அ­மை­திக்கு குந்­தகம் விளை­விப்­போரை விடு­த­லை­செய்ய துணை­போகக் கூடாது

திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான்

0 629

நாட்டின் அமை­திக்கு குந்­தகம் விளை­விப்­போரை விடு­தலை செய்­யக்­கூ­டாது, அதற்கு துணை போகவும் கூடாது என்­பதில் நாம் மிகவும் தெளி­வா­கவே இருக்­கிறோம். நாட்டில் இரத்­தக்­கறை படிந்த சம்­ப­வங்கள் அரங்­கே­று­வ­தற்கு தேசத்தை நேசிக்கும் எந்­த­வொரு முஸ்­லிமும் துணை­போக மாட்டான் என திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் தெரி­வித்தார்.

ஞான­சார தேரரின் விடு­த­லைக்­கான சில முயற்­சிகள் அண்­மைக்­கா­ல­மாக திரை­ம­றைவில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற நட­வ­டிக்­கைகள் குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில்,

நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­தபின் இன­வா­தி­களின் செயற்­பா­டுகள் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டன. எனினும், இரண்டு பார­தூ­ரமான சம்­ப­வங்கள் கிந்­தோட்­டை­யிலும் கண்­டி­யிலும் திட்­ட­மி­டப்­பட்டு அரங்­கேற்­றப்­பட்­டன. கடந்த அர­சாங்­கத்தில் இன­வாத செயற்­பா­டு­களை அரங்­கேற்­றி­ய­வர்­களே இதன் பின்­ன­ணியில் இருந்­தனர். மஹிந்த ஆட்­சியில் இவர்­க­ளுக்கு எதி­ராக சட்டம் தன் கட­மையை செய்­ய­வில்லை. எனினும் நல்­லாட்­சியில் சில கைதுகள் இடம்­பெற்­றன. இதனால் நாம் ஓர­ளவு திருப்­திப்­பட்டோம் எனினும் முழு­மை­யாகத் திருப்­தி­ய­டை­வ­தற்குத் தேவை­யான அடுத்­த­கட்ட நகர்­வு­களை முன்­னெ­டுத்து வரு­கிறோம். எல்லா ஆட்சிக் காலத்­திலும் இன­வாதம் இருந்தே வரு­கி­றது.
மஹிந்த ஆட்­சியில் கூடு­த­லா­கவும் ரணில் ஆட்­சியில் குறை­வா­கவும் இருந்­தி­ருக்­கி­றது. எந்த தரப்­பிலும் முற்­று­மு­ழு­தாக இன­வாதம் இல்­லா­தி­ருந்­த­தில்லை. நாம் குறை­வாக இன­வாதம் இருக்கும் தரப்­பி­லி­ருந்து அதனை முற்­றாக இல்­லாமல் செய்­வ­தற்கே பாடு­ப­டு­கிறோம்.

ஞான­சார தேரர் தான் அளுத்­கம கல­வ­ரத்தின் பிர­தான சூத்­தி­ர­தாரி. அவ­ருக்கு எதி­ராக எந்த நட­வ­டிக்­கையும் இது­வரை மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. அவர் சட்­டத்தை மீறி இன்னும் பல குற்றச் செயல்­களை மேற்­கொண்­டுள்ளார். ஊட­க­வி­ய­லாளர் எக்­னெ­லி­கொ­டவின் மனை­வியை அச்­சு­றுத்­தி­யமை மற்றும் நீதி­மன்­றத்தை அவ­ம­தித்­தமை குறித்த விவ­கா­ரத்­தி­லேயே அவ­ருக்கு சிறைத்­தண்­டனை வழங்­கப்­பட்­டது. நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கில் சிறைத்­தண்­டனை பெறும் நபரை விடு­விக்க நாம் துணை போவ­தா­னது சட்­ட­வி­ரோ­த­மான செயற்­பா­டா­கவே இருக்­கி­றது.

பொது­பல சேனா அமைப்­புடன் பல கட்டப் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­னார்கள். அங்கு என்ன பேசப்­பட்­டது என்று நமக்குத் தெரி­யாது. இந்தப் பேச்­சு­வார்த்­தைக்கு தலைமை தாங்­கி­ய­வர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு பிரச்­சி­னைகள் வரும்­போது மக்கள் பிர­தி­நி­தி­களை கைநீட்­டு­வார்கள்.

ஞான­சார தேரரை விடு­விக்க துணை­போ­வ­தா­னது சட்­டத்தை நசுக்கத் துணை­போ­வ­தற்கு சம­மா­ன­தாகும். அவர் பல வகை­யிலும் நாட்டு சட்­டத்தை மீறி­யுள்ளார். அத்­தோடு சட்­டத்தை தன் கையி­லெ­டுத்து காடைத்­த­னத்­தையும் அரங்­கேற்­றி­யுள்ளார். காலா கால­மாக நட்­பு­ற­வுடன் வாழ்ந்த இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கும் பௌத்­தர்­க­ளுக்­கு­மி­டையில் விரி­சலை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார். சமா­தா­னத்தை விரும்­பு­ப­வர்கள் அவரின் விடு­த­லைக்கு துணை­போக மாட்­டார்கள்.

ஞான­சார தேரர் குற்­றத்­துக்கு மேல் குற்றம் செய்­தி­ருக்­கிறார். அவர் அர­சியல் நிகழ்ச்சி நிர­லுக்கு ஏற்ப செயற்­பட்­டி­ருக்­கின்­ற­மையை கடந்­த­கால சம்­ப­வங்கள் மூலம் நாம் அறிந்­தி­ருக்­கிறோம். ஜனா­தி­ப­திக்கும் சில ராஜபக் ஷாக்­க­ளுக்கும் அவர் தேவைப்­ப­டலாம். அதற்கும் முஸ்லிம் பெயர் தாங்­கிய சிலர் துணைபோய் முஸ்லிம் சமூ­கத்தை ஆபத்தில் சிக்கவைக்கக்கூடாது.
மஹிந்த ராஜபக் ஷ பிரதமராகப் பதவியேற்ற சில தினங்களில் கண்டி கலவரத்திற்கு காரணமான அமித் வீரசிங்க உள்ளிட்ட சிலர் பிணையில் விடுதலையாகினர். தற்போது மாவனெல்லை பகுதியில் ஓர் அச்ச சூழல் உருவாகியிருக்கிறது. இத்தருணத்தில் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பளிப்பதானது மேலும் பல பிரச்சினைக்கு வழிவகுக்கலாம். எனவும் இம்ரான் மஹ்ரூப் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.