2019 இல் பாரிய சவால்கள் காத்திருக்கின்றன

பொருளாதார அபிவிருத்தி குறித்து ஜனாதிபதி தெரிவிப்பு

0 648

உலகில் அபி­வி­ருத்தி மற்றும் வளர்ச்­சிப்­பா­தையில் செல்­கின்ற நாடு­களைப் பார்க்­கு­மி­டத்து எமக்குப் பாரிய சவால்கள் காத்­தி­ருக்­கின்­றன என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன், மலரும் புத்­தாண்டை ஊழ­லற்ற வித்தில் சேவை­யாற்றும் ஒரு வரு­ட­மாகப் பெய­ரிட்­டுள்­ள­தா­கவும் ஜனா­தி­பதி தெரி­வி­த்தார்.

ஸ்ரீ த­ல­தா­ மா­ளி­கைக்கு விஜயம் செய்து வழி­பா­டு­களில் ஈடு­பட்­ட­தன்பின் அஸ்­கி­ரிய பீடத்­திற்கு விஜயம் செய்து அனு­நா­யக்கத் தேரர் வேண்­ட­றுவே உபாலி மற்றும் மல்­வத்தை மகா­நா­யக்கத் தேரர் திப்­பட்­டு­வாவே ஸ்ரீ சித்­தார்த்த சுமங்­கள என்போரைச் சந்­தித்து நல்­லா­சிகள் பெற்­றபின் ஜனாதிபதி ஊட­கங்­க­ளுக்கு இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அவர் மேலும் தெரி­விக்­கையில்

வறு­மையை ஒழித்து, வள­மான நாடாக கட்­டி­யெ­ழுப்ப சக­ல­ரதும் நேர்­மை­யான தியாகம் தேவைப்­ப­டு­வ­தா­கவும் மலரும் புத்­தாண்டு  ஊழல் இல்­லாமல் பணி­யாற்­றக் கூடிய ஒரு வரு­ட­மாக இதனை மாற்­றி­ய­மைக்க வேண்­டி­யுள்­ள­தா­கவும் கூறினார்.

உலகில் அபி­வி­ருத்தி மற்றும் வளர்ச்­சிப்­பா­தையில் செல்­கின்ற நாடு­களைப் பார்க்­கு­மி­டத்து எமக்குப்  பாரிய சவால்கள் காத்­தி­ருக்­கின்­றன என்­பதைப் புரிந்­து­கொள்ள முடியும். அர­சியல் வாதிகள், அரச ஊழி­யர்கள் மற்றும் சகல பிர­ஜை­களும் இது எமது நாடு என்ற அடிப்­ப­டையில் தமது மனச்­சாட்­சிக்கு ஏற்ப கரு­ம­மாற்­று­வது முக்­கி­ய­மாகும்.

அர­சி­யலைப் பொறுத்­த­வரை பல்­வேறு கலந்­து­ரை­யா­டல்கள், விவா­தங்கள், பேச்­சு­வார்த்­தைகள் இக்­கா­லத்தில்  நடந்து வரு­வ­தா­கவும் அதற்கு மத்­தியில் நாட்டை தூய்­மை­யாக நேசிக்கும் மக்கள் எத்­த­னைபேர் உள்­ளனர் எனப் பார்க்­க­வேண்­டி­யுள்­ளது என்றும் குறிப்­பிட்டார்.

அர­சியல் களத்தில் பணி­யாற்றும் தற்­போ­தைய நிலையில்  ஊழல் இல்­லாது சேவை­யாற்­றக்­கூ­டிய ஒரு வரு­ட­மாக 2019ஆம் வரு­டத்தை குறிப்­பிட்­டுள்­ள­தா­கவும், அதற்­க­மைய நல்­ல­தொரு சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு சக­லரும் தமது பொறுப்­­புக்­களை சரி­யாக மேற்­கொள்ள வேண்டும் என்றும் குறிப்­பிட்டார்.

அஸ்­கி­ரிய கெடிகே விகா­ரையில் அமைக்­கப்­பட்டு வரும் அருங்­காட்­சி­யகம், கேட்போர் கூடம் என்பவற்றையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.  இவ்விஜயத்தின்போது பாராளுமன்ற அங்கத்தவர் எஸ். பீ. திசாநாயக்கா, முன்னாள் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.