முத்தலாக் தடை மசோதா இந்திய மக்களவையில் நிறைவேற்றம்

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

0 637

முத்­தலாக் முறையில் விவாகரத்து பெறு­வதை தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாக அறி­விக்கும் சட்ட மசோதா கடந்த வியாழக்கிழமை இந்­திய நாடா­ளு­மன்­றத்தின் மக்­க­ள­வையில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

இந்த சட்ட மசோதா தொடர்­பாக நடந்த வாக்­கெ­டுப்பில் 245 பேர் ஆத­ர­வாக வாக்­க­ளிக்க, இதற்கு எதி­ராக 11 பேர் வாக்­க­ளித்­தனர்.

காங்­கிரஸ், அ.தி.மு.க., சமாஜ்­வாடி போன்ற முக்­கிய எதிர்க்­கட்­சிகள் இந்த வாக்­கெ­டுப்பில் கலந்­து­கொள்­ள­வில்லை. இந்த சட்ட மசோ­தாவை நாடா­ளு­மன்ற நிலைக்­கு­ழு­வுக்கு அனுப்ப வேண்­டு­மென்று இந்தக் கட்­சிகள் கோரிக்கை விடுத்­துள்­ளன.

ஆனால், தற்­போது நிறை­வேற்­றப்­பட்­டுள்ள சட்ட மசோதா பெண்­களின் உரி­மை­களை பாது­காக்க கொண்டு வரப்­பட்­டுள்­ளது என்று தெரி­வித்­துள்ள அரசு, எதிர்க்­கட்­சி­களின் கோரிக்­கை­களை கேட்­ப­தற்குத் தயா­ராக உள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது.

முத்­தலாக் மசோதா தொடர்­பாக எதிர்க்­கட்­சிகள் கொண்­டு­வந்த திருத்­தங்கள் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

மூன்று முறை தலாக் என்ற சொல்லை உச்­ச­ரிப்­பதன் மூலம் முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனை­வியை விவ­கா­ரத்து செய்ய வழி வகுக்கும் முத்­தலாக் முறை, கடந்த சில ஆண்­டு­க­ளாக பல­வி­த­மான சர்ச்­சை­க­ளையும் விமர்­ச­னங்­க­ளையும் சந்­தித்­து­வந்­தது.

2017ஆம் ஆண்டு டிசம்­பரில் முத்­தலாக் முறையை சட்­ட­வி­ரோ­த­மா­ன­தாக்­கு­வ­தற்­கான மசோதா நாடா­ளு­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டது. அப்­போது இதற்கு நாடா­ளு­மன்­றத்தில் கடும் எதிர்ப்பு கிளம்­பி­யது.

முஸ்லிம் தனி­நபர் சட்ட வாரியம் போன்ற அமைப்­புகள், முஸ்லிம் சட்­டத்தில் திருத்­தங்கள் கொண்டு வரு­வ­தற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரி­வித்து வந்­துள்­ளன.

முஸ்­லிம்கள் விவா­க­ரத்து செய்ய கடைப்­பி­டிக்கும் முத்தலாக் நடைமுறை, அரசியல் சட்ட விரோதமானது என்று 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.