திருமலை மாணவிகள் 70 பேரின் பெறுபேறுகள் வெளிவருமா? வராதா?

0 57

எப்.அய்னா

பரீட்சை திணைக்­க­ளத்­தினால் கல்விப் பொதுத்­த­ரா­தர உயர்­தரப் பரீட்சை முடி­வுகள் வெளி­யி­டப்­பட்­ட­போது, திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் உள்ள பிர­தான முஸ்லிம் பாட­சா­லை­யான ஸாஹிரா கல்­லூரி மாண­வர்­களில், 70 மாண­வி­களின் பரீட்சை பெறு­பே­றுகள் மட்டும் இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்த நிலையில், அந்த நட­வ­டிக்கை பெரும் சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன. எனினும் உயர்­தரப் பரீட்சை முடி­வுகள் வெளி­யி­டப்­பட்டு இரு வாரங்கள் கடந்­துள்ள நிலையில், இந்த 70 மாண­வி­களின் பெறு­பே­றுகள் தொடர்­பி­லான விவ­கா­ரத்தில் இன்னும் தீர்வு கிட்­ட­வில்லை.

உயர்­தரப் பரீட்சை முடி­வுகள் தொடர்­பி­லான மீள் திருத்த விண்­ணப்­ப­மா­னது கடந்த 5 ஆம் திகதி முதல் எதிர்­வரும் 19 ஆம் திகதி வரை­யி­லான காலப்­ப­கு­திக்குள் மட்­டுமே ஏற்­றுக்­கொள்­ளப்­படும் என பரீட்­சைகள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. அவ்­வாறு எனில் மீள் திருத்த விண்­ணப்ப காலப்­ப­குதி கூட இன்னும் 6 நாட்­களில் நிறை­வ­டையும் நிலையில், திரு­மலை ஸாஹிரா கல்­லூரி மாண­விகள் 70 பேரின் அடிப்­படை பெறு­பே­றுகள் கூட இது­வரை வெளி­யி­டப்­ப­டாமை கவ­லை­ய­ளிக்­கி­றது.

இந்த விடயம் பாரா­ளு­மன்­றத்­திலும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் கேள்­விக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட நிலையில், கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த மற்றும் ஜனா­தி­ப­தியின் கவ­னத்­துக்கும் கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் மக்கள் பிர­தி­நி­திகள் இந்த விட­யத்தில் அர­சியல் ரீதி­யி­லான முயற்­சி­களை முன்­னெ­டுத்தும் இது­வரை பெறு­பே­றுகள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

எனவே குறித்த மாண­வி­களின் பெற்­றோரும், பாட­சாலை அபி­வி­ருத்திக் குழு உள்­ளிட்ட பாட­சாலை மாண­வி­களும் பெறு­பே­று­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான அடுத்த கட்ட நட­வ­டிக்கை தொடர்பில் ஆராய வேண்டும்.

உண்­மையில் இந்த விட­யத்தில் பரீட்சை மண்­ட­பத்தில் இடம்­பெற்ற பல நிகழ்­வுகள், புனித ஜோசப் பரீட்சை மண்­ட­பத்தின் பொறுப்­ப­தி­காரி மற்றும் மூதூரைச் சேர்ந்த மேல­திக உதவி அதி­கா­ரியின் நட­வ­டிக்கை குறித்து பாரிய சந்­தே­கங்கள் எழுப்­பப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக வேறு பாட­சா­லை­களைச் சேர்ந்த 10 முஸ்லிம் மாண­வி­களும் அதே மண்­ட­பத்தில் பரீட்சை எழு­தி­யுள்­ளனர். அவர்­களின் பெறு­பே­றுகள் வெளி­யா­கி­யுள்­ளன. இவற்றை பார்க்­கும்­போது, திரு­ம­லை ­ஸா­ஹி­ரா ­கல்­லூரி திட்­ட­மிட்டு பழி­வாங்­கப்­பட்­டுள்­ளது என பாட­சாலை சமூ­கத்­தினர் தெரி­விக்­கின்­றனர். எனவே இந்த விட­யத்தின் பார­தூர தன்­மையை விளங்கி நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படல் வேண்டும்.

இந்த நிலையில் கடந்த 9 ஆம் திகதி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வ­ரு­மான‌ ரிஷாத் பதி­யுதீன் திரு­மலை சாஹிரா கல்­லூ­ரிக்கு சென்று, அங்கு பாதிக்­கப்­பட்ட மாண­விகள் பெற்றோர் மற்றும் அதிபர் உள்­ளிட்ட பாட­சாலை சமூ­கத்­துடன் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார்.
அதே நேரம் நேற்று (12) பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் மு.கா. தலை­வ­ரு­மான ரவூப் ஹக்கீம் கல்வி அமைச்­சுக்கு சென்று பேச்சு நடாத்­தி­யுள்ளார்.

இந்த சந்­திப்பின் பின்னர் ஊட­கங்­க­ளிடம் பேசிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரிஷாத் பதி­யுதீன்,
“உயி­ரியல் விஞ்­ஞானம் மற்றும் கணிதப் பிரி­வு­களில் தோற்­றிய இந்த மாண­வி­களின் பரீட்சை பெறு­பே­றுகள் இடை­நி­றுத்­தப்­பட்டு, இது­வரை வெளி­வ­ரா­துள்­ளன. இதனால், இந்த மாண­விகள் வேத­னை­யு­டனும் மன உளைச்­ச­லு­டனும் இருக்­கின்­றனர். திட்­ட­மிட்டு இந்தச் சதி இடம்­பெற்­றுள்­ளது. சுமார் பத்து வரு­டங்­க­ளாக, தொடர்ச்­சி­யாக வைத்­தி­யர்­க­ளையும் பொறி­யி­ய­லா­ளர்­க­ளையும் உரு­வாக்கி வரும் திரு­ம­லை ­ஸா­ஹி­ரா ­கல்­லூ­ரியின் மீது, குறி­வைத்து இன­வாதம் பாய்ந்­துள்­ளது. இந்தப் பாட­சா­லையில் உள்ள திற­மை­யான மாண­வர்­களை இருட்­ட­டிப்புச் செய்யும் நோக்கில், தவ­றி­ழைக்­காத இவர்கள் தண்­டிக்­கப்­பட்­டுள்­ளனர்.

பரீட்சை பிரதி ஆணை­யா­ள­ருடன் பேசினேன். அடுத்த வாரத்­துக்குள் குறித்த மாண­வி­களின் பெறு­பே­றுகள் வெளி­யாகும் என்று அவர் கூறி­யி­ருக்­கின்றார். அவ்­வாறு பெறு­பே­றுகள் வரா­விட்டால் பாரா­ளு­மன்­றத்­துக்­குள்ளும் வெளி­யேயும் குரல் கொடுப்போம். நீதி­மன்­றத்­தையும் நாடுவோம். எங்­க­ளா­லான அனைத்து முயற்­சி­க­ளையும் மேற்­கொள்வோம்” என்று கூறினார்.

உண்­மையில் பரீட்சை எழுத பர்தா அணிந்து சென்ற மாண­வி­க­ளுக்கு அவர்­க­ளது காதையும் முகத்­தையும் காட்­டு­மாறு கூறப்­பட்­டுள்­ளது. பரீட்சை திணைக்­கள சுற்­று­நி­ரு­பத்­துக்கு அமைய இதற்­கான கட்­டளை பரீட்சை மண்­டப மேற்­பார்­வை­யா­ளரால் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அம்­மா­ண­விகள் அக்­கட்­ட­ளை­களை பின்­பற்­றி­யுள்­ள­தாக கூறு­கின்­றனர். 70 மாண­வி­களில் 68 மாண­வர்கள் பர்­தாவை கழட்­டி­விட்டு, கையில் வைத்­தி­ருந்த துப்­பட்­டா­வினால் தலையை மறைத்­துக்­கொண்டு பரீட்சை எழு­தி­யுள்­ளனர். ஏனைய இரு மாண­வி­களும் தமது பர்­தாவை கழட்­டி­விட்டு, அதை மீண்டும் தலையில் போட்­டுள்­ளனர். எல்­லோரும் காதையும் முகத்­தையும் காட்­டி­ய­வர்­க­ளா­கவே அம்­மா­ண­விகள் பரீட்சை எழு­தி­யுள்­ளனர். இவ்­வா­றான நிலை­யிலும் மேல­தி­கா­ரி­களில் ஒருவர் மாண­வி­களை பார்த்து, உங்­க­ளது பரீட்சை பெறு­பே­றுகள் வரு­வது நிச்­சயம் இல்லை என்று கூறி­யுள்ளார்.

இந்த நட­வ­டிக்­கை­யா­னது மாண­வி­களை மறை­மு­க­மாக அச்­சு­றுத்தும் நட­வ­டிக்கை மட்­டு­மன்றி அவர்கள் பரீட்சை எழு­து­வ­தற்­கான சூழலை மாற்றி அவர்­களை நெருக்­க­டிக்குள் அல்­லது அழுத்­தத்­துக்குள் தள்ளும் நட­வ­டிக்­கையும் கூட. இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக பரீட்சை மண்­டப பொறுப்­ப­தி­காரி உள்­ளிட்ட விட­யத்­துடன் தொடர்­பு­பட்­டோ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை அவ­சி­ய­மாகும்.

அத்­துடன், பரீட்சை முடி­வ­டைந்து சில நாட்­களின் பின்னர், குறித்த மாண­விகள் கொழும்பில் உள்ள பரீட்சை திணைக்­க­ளத்­துக்கு விசா­ர­ணைக்கு வரு­மாறு அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர். எனினும், சிலரின் வேண்­டு­கோ­ளுக்கு அமைய முடி­வுகள் மாற்­றப்­பட்டு, ஒரு சில பரீட்சை திணைக்­கள அதி­கா­ரிகள் திரு­கோ­ண­ம­லைக்கு  வருகை தந்து விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ளனர்.

விசா­ர­ணைகள் முடி­வ­டைந்த பின்னர், மாண­விகள் தவ­றி­ழைத்­த­தாக எழுத்து மூலம் எழு­தித்­த­ரு­மாறு மாண­வி­களை அதி­கா­ரிகள் பணித்­துள்­ளனர்.

எனினும், மாண­விகள் தாம் தவ­றி­ழைக்­க­வில்லை என்றும் இவ்­வா­றான குற்­றச்­சாட்­டுகள் தவ­றா­னது என்றும் எழுதிக் கையொப்­ப­மிட்­டுள்­ளனர். ‘பரீட்சை ஆணை­யாளர் என்ன முடி­வெ­டுத்­தாலும் அதற்குக் கட்­டுப்­ப­டுவோம்’ என்று எழுதித் தரு­மாறும் மாண­விகள் பணிக்­கப்­பட்­டுள்­ளனர். அவ்­வாறு எழுத முடி­யாது என மாண­விகள் மறுத்­த­போது, ‘அவ்­வாறு எழு­தித்­த­ரா­விட்டால் உங்­க­ளது பரீட்சை பெறு­பே­றுகள் வெளி­வ­ராது’ என அதி­கா­ரிகள் அவர்­களை அச்­சு­றுத்தி, வற்­பு­றுத்­தி­யதன் பின்­னரே, மாண­வியர் விசா­ரணை அதி­கா­ரிகள் கூறி­ய­வாறு எழு­திக்­கொ­டுத்­துள்­ள­தாக மாண­விகள், அவர்­க­ளது பெற்­றோரை சந்­தித்த பின்னர் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் ரிஷாத் பதி­யுதீன் ஊட­கங்­க­ளிடம் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

உண்­மையில் பரீட்சை மண்­ட­பத்தில் வைத்து மட்­டு­மல்­லாது, அது தொடர்பில் விசா­ரணை செய்­ய­வென வந்த பரீட்சை திணைக்­கள அதி­கா­ரி­களும் மாண­வி­களை அச்­சு­றுத்­தி­யுள்­ள­தா­கவே தெரி­கின்­ற‌து. எனவே மக்கள் பிர­தி­நி­திகள் வெறு­மனே அர­சியல் ரீதி­யி­லான பேச்­சுக்­க­ளோடு நின்று விடாது இத்­த­கைய அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக சட்ட ரீதி­யி­லான நட­வ­டிக்­கை­க­ளுக்கு ேச்சுக்களோடு நின்று விடாது இத்தகைய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட ரீதியிலான நடவடிக்கைகளுக்கு முன்வர வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த, பரீட்சைகள் ஆணையாளர் என பொறுப்பு வாய்ந்த தரப்பினருடன் பேச்சுக்கள் நடாத்தப்ப‌ட்டும் இதுவரை குறித்த 70 மாணவிகளின் பெறுபேறுகள் வெளியிடப்படாத நிலையில், மேன் முறையீட்டு நீதிமன்றில் எழுத்தாணை மனு தாக்கல் செய்து பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கலாம்.
அதே நேரம் பெறுபேறுகள் இனி மேல் வெளியிடப்பட்டாலும், நடந்த அநீதிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறையிடுவதுடன், உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்து, எதிர்காலத்தில் இவ்வாறான அநீதிகள் நடக்காவண்ணம் பரிந்துரைகளையும், இழப்பீடுகளையும் பெற்றுக்கொள்ள முன்வர வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.