மாணவர்களுக்கான சீருடை வவுச்சர் பெப்ரவரி 28 வரை செல்லுபடியாகும்

0 686

பாடசாலை மாணவர்களுக்காக சீருடை வவுச்சரை நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில, ஆட்சிக்கு வந்த சட்டவிரோத அரசாங்கம் வவுச்சர் விநியோகத்தை இடைநிறுத்தியது. இதன்காரணமாக பாடசாலை மாணவர்களின் அடுத்த ஆண்டுக்கான சீருடை வவுச்சர் இன்னும் கிடைக்கவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை கல்வியமைச்சில் கடமைகளை பொறுப்பேற்ற கல்வியமைச்சர்  அகிலவிராஜ் காரியவசம், இது தொடர்பாக அதிகாரிகளை அழைத்து விசாரித்ததையடுத்து பாடசாலை விடுமுறை நிறைவடைவதற்கு முன்னர் சீருடை வவுச்சர்களை துரிதமாக பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்குமாறு  அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அத்துடன் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த வவுச்சர் செல்லுபடியாகும் கால எல்லையை பெப்ரவரி 28 ஆம் திகதி வரை நீடிக்குமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

பாடப் புத்தகங்களை விடுமுறைக்கு முன்னர் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.  சட்ட விரோத ஆட்சி காலப்பகுதியின்போது பாடபுத்தக விநியோகமும் தடைப்பட்டிருந்தது. கல்வியமைச்சரின் வாழ்த்து செய்தி பாடப் புத்தகங்களில் உட்சேர்க்கப்பட்ட காரணத்தை மையப்படுத்தி பாடபுத்தக விநியோகம் தாமதமாகியது. அத்துடன் அச்சிடுவதற்கு எத்தனித்த பாட புத்தகங்களில் கல்வி அமைச்சரின் வாழ்த்துச் செய்தியை நீக்குமாறும் அப்போதை ஆட்சியாளர்கள் ஆலோசனை வழங்கியிருந்தனர்.

இதன்படி தாமதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான பாடபுத்தக விநியோகத்தை துரிதப்படுத்துமாறும் பாடசாலை மாணவர்களின் கல்வியுடன் அரசியலை தொடர்புப்படுத்தக் கூடாதென சுட்டிக்காட்டிய அமைச்சர், கல்வியின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட அனைத்து செயற்றிட்டங்களை துரிதமாக

முன்னெடுத்து செல்லுமாறும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

மாணவர்களுக்கான சுரக் ஷா காப்புறுதித் திட்டம், அருகாமை பாடசாலை சிறந்த பாடசாலை, 13 வருட கட்டாய கல்வி உட்பட அனைத்து வேலைத்திட்டங்களை சரியான முறையில் சீர்செய்து தொடர்ந்து முன்னெடுத்து செல்லுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

 

Leave A Reply

Your email address will not be published.