முஸ்­லிம்­களை எதி­ரி­க­ளாக கட்­ட­மைக்கும் சதி­யா?

0 249

இந்­தி­யாவில் கைது செய்­யப்­பட்ட நான்கு முஸ்லிம் இளை­ஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வாத இயக்­கத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்றும் அவர்கள் இந்­தி­யாவில் முக்­கிய இடங்­க­ளை­யும் நபர்­களையும் இலக்கு வைத்து தாக்­குதல் நடத்த திட்­டம் தீட்­­­டி­யி­ருந்­தனர் என்றும் சந்­தே­கங்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. கடந்த இரு வார கால­மா­க இது தொடர்­பான செய்­தி­கள் இந்­திய மற்றும் இலங்­கை ஊட­கங்­களை ஆக்­கி­ர­மி­த்­துள்­ள­ன.

இவர்­க­ளுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­புடன் தொடர்புள்ள­தாக இந்­திய அதி­கா­ரி­கள் குறிப்­பிட்­டுள்ள போதி­லும் இலங்­கையின் பாது­காப்புத் தரப்­பினர் இது­வரை இக்­குற்­றச்­சாட்டை உறுதிப்­ப­டுத்­த­வில்லை. கடந்த இரு வார கால­மாக முன்­­னெ­டுக்­கப்­பட்டு வரும் விசா­ர­ணை­களில் இக் குற்­றச்­சாட்டை உறு­திப்­ப­­டுத்­து­வ­தற்­கான எந்­த­வித துரும்­பு­க­ளும் கிடைக்­க­வில்லை என்றே இலங்­கையின் விசா­ர­ணை­­யா­ளர்கள் கூறு­கின்­ற­னர்.

கிணறு வெட்டப் பூதம் கிளம்­பி­யது போல தீவி­ர­வாத குற்­றச்­சாட்டு தொடர்பில் விசா­ரிக்கச் சென்ற பொலி­சா­ருக்கு இவர்கள் கடந்த சில வரு­டங்­க­ளாக இந்­தி­யா­விலி­ருந்து கடத்தல் வியா­பா­ரத்தில் ஈடு­­பட்­டுள்­ள­மையும் போதைப் பொருள் தொடர்­பான குற்­றச்­சாட்­டுக்கள் முன்­னரே இவர்கள் மீது சுமத்­தப்­பட்­டுள்­ள­மை­யுமே தெரிய வந்­துள்­ளது. அத்­துடன் இவர்கள் தொடர்பில் இந்­திய பொலிசார் முன்­வைக்கும் சந்­தே­கங்கள் எவையும் இவர்­க­ளது பின்­ன­ணி­யுடன் எந்­த­வ­கை­யிலும் பொருந்திப் போக­வில்லை என்றும் பொலிசார் தெரி­விக்­கின்­ற­னர்.

இந்­தி­யா­விலும் இலங்­கை­யிலும் இந்த வருடம் தேர்தல் நடை­பெ­ற­வுள்ள நிலையில் ஐ.எஸ். பீதியைக் கிளப்­பு­வதன் ஊடாக மக்கள் மத்­தியில் மீண்டும் ‘தே­சியப் பாது­­காப்­பு’ எனும் கோஷத்தை முன்­னி­றுத்­துவ­தற்­கான ஒரு திட்­ட­மி­ட­லா­கவும் இந்தக் கைதுகள் இருக்­கலாம் என அர­சியல் விமர்­ச­கர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.

எது எப்­ப­டி­யி­ருப்­பினும் காலா­கா­ல­மாக முஸ்­லிம்­களை தீவி­ர­வா­தி­க­ளாக சித்­தி­ரிப்­பதன் மூல­மா­க தமது அரசியல் இலக்­கு­களை அடைந்து கொள்ள இவ்­விரு நாடு­க­ளிலும் உள்ள அர­சியல் தரப்­புகள் முனைந்து வரு­வது கவ­லைக்­கு­ரி­ய­தாகும். கடந்த காலங்­களில் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் மற்றும் கொவிட் காலங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்ட பொய்­ப் பிர­சா­ரங்கள் தொடர்பில் நாம் தெளி­வாக அறிந்­தி­ருக்­கிறோம். அவ்­வா­றான பிர­சா­ரங்கள் மூல­மாக முஸ்­லிம்கள் மீது அநியா­ய­மாக தீவி­ர­வாத சாயம் பூசப்­பட்­டுள்­ளது என்­பதை மக்கள் உணரத் தொடங்­கி­யுள்ள இன்­றைய நிலையில் மீண்டும் ஐ.எஸ். புர­ளியைக் கிளப்­பி­யி­ருப்­பது பலத்த சந்­தே­கத்தைத் தோற்­று­விக்­கி­ற­து. இது சமூ­கங்­கள் மத்­தியில் சந்­தே­கங்­களைத் தோற்­று­வித்து அத­னூ­டாக வாக்­கு­களைக் கொள்­ளை­ய­டிக்கும் அர­சியல் தந்­தி­ரோ­பா­யமே அன்றி வேறில்லை.

இத­னி­டையே இலங்­­கை­யில் நூற்றுக் கணக்­கான ஐ.எஸ். உறுப்­பி­னர்கள் இருக்­கி­­றார்கள் என்றும் இது தொடர்­பில் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் விசா­ரணை ஆணைக்­கு­ழு­வி­னால் புனர்­வாழ்­வ­ளிக்­கு­மாறு சிபா­ரிசு செய்­யப்­ப­டட 300 பேரின் பெயர்ப்­பட்­டி­யலில் இந்­தி­யாவில் கைதான நால்­வரின் பெயர்­களும் இருப்­ப­தா­கவும் ஊடகம் ஒன்றில் கருத்து வெளி­யிட்ட பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யாளர் ஒருவர் கைது செய்­யப்­பட்டு பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ளார். அவரது கூற்று பொய்­யா­னது என்­­ப­தாலேயே கைது செய்­யப்­பட்­ட­தாக பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.

இவ்­வாறு பொய்ப் பிரசாரம் செய்த நபர் கைது செய்­யப்­பட்­டமை வர­வேற்­கத்­தக்­க­தாகும். ஆனால் இது போன்று தினம் தினம் முஸ்­லிம்கள் மீது பொய்­யான தீவி­ர­வாத முத்­திரை குத்தும் அர­சி­யல்­வாதிகளும் கைது செய்­யப்­ப­டு­வார்­க­ளா? மதத்­த­லை­வர்கள் கைது செய்­யப்­ப­டு­வார்­களா? என்ற கேள்­விக்கும் விடை காணப்­பட வேண்­டும். கடந்த காலங்­களில் இவ்­வா­றான கட்­டுக்­க­தை­களை அவிழ்த்­து­விட்­ட­வர்­களை உட­னுக்­குடன் கைது செய்து சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தால் இன்று இவ்­வா­றான கதைகள் தோற்றம் பெறு­வதை தடுத்­தி­ருக்க முடியும். டாக்டர் ஷாபிக்கு எதி­ராக பொய்க் குற்­றச்­சாட்டை முன்­வைத்­த­வர்கள் இன்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளா­கவும் அரசியல் அதி­காரம் கொண்­ட­வர்­க­ளா­­கவும் வலம் வரு­வது இவர்­க­ளின் கண்­க­­ளுக்­குத் தெரி­ய­வில்லை போலும்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.