திருமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும்

சபையில் கல்வி அமைச்சர் சுசில் சபையில் உறுதியளிப்பு

0 142

(எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்)
திரு­கோ­ண­மலை சாஹிரா பாட­சாலை மாண­வி­களின் உயர்­தர பரீட்சை பெறு­பே­று­களை விரை­வாக வெளி­யிட நட­வ­டிக்கை எடுப்போம். அது தொடர்­பான நட­வ­டிக்கை தற்­போது இடம்­பெ­று­கி­றது என கல்வி அமைச்சர் சுசில் பிரே­ம­ஜ­யந்த தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்கிழமை இடம்­பெற்ற நாட்டின் கல்வி நட­வ­டிக்­கைகள் குறித்த பிரச்­சினை தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு வேளை விவா­தத்தின் போது முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எழுப்­பிய கேள்வி ஒன்­றுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

இதற்கு அமைச்சர் தொடர்ந்து பதி­ல­ளிக்­கையில், மாண­வர்­களின் பரீட்சை பெறு­பேறு தொடர்பில் பல இடங்­க­ளுக்கும் எடுத்­துக்­கூ­றி­ய­போது அதற்கு அவர்கள் இணக்கம் தெரி­வித்­தி­ருக்­கி­றார்கள். திரு­கோ­ண­மலை பாட­சாலை மாண­வர்கள் தொடர்­பான பிரச்­சினை வந்­த­போது, அது தொடர்­பான தக­வல்­களை பெற்­றுக்­கொண்டோம். அது தொடர்பான விசாரணை முடிவுக்கு கொண்டுவந்து, மாணவர்களின் பெறுபேற்றினை விரைவாக வெளியிட நடவடிக்கை எடுப்போம் என்றார்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.