காஸாவில் உடனடியாக யுத்த நிறுத்தம் செய்து பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும்

ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

0 102

எம்.ஐ.அப்துல் நஸார்

காஸாவில் எட்டு மாத கால யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்­டு­வரும் நோக்கில் அமெ­ரிக்கா முன்­வைத்த யுத்த நிறுத்தத் திட்­டத்­தினை திங்­க­ளன்று ஐ.நா. பாது­காப்பு சபை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. இத் தீர்­மா­னத்­திற்கு பாது­காப்பு சபையின் 15 அங்­கத்­துவ நாடு­களுள் 14 நாடுகள் ஆத­ர­வாக வாக்­க­ளித்த நிலையில் றஷ்யா மாத்­திரம் வாக்­க­ளிப்பில் பங்­கு­பற்­ற­வில்லை.

காஸா யுத்தம் தொடர்­பான வரைவு தீர்­மா­னத்தின் மீது சபை வாக்­கெ­டுப்பு நடத்­து­வது இது 11 ஆவது முறை­யாகும். இவற்றுள் மூன்று தீர்­மா­னங்கள் மாத்­தி­ரமே நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.

தீர்­மானம் 2735, மே மாதம் 31 ஆந் திக­தி­யன்று அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோ பைடனால் அறி­விக்­கப்­பட்ட மூன்று கட்ட யுத்த நிறுத்த முன்­மொ­ழி­வாகும், இதை இஸ்­ரே­லிய அதி­கா­ரிகள் ஏற்­றுக்­கொண்­ட­தாக வொஷிங்டன் கூறி­ய­துடன், ஹமா­ஸையும் அதனை ஏற்­கு­மாறு கோரப்­பட்­டுள்­ளது. ‘தாம­த­மின்­றின்­றியும் எவ்­வித நிபந்­த­னை­யின்­றியும் அதன் விதி­மு­றை­களை முழு­மை­யாக செயல்­ப­டுத்த’ இரு தரப்­பையும் அது வலி­யு­றுத்­து­கி­றது.

‘தற்­போது முன்­வைக்­கப்­பட்­டுள்ள யுத்த நிறுத்த உடன்­பாட்­டினை ஏற்­கு­மாறு ஹமா­ஸுக்கு ஒரு தெளி­வான செய்­தியை சபை அனுப்­பி­யுள்­ளது. அப்­படிச் செய்தால் யுத்தம் இன்­றைய தினமே நின்­று­விடும்’ என தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்ட பின்னர், ஐ.நா.வுக்­கான அமெ­ரிக்­காவின் பெண் தூதர் லிண்டா தோமஸ் கிரீன்பீல்ட் தெரி­வித்தார்.

‘உயிர்­களைக் காப்­பாற்­றவும், காஸா மக்­களை மீள்­நி­லைப்­ப­டுத்­தவும் குணப்­ப­டுத்­தவும் இது உதவும், இஸ்­ரே­லிய பண­யக்­கை­தி­களை அவர்­க­ளது குடும்­பங்­க­ளுடன் மீண்டும் இணைக்கும் இந்த உடன்­பாட்டில் சர்­வ­தேச சமூகம் ஒன்­று­பட்­டி­ருப்­பதை ஹமாஸ் இப்­போது பார்க்க முடியும்’ எனவும் அவர் தெரி­வித்தார்.

இந்த உடன்­பாடு ‘மிகவும் பாது­காப்­பான இஸ்­ரேலின் இருப்­புக்கு வழி­வ­குப்­ப­தோடு, லெப­னா­னு­ட­னான இஸ்­ரேலின் வடக்கு எல்­லையில் அமைதி ஏற்­ப­டவும் முன்­னேற்றம் ஏற்­ப­டவும் வாய்ப்பை ஏற்­ப­டுத்தும்’ எனவும் தோமஸ் கிரீன்பீல்ட் தெரி­வித்தார்.

‘ஹிஸ்­புல்லாஹ் அமைப்பின் அச்­சு­றுத்தல் கார­ண­மாக வடக்கு இஸ்­ரேலில் உள்ள மக்கள் தமது வீடு­களில் இருந்து இடம்­பெ­யர்ந்­துள்ள நிலை­மை­யினை நாம் மறக்க முடி­யாது. ஈரானின் ஆத­ர­வு­ட­னான பயங்­க­ர­வாத குழுக்­களின் இந்த தாக்­கு­தல்கள் நிறுத்­தப்­பட வேண்டும்’ எனவும் அவர் சுட்டிக் காட்­டினார்.

ஹமா­ஸினால் ஆரம்­பிக்­கப்­பட்ட இந்த யுத்­தத்தில் பலஸ்­தீன மக்கள் நரக வேத­னை­யினை அனு­ப­வித்­தி­ருக்­கி­றார்கள் எனத் தெரி­வித்த அவர் அந்த மக்கள் மீள இயல்­பு­நி­லைக்குத் திரும்­பு­வ­தற்கு வாய்ப்பு ஏற்­பட்­டுள்­ளது. அதனை ஹமாஸ் அந்த மக்­க­ளுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் எனவும் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

இத் தீர்­மா­னத்தில் குறித்துக் காட்­டப்­பட்­டுள்ள திட்­டத்தின் ஒரு கட்­டத்தில், ‘உட­ன­டி­யா­னதும், முழு­மை­யா­ன­து­மான யுத்த நிறுத்­தத்தைச் செய்தல், இதன்­போது பெண்கள், முதி­ய­வர்கள் மற்றும் காய­ம­டைந்­த­வர்கள் உட்­பட பண­யக்­கை­தி­களை விடு­வித்தல், கொல்­லப்­பட்ட சில பண­யக்­கை­தி­களின் உடல்­களை ஒப்­படைத்தல், பலஸ்­தீன கைதி­களின் விடு­விப்பு என்­பன இடம்­பெறும்.

இது தவிர ‘காஸாவில் உள்ள மக்கள் வாழும் பகு­தி­க­ளி­லி­ருந்து இஸ்ரேல் தனது படை­களை விலக்கிக் கொள்ள வேண்டும், பலஸ்­தீனப் பொது­மக்கள் தமது வீடுகள் மற்றும் வடக்குப் பகு­திகள் உட்­பட காஸாவின் அனைத்துப் பகு­தி­க­ளிலும் சுற்­றுப்­பு­றங்­க­ளுக்கும் மீளத் திரும்ப வேண்டும், அத்­துடன் மனி­தா­பி­மான உத­வி­களை பாது­காப்­பா­கவும் தொட­ரா­கவும் விநி­யோ­கிக்­கவும்’ நட­வ­டிக்கை எடுக்க கோரப்­பட்­டுள்­ளது. சர்­வ­தேச சமூ­கத்தால் வழங்­கப்­படும் வீடுகள் உட்­பட, காஸா பகுதி முழு­வதும் தேவைப்­படும் அனைத்து வச­தி­களும் பலஸ்­தீன மக்­க­ளுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும்.

இரண்டாம் கட்­டத்தில் ‘யுத்தம் நிரந்­த­ர­மாக முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­படல், காஸாவில் இருக்கும் ஏனைய அனைத்து பண­யக்­கை­தி­க­ளையும் விடு­விப்­ப­தற்கு பக­ர­மாக, காஸா­வி­லி­ருந்து இஸ்­ரே­லியப் படை­களை முழு­மை­யாக திரும்பப் பெறுதல்’ ஆகி­யவை அடங்கும்.

மூன்றாம் கட்­டத்தில் ‘காஸா­விற்­கான பாரிய நீண்ட கால புன­ர­மைப்புத் திட்டம் மற்றும் காஸாவில் மேலும் உயி­ரி­ழந்த பண­யக்­கை­தி­களின் உடல்கள் இருப்பின் அவற்றை குடும்­பங்­க­ளிடம் ஒப்­ப­டைத்தல்’ ஆகி­யன அடங்கும்.

முதல் கட்­டத்தின் போது இரு தரப்­புக்கும் இடை­யி­லான பேச்­சு­வார்த்­தைகள் ஆறு வாரங்­க­ளுக்கு மேல் இடம்­பெற வேண்டும் எனவும், பேச்­சு­வார்த்­தைகள் தொடரும் வரை போர் நிறுத்தம் தொடர வேண்டும் என இத் தீர்­மா­னத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தோடு, அமெ­ரிக்கா, எகிப்து மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் பேச்­சு­வார்த்­தை­களை உறுதி செய்ய தயா­ராக இருப்­ப­தையும் அனைத்து உடன்­பா­டு­களும் எட்­டப்­பட்டு, இரண்டாம் கட்டம் தொடங்கும் வரை தொடர்­வ­தற்­கான இணக்­கத்­தையும் வர­வேற்­றுள்­ளது.

காஸாவின் நிலப்­ப­ரப்பைக் குறைக்கும் நட­வ­டிக்­கைகள் உட்­பட, காஸா பகு­தியில் எந்­த­வொரு மக்­கள்­தொகை மாற்றம் அல்­லது பிராந்­திய மாற்­றத்தை ஏற்­ப­டுத்து­வதை இத் தீர்­மானம் நிரா­க­ரிப்­ப­தோடு இரு நாடுகள் என்ற தீர்­வுக்­கான உறு­திப்­பாட்டை மீண்டும் வலி­யு­றுத்­து­கி­றது, மேலும் காஸா பள்­ளத்­தாக்குப் பகு­தி­யினை பலஸ்­தீன அதி­கா­ர­ச­பையின் கீழுள்ள மேற்கு கரை­யுடன் ஒன்­றி­ணைப்­பதன் முக்­கி­யத்­து­வத்­தையும் வலி­யு­றுத்­து­கி­றது.

‘நாங்கள் பல மாதங்­க­ளாக இத­னைத்தான் கூறி வரு­கின்றோம், காஸாவில் நிலவும் துயரம் முடி­வுக்கு வர வேண்டும்’ என வாக்­கெ­டுப்பின் பின்னர் சபை உறுப்­பி­னர்கள் மத்­தி­யில உரை­யாற்­றிய ஐ.நா.வுக்­கான ஸ்லோவே­னி­யாவின் பெண் பிரதி நிரந்­தரப் பிர­தி­நிதி, ஒண்­டினா ப்ளோகர் ட்ரோபிக் தெரி­வித்தார்.

‘பண­யக்­கை­தி­களை உட­ன­டி­யாக விடு­விக்­கு­மாறு நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரு­கிறோம். எவ்­வா­றா­யினும், கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று அக­திகள் முகாமில் இடம்­பெற்­றதைப் போன்று, பண­யக்­கை­தி­களை விடு­விப்­ப­தற்கு இரா­ணுவ நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு நூற்­றுக்­க­ணக்­கான பொது­மக்­களைக் கொன்று காயப்­ப­டுத்­து­வது. மீள இயல்­பு­நி­லையை ஏற்­ப­டுத்­தாது, பண­யக்­கை­திகள் மீட்பு நட­வ­டிக்­கை­க­ளின்­போது சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்டம் மற்றும் மனித உரி­மைகள் சட்­டத்தின் கோட்­பா­டுகள் பின்­பற்­றப்­பட வேண்டும்’ எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

போரின் போது இடம்­பெற்ற பல அட்­டூ­ழி­யங்­க­ளையும் பயங்­க­ரங்­க­ளையும் பட்­டி­ய­லிட்ட ட்ரோபிக் ‘பெண்கள், குழந்­தைகள், ஊன­முற்றோர் மற்றும் முதி­ய­வர்கள் உட்­பட பொது­மக்­க­ளுக்கு உதவி மறுக்­கப்­பட்­டமை, மனி­தா­பி­மான மற்றும் ஐநா பணி­யா­ளர்கள் கொல்­லப்­பட்­டமை, ஐநா வளாகம் குறி­வைக்­கப்­பட்­டமை, வைத்­தி­ய­சா­லைகள் முற்­று­கை­யி­டப்­பட்­டமை, மயக்க மருந்து வழங்கப்படாமல் குழந்தைகளின் மூட்டுகள்; அகற்றப்பட்டமை, உரிய உதவியின்றி நிகழும் பிரசவங்கள், பாரிய மனிதப் புதைகுழிகள், காஸா மற்றும் இஸ்ரேலில் உள்ள பொதுமக்கள் பகுதிகள் குறிவைக்கப்பட்டு, தாக்கப்பட்டு அழிக்கப்பட்டமை – இவ்வாறான சம்பவங்கள் எதுவும் மீண்டும் நடைபெறக்கூடாது’ எனத் தெரிவித்தார்.

‘இந்தப் போரின் போது பிறந்த குழந்தைகளுள் பலர் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்துள்ளனர் என்பது இந்தச் சபை தடுத்திருக்க வேண்டிய ஒன்றாகும், இந்த காரணத்திற்காகவே நாம் மீண்டும் ஒருமுறை உடனடி யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறோம். இது ஒரு விரிவான தீர்வை அடைவதற்கான முதல் படியாகும்’ எனவும் அவர் தெரிவித்தார்.-  Vidivelli

Leave A Reply

Your email address will not be published.