காஸா விவகாரத்தில் இலங்கையின் நிலைப்பாடு ஒருபோதும் மாறாது

0 56
  • பலஸ்தீன அரசு 5 வருடங்களுக்குள் நிறுவப்பட வேண்டும்
  • பொதுமக்கள் கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் ரணில்

காஸா பகு­தியில் இடம்­பெற்று வரும் மோதல்கள் தொடர்பில் இலங்­கையின் நிலைப்­பாடு ஒரு­போதும் மாறாது எனவும், 5 வரு­டங்­க­ளுக்குள் பலஸ்­தீன அரசை ஸ்தாபிக்க வேண்டும் என்­பதே இலங்­கையின் நிலைப்­பா­டாகும் எனவும் ஜனா­தி­பதி ரணில் விக்ர­ம­சிங்க தெரி­வித்தார்.

காஸாவில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக காத்­தான்­குடி பெரிய ஜும்மா பள்­ளி­வா­சலில் கடந்த சனிக்கிழமை ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த விசேட பிரார்த்­த­னையில் கலந்­து­கொண்­டதன் பின்னர் ஆற்­றிய உரை­யி­லேயே ஜனா­தி­பதி இதனைத் தெரி­வித்தார்.

இதன்­போது மௌலவி ஹாரித்­தினால் தொழுகை நிகழ்த்­தப்­பட்­டது.
இதே­வேளை, ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவின் பணிப்­பு­ரையின் பேரில் ஸ்தாபிக்­கப்­பட்ட காஸா சிறுவர் நிதி­யத்­திற்கு (Children of Gaza Fund) காத்­தான்­குடி பெரிய ஜும்மா பள்­ளி­வாசல், 10,769,417 ரூபாயை நன்­கொ­டை­யாக வழங்­கி­யது. பிரார்த்­த­னையின் பின்னர், காஸா நிதி­யத்­திற்­கான காசோலை பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தி­னரால் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­விடம் கைய­ளிக்­கப்­பட்­டது.

இந்த விசேட பிரார்த்­தனை நிகழ்­வு­களில் கலந்து கொண்ட ஜனா­தி­பதி, அங்கு வருகை தந்­தி­ருந்­த­வர்­க­ளோடு சிநே­க­பூர்­வ­மாக கலந்­து­ரை­யா­டி­ய­தோடு, செல்பி புகைப்­ப­டங்­க­ளிலும் இணைந்­து­கொண்டார்.

இந்­நி­கழ்வில் மேலும் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க,
“நான் மட்­டக்­க­ளப்­புக்கு விஜயம் செய்­தி­ருக்கும் வேளையில், இந்த நிகழ்­வுக்கு என்னை அழைத்­த­மைக்கு நன்றி. இந்த பள்­ளி­வாசல் முஸ்லிம் கலைக்கு சிறந்த உதா­ர­ண­மாக விளங்­கு­கி­றது. காத்­தான்­குடி முஸ்­லிம்கள் அரசர் காலத்­தி­லி­ருந்து அங்கு வாழ்ந்து வந்த ஒரு பிரி­வினர். மட்­டக்­க­ளப்பின் அபி­வி­ருத்திப் பணிகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்­காக இங்கு வந்தேன். இந்த மாகா­ணத்தில் விவ­சா­யத்தை நவீ­ன­ம­ய­மாக்­கு­வ­துடன் சுற்­று­லாவை மேம்­ப­டுத்த எதிர்­பார்க்­கிறோம். அதேபோல், கல்­வி­யையும் மேம்­ப­டுத்த வேண்டும்.

காஸா நிதி­யத்­திற்கு உங்கள் ஆத­ரவை வழங்­கு­வ­தற்­காக இன்று எனக்கு இங்கு வரு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டது. காஸா விவ­கா­ரத்தில் அர­சாங்கம் வலு­வான நிலைப்­பாட்டை கொண்­டுள்­ளது. அது என்றும் மாறாது. ஹமா­ஸுக்கும் இஸ்­ரே­லுக்கும் பிரச்­ச­ினைகள் இருக்­கலாம். அதற்­காக, காஸா மக்­களை பழி­வாங்க வேண்டாம்.

பலஸ்­தீனம் தீர்வை எட்ட உதவ வேண்டும். 5 வரு­டங்­க­ளுக்குள் பலஸ்­தீன அரசை நிறுவ வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும். காலக்­கெடு இல்­லாமல் பேசு­வதில் அர்த்­த­மில்லை. ஏனென்றால், 40, 50 வரு­டங்­க­ளாக இதுகுறித்து பேசப்­பட்­டது. எனவே, காலக்­கெ­டுவின் அடிப்­ப­டையில் அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும்.

இஸ்­ரேலின் பாது­காப்பு பிரச்­சினை இருந்தால் அது குறித்துத் தனி­யாக விவா­திக்­கலாம். ஆனால் பலஸ்­தீன அரசு உரு­வாக்­கப்­பட வேண்டும். ஏரா­ள­மான மக்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர். இதனால் அதி­ருப்தி அடைந்­தி­ருக்­கிறோம். அதை நாம் ஏற்­றுக்­கொள்­ளவே முடி­யாது.

காஸா போரினால் பாதிக்­கப்­பட்ட குழந்­தை­க­ளுக்­காக காஸா நிதி­யத்தை ஆரம்­பிக்க இலங்கை அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. அதன்­படி முதலில் ஒரு மில்­லியன் டொலரை வழங்க ஏற்­பாடு செய்தோம். நாம் சிறிய நாடாக இருந்­தாலும், வங்­கு­ரோத்து நிலையை அறி­வித்­தி­ருக்கும் வேளை­யிலும் ஒரு மில்­லியன் டொலரை வழங்க முன்­வந்­தி­ருக்­கிறோம். இதற்கு பொது மக்கள் ஆத­ரவு தரு­மாறு கேட்டுக் கொண்­டுள்ளோம். எனவே இந்த நன்­கொ­டைக்கு எனது நன்­றியைத் தெரி­வித்துக் கொள்­கிறேன்.

அதேபோல் உடல்­களை அடக்கம் செய்­வது குறித்த பிரச்­சி­னை­களை முஸ்லிம் மக்கள் எதிர்­கொண்­டுள்­ளனர். அது குறித்து ஆராய உலக சுகா­தார அமைப்பின் திட்­டத்தை செயற்­ப­டுத்­தாமல் தனி குழு நிய­மிக்­கப்­பட்­டது. இதனால் முஸ்லிம் மக்கள் மனம் நொந்­துள்­ளனர்.

எனவே, உடலை அடக்கம் அல்­லது தகனம் செய்தல் அல்­லது உடலை விரும்­பினால் மருத்­துவ பீடத்­திடம் ஒப்­ப­டைக்­கலாம் என்ற புதிய சட்­டத்தை கொண்டு வரத் தீர்­மா­னித்­தி­ருக்­கிறோம். எனவே எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான பிரச்­சி­னைகள் ஏற்­ப­டாது.

நாட்டின் வீழ்ச்­சி­ய­டைந்த பொரு­ளா­தா­ரத்தை மீட்­டெ­டுப்­ப­தற்கு நான் முன்­னு­ரிமை அளித்­துள்ளேன். அந்த இலக்கை மிகக் குறு­கிய காலத்தில் அடை­யலாம். அதன்­பி­றகு, நாட்டின் மற்­றைய பிரச்சி­னை­களைத் தீர்ப்­பதில் கவனம் செலுத்­தப்­படும். அத்­துடன், மக்­க­ளுக்கு இல­வச காணி உரி­மையை வழங்கும் வகையில் உறு­மய வேலைத்­திட்டம் செயற்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.” என்றார்.

இந்­நி­கழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்­டமான், தேசிய பாது­காப்பு தொடர்­பான ஜனா­தி­ப­தியின் சிரேஷ்ட ஆலோ­ச­கரும் ஜனா­தி­ப­தியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம்.அதாவுல்லா, அலி சாஹிர் மௌலானா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏம்.எம்.ஹிஸ்புல்லாஹ், புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசல் தலைவர் கே.எல்.எம்.பரீத், மௌலவி இல்ஹாம், முன்னாள் காத்தான்குடி நகரசபை தலைவர் ஏ.எச்.எம்.அஸ்பர், காத்தான்குடி பள்ளிவாசல் தலைவர் ஏ.எம்.தௌபீக், பிரதேசவாசிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.