காலை­யிலும் இர­விலும்குளி­ரான கால­நிலை

0 579

நாட்டின் பெரும்­பா­லான பிர­தே­சங்­களில் காலை­யிலும் இர­விலும் குளி­ரான நிலை­மை­யுடன் கூடிய, சீரான வரண்ட வானிலை நிலவும் என வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

எனினும் கிழக்கு மாகா­ணத்­திலும் மாத்­தளை மாவட்­டத்­திலும் சிறி­த­ள­வான மழை­வீழ்ச்சி எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது எனவும் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது குறித்து வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் மேலும் தெரி­விக்­கையில், மத்­திய, வடமேல் மற்றும் ஊவா மாகா­ணங்­க­ளிலும் ஹம்­பாந்­தோட்டை மாவட்­டத்­திலும் அவ்­வப்­போது மணித்­தி­யா­லத்­துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதி­க­ரித்த வேகத்தில் ஓர­ளவு பலத்த காற்று வீசக்­கூடும். அத்­துடன், சப்­ர­க­முவ மற்றும் மேல் மாகா­ணங்­களில் சில இடங்­களில் காலை வேளையில் பனி­மூட்­ட­மான நிலை எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

கிழக்கு கடற்­ப­ரப்­பு­களில் சிறி­த­ள­வான மழை­வீழ்ச்சி எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. நாட்டைச் சூழ­வுள்ள ஏனைய கடற்­ப­ரப்­பு­களில் பிர­தா­ன­மாக சீரான வானிலை நிலவும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

நாட்டைச் சூழ­வுள்ள கடற்­ப­ரப்­பு­களில் காற்­றா­னது வட­கி­ழக்கு திசை­யி­லி­ருந்து வீசக்­கூ­டு­வ­துடன் காற்றின் வேக­மா­னது மணித்­தி­யா­லத்­துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்­படும்.

மாத்­த­றை­யி­லி­ருந்து ஹம்­பாந்­தோட்டை ஊடாக பொத்­துவில் வரை­யான கரை­யோ­ரத்­திற்கு அப்­பாற்­பட்ட கடற்­ப­ரப்­பு­க­ளிலும் மற்றும் மன்­னா­ரி­லி­ருந்து புத்­தளம் ஊடாக கொழும்பு வரை­யான கரை­யோ­ரத்­திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40- – 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.