அனர்த்­தத்தால் பாதிக்­கப்­பட்டோர் தொகை 1,25,000 ஐ தாண்­டி­யது

0 855

வடக்கில் வெள்­ளப்­பெ­ருக்­கினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்கை ஒரு இலட்­சத்து 25 ஆயி­ரத்து 519 ஆக அதி­க­ரித்­துள்­ள­துடன் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் பலர் இன்னும் பாது­காப்­பான இடங்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் அறி­வித்­துள்­ளது.

மேலும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்குத் தேவை­யான நிவா­ர­ணங்­களை வழங்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­துடன் தனியார் துறை­களும் உத­வி­களை பெற்­றுக்­கொ­டுக்கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

வடக்கில் கடந்த ஒரு­வார கால­மாக  நில­விய சீரற்ற கால­நிலை கார­ண­மாக ஏற்­பட்ட வெள்­ளப்­பெ­ருக்­கினால் 500 வீடுகள் முழு­மை­யா­கவும் 4000க்கு அதி­க­மான வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ளன. வீடுகள் இழந்­த­வர்கள் வட மாகாண முகாம்­க­ளிலும் தங்­க­வைக்கப்­பட்­டுள்­ளனர். இருப்­பினும் கடந்த ஒரிரு நாட்­களில் மழை­வீழ்ச்சி குறை­வ­டைந்­துள்­ளது. வெள்­ளப்­பெ­ருக்­கினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் தொகை கடந்த சனிக்­கி­ழமை மாலை வரை ஒரு இலட்­சத்து 23 ஆயி­ர­மாக காணப்­பட்­டது. ஆனால் நேற்று மாலை­யா­கும்­போது பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் தொகை ஒரு இலட்­சத்து 25 ஆயி­ர­மாக உயர்­வ­டைந்­துள்­ளது.

கிளி­நொச்சி மாவட்­டத்தில் 78 ஆயி­ரத்து 528 பேரும், முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் 32 ஆயி­ரத்து 511 பேர் உள்­ள­டங்­க­லாக வட­மா­கா­ணத்தில் மாத்­திரம் ஒரு இலட்­சத்து 23 ஆயி­ரத்து 862 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். மேலும் இது­வ­ரையில் மொத்­த­மாக 40 ஆயி­ரத்து 278 குடும்­பங்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

எனினும், இன்று மாலை வரை கிழக்கு கடற்­கரை உள்­ளிட்ட இன்னும் ஒரு­சில கடற்­கரை பிர­தே­சங்­களில் மழை­யு­ட­னான கால­நிலை நிலவும் என்றும் நாட்டை சூழ­வுள்ள கடற்­கரை பிர­தே­சங்­களில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 25 தொடக்கம் 35 கிலோ மீற்றர்களாகவும் அல்லது மணித்தியாலயத்துக்கு 40 தொடக்கம் 50 கிலோமீற்றர்களாக காணப்படுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.