பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனை குழுவின் உறுப்பினராக முஜிபுர்

0 116

(எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்)
பாது­காப்பு அலு­வல்கள் பற்­றிய அமைச்­சுசார் ஆலோ­சனைக் குழுவில் பணி­யாற்ற பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹுமான் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக சபா­நா­யகர் அறி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்­று­முன்­தினம் சபா­நா­ய­கரின் அறி­விப்­பின்­போதே அவர் இதனை தெரி­வித்தார்.

சபா­நா­யகர் தனது அறி­விப்­பின்­போது, பாரா­ளு­மன்ற நிலை­யியற் கட்­டளை 112 இன் ஏற்­பா­டுகள் மற்றும் 2024 பெப்­ர­வரி 09 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்­தினால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட பிரே­ரணை என்­ப­ன­வற்­றிற்கு அமை­வாக, பாது­காப்பு அலு­வல்கள் பற்­றிய அமைச்­சுசார் ஆலோ­சனைக் குழுவில் பணி­யாற்­று­வ­தற்­காக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹுமான் தெரிவுக் குழு­வினால் பெயர்­கு­றித்து நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

அத்­துடன் வர்த்­தக, வாணிப மற்றும் உணவுப் பாது­காப்பு அலு­வல்கள் பற்­றிய அமைச்­சுசார் ஆலோ­சனைக் குழு மற்றும் பொரு­ளா­தார உறு­திப்­ப­டுத்தல் பற்­றிய குழுவில் பணி­யாற்­று­வ­தற்­கா­கவும் முஜிபுர் ரஹுமான் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.