இந்திய வெளிவிவகார அமைச்சர் முஸ்லிம் தரப்பை புறக்கணித்தாரா?

0 51

இந்­தி­யாவின் வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக கலா­நிதி எஸ். ஜெய்­சங்கர் இரண்­டா­வது தட­வை­யாக அந்­நாட்டு பிர­தமர் நரேந்­திர மோடி­யினால் நிய­மிக்­கப்­பட்டார்.

இந்த நிய­ம­னத்­தினைத் தொடர்ந்து அவ­ரது முத­லா­வது வெளி­நாட்டு விஜயம் இலங்­கைக்­கா­ன­தாக அமைந்­தி­ருந்­தது. எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி இலங்­கைக்கு மேற்­கொள்­ள­வுள்­ள­தாக எதிர்­பார்க்­கப்­படும் விஜயம் தொடர்­பான முன்­னேற்­பா­டு­களை ஆரா­யவே ஜெய்­சங்கர் கொழும்பு வந்­த­தாக இலங்கை அர­சாங்­கத்தின் தகவல்கள் தெரி­வித்­தன.

எனினும், நரேந்­திர மோடியின் இலங்கை விஜயம் தற்­போது ஒத்­திப்­போ­டப்­பட்­டுள்­ள­தாக ஆங்­கில ஊட­க­மொன்று அண்­மையில் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது.
எவ்­வா­றா­யினும், இந்த ஒரு நாள் விஜ­யத்தின் போது இந்­தி­யாவின் நிதியில் தற்­போது இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­படும் திட்­டங்கள் தொடர்பில் அவர் கலந்­து­ரை­யா­டி­ய­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

குறிப்­பாக வடக்கில் அமை­ய­வுள்ள அதானி நிறு­வ­னத்தின் காற்­றாலை மின்உற்­பத்தி நிலை­யங்கள் மற்றும் திரு­கோ­ண­ம­லையில் நிறு­வப்­ப­ட­வுள்ள கைத்­தொழில் வலயம் ஆகி­ய­வற்றிற்கு இந்த விஜ­யத்தின் போது முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட்­டுள்­ளன.

ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க, பிர­தமர் தினேஷ் குண­வர்த்­தன, வெளி­வி­கார அமைச்சர் அலி சப்ரி, எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாசா மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ஆகி­யோரை சந்­தித்­து பேச்சு நடத்­தினார்.

எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­ட­னான சந்­திப்பின் போது, ஐக்­கிய மக்கள் கூட்­ட­ணியில் அங்கம் வகிக்கும் கட்­சி­களின் தலை­வர்­க­ளான ரவூப் ஹக்கீம், ஜீ.எல்.பீரிஸ், வீ.ராதா­கி­ருஷ்ணன் மற்றும் பி.திகாம்­பரம் உள்­ளிடோர் கலந்­து­கொண்­டனர்.

எனினும், சுக­யீனம் கார­ண­மாக மனோ கணே­சனும், மன்­னாரில் தங்­கி­யி­ருந்­த­மை­யினால் றிசாத் பதி­யு­தீனும் இந்த சந்­திப்பில் பங்­கேற்­க­வில்லை. இதே­வேளை, பாரா­ளு­மன்­றத்­தினைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் தமிழ் மற்றும் மலை­யக எம்.பிக்­களை இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சந்­தித்துப் பேச்சு நடத்­தி­யுள்ளார்.

கட்சி வேறு­பா­டு­க­ளுக்கு அப்பால் வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள தமிழ் எம்.பிக்­க­ளையும், மலை­ய­கத்­தி­லுள்ள தமிழ் எம்.பிக்­க­ளையும் இரு குழுக்­க­ளாகச் சந்­தித்து பேச்சு நடத்­தி­யி­ருந்தார்.

வழ­மை­யாக இலங்கை வரும் நேரங்­களில் எல்லாம் முஸ்லிம் கட்­சி­களின் பிர­தி­நி­தி­களை சந்­தித்து பேச்சு நடத்தும் கலா­நிதி ஜெய்­சங்கர், இந்த முறை முஸ்லிம் எம்.பிக்­களை சந்­திக்­காமல் சென்­றமை பாரிய கேள்­விக்­குறியினை தோற்­று­வித்­துள்­ளது.

கடந்த சில வரு­டங்­க­ளாக இலங்­கை­யி­லுள்ள முஸ்­லிம்கள் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளையும் சவால்­க­ளையும் முகங்­கொ­டுத்து வரு­கின்­றனர். தமிழ் சமூகம் எதிர்­நோக்­கி­யதைப் போன்ற பிரச்­சி­னை­களை வர­லாற்று நெடுங்­கிலும் முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்கி வரு­கின்­றது.

குறிப்­பாக தற்­போது கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பல செயற்­பா­டுகள் நேர­டி­யா­கவும், மறை­மு­க­மா­கவும் இடம்­பெற்று வரு­கின்­றன. இவ்­வா­றான நிலையில் இந்த சமூ­கத்தின் பிரச்­சி­னைகள் தொடர்பில் அயல் நாடான இந்­தியா செவி­ம­டுக்க வேண்­டி­யது கட்­டாயத் தேவை­யாகும்.

அதற்­காக வேண்டி சில முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளை­யா­வது இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சந்­தித்­தி­ருக்க வேண்டும். மாறாக தமிழ் மற்றும் மலை­யக சமூகத்­தினைச் சேர்ந்த எம்.பிக்­களை மாத்­திரம் சந்­தித்து விட்டு முஸ்லிம் எம்.பிக்­களை சந்­திக்­காமல் சென்­றமை பாரிய கவ­லை­ய­ளிக்கும் செயற்­பா­டா­க­வுள்­ளது.

இதனால், எதிர்க்­கா­லத்தில் இலங்­கைக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யங்­களை மேற்­கொள்ளும் இந்­திய அர­சாங்­கத்தின் பிர­தி­நி­திகள் கட்­டாயம் முஸ்லிம் சமூகத் தலை­வர்­களை சந்­திக்க வேண்டும். இதற்கு தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் கொழும்­பி­லுள்ள இந்­திய உயர் ஸ்தானி­க­ரா­ல­யமும் உயர் ஸ்தானி­க­ரும் மேற்­கொள்ள வேண்­டி­யது கட்­டாயத் தேவை­யாகும்.

எவ்­வா­றா­யினும், இந்த விட­யத்தில் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் அதிக அக்­கறை செலுத்த வேண்டும். முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­களை ஏனைய அர­சியல் தலை­வர்­க­ளுடன் சென்று பேசமால், தனி­யாகச் சென்று பேசு­வ­தற்கு தேவை­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும்.

குறிப்­பாக முஸ்லிம் தலை­வர்­களை இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சந்­திக்­காமை மிகவும் கவ­லை­ய­ளிக்­கின்­றது. இது தொடர்பில் அவ­ருக்கு கடி­த­மொன்றை எழு­த­வுள்­ள­தாக அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வ­ரான றிசாத் பதி­யுதீன், ஊடகவியலாளரொருவரிடம் கூறியுள்ளார். இந்த விடயம் மிகவும் அவசியமான தொன்றாகும். ஆனால் எந்தளவு நடக்கும் என்பது தான் கேள்விக்குறியாகும். எவ்வாறாயினும், இலங்
கைக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற் கொள்ளும் சர்வதேச தலைவர்களை இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பிரதிதிகள் சந்தித்து இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை முன் வைக்க வேண்டியது அவர்களின் கடமையாகும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை கட்சி அரசியலை மறந்து அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.