நீங்கள் பௌத்த மதத்துக்கு மிகுந்த மதிப்பளிக்கிறீர்கள்

அரநாயக்க பிரதேச செயலாளர் பைசலுக்கு ஊழியர்கள் பாராட்டு

0 875

”நீங்கள் எமக்கு சிறந்த தலை­மைத்­துவம் வழங்­கு­வ­துடன் பௌத்த சம­யத்­துக்கும் அப­ரி­மி­த­மான கௌர­வத்தை வழங்­கு­கி­றீர்கள்” என அர­நா­யக்க பிர­தேச செய­லாளர் இஸட்.ஏ.எம். பைசலைப் பாராட்டி, குறித்த பிர­தேச செய­லக பெரும்­பான்மை இன ஊழி­யர்கள் முக­நூலில் பதி­வொன்றை வெளி­யிட்­டுள்­ளனர்.

அர­நா­யக்க பிர­தேச செய­ல­கத்தில் இடம்­பெற்ற புத்­தாண்டை வர­வேற்கும் நிகழ்வைத் தொடர்ந்தே குறித்த நிகழ்வின் புகைப்­ப­டங்­க­ளுடன் இப் பதிவு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

” நீங்கள் இனத்தால் முஸ்லிம். நாம் சிங்­க­ளவர். நீங்கள் மதத்தால் இஸ்­லா­மிய பக்­தி­வான்கள். நாம் பௌத்­தர்கள். ஆனால், நீங்கள் எங்­க­ளுக்கு அர­னா­யக்க நக­ருக்கு  தலை­மைத்­துவம் வழங்­கு­கி­றீர்கள். அங்கு பெரும்­பான்­மைக்கு செவி சாய்க்­கி­றீர்கள். பௌத்த சம­யத்­திற்கு அப­ரி­மித கௌரவம் கொடுக்­கி­றீர்கள். உரிய இடம் அளிக்­கி­றீர்கள். புத்­தரை வணங்­கா­வி­டினும் புத்தர் சிலைக்கு மதிப்­ப­ளிக்­கி­றீர்கள். அய­லி­லுள்ள பௌத்­தர்­க­ளுக்கு கொள்­கையை நிலை நிறுத்த சகல வச­தி­க­ளையும் செய்து கொடுக்­கி­றீர்கள்.

பௌத்­தர்­க­ளா­கிய எங்­களால் மறக்­கப்­படும் சந்­தர்ப்­பங்­க­ளிலும் மற்றும் சமய ஆசா­ரங்கள் மறக்­க­டிக்­கப்­படும் சந்­தர்ப்­பங்­க­ளிலும் எம்மை நினை­வூட்டத் தூண்­டு­கி­றீர்கள். நீங்கள் இந்­நாட்டின் இதர மதத்­த­வர்­க­ளுக்கும் முன்­மா­திரி காட்­டு­கி­றீர்கள். உங்­க­ளது முதிர்ந்த அனு­ப­வங்­களும் இந்­நாட்டு கலா­சாரம் குறித்து உங்­க­ளிடம் காணப்­படும் பரந்த தெளிவும் இதர மதத்­த­வர்­க­ளிடம் காணப்­ப­டு­மாயின், இந்­நாட்டில் எப்­போதும் இன மோதல்­க­ளுக்கே இட­மில்­லாது போகும். எங்­க­ளது புண்­ணி­யங்­களை மேலும் வளர்த்துக் கொள்­வ­தற்கு உங்­க­ளது வழி­காட்­ட­லுக்கு எங்­க­ளது உளப்­பூர்­வ­மான நன்­மைகள் உரித்­தா­கட்டும். அர­னா­யக்க பிர­தேச செய­லா­ளரே! வெற்றி பெறட்டும்” என அப் பதிவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அர­நா­யக்க பிர­தேச செய­லாளர் இஸட்.ஏ.எம். பைசல், கடந்த 2016 ஆம் ஆண்டு அப் பகுதியில் ஏற்பட்ட பாரிய மண் சரிவு அனர்த்தத்தின் போது மக்களுக்கு சிறப்பான சேவையை ஆற்றியிருந்ததுடன் இது தொடர்பில் சகல தரப்பினதும் பாராட்டைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.