சியல் யாப்­பினை மீறி சட்­ட­வி­ரோ­த­மான முறையில் அர­சாங்கம் ஒன்று உரு­வா­னது. இதற்கு எதிர்ப்­பினை தெரி­வித்து நாம் அடிப்­படை உரிமை மீறல் மனு ஒன்­றி­னூ­டாக நீதி­மன்­றிற்கு சென்றோம். நாம் இத­னூ­டாக எமது அர­சியல் மற்றும் சன­நா­யக உரி­மை­களை மீண்டும் பெற்றுக் கொண்டோம். எமது உரி­மைகள் மீறப்­பட்டால் நீதி­மன்றின் உத­வியை நாடு­வ­தற்­கான உரிமை சக­ல­ருக்கும் உண்டு. இதற்கு நாட்டு மக்­களின் பொரு­ளா­தார உரி­மை­களும் உள்­ள­டக்­கப்­படல் வேண்டும் எனவும் நான் நம்­பிக்கை கொள்­கிறேன் எனவும் தெரி­வித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.