காலநிலை மாற்றத்திற்கு தீர்வை முன்வைப்பார்களா?

0 309

தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியா தற்­போது கடு­மை­யான வெப்­பத்­துக்கு முகங்­கொ­டுத்து வரு­கி­றது. இது வசந்த காலம் என்ற போதிலும் இப் பிராந்­தி­யத்தில் வாழும் நூற்றுக் கணக்­கான மில்­லியன் மக்கள் ஏற்­க­னவே கடு­மை­யான வெப்­ப­நி­லையை எதிர்­கொண்­டுள்­ளனர். கோடை வெப்பம் முன்­கூட்­டியே வந்து, உயிர்­களை பலி­யெ­டுத்­துள்­ளது.

கோடைக்­காலம் தொடங்கும் போது அதா­வது மே மற்றும் ஜூன் மாதங்­களில் இது மிகவும் மோச­மான தாக்­கத்தை செலுத்தும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இந்­தி­யாவின் பல பகு­தி­களில் கடந்த மாதம் அதி­க­பட்ச வெப்­ப­நிலை 110 டிகிரி பரனைட் பதி­வா­கி­யுள்­ளது. இந்­திய வானிலை ஆய்வு மையம் செவ்­வா­யன்று கிழக்கு மற்றும் தெற்கு மாநி­லங்­க­ளான ஆந்­திரா, பீகார், மேற்கு வங்­காளம் மற்றும் ஒடிசா ஆகிய மாநி­லங்­க­ளுக்கு சிவப்பு எச்­ச­ரிக்­கையை விடுத்­துள்­ளது. அங்கு ஏப்ரல் நடுப்­ப­கு­தியில் இருந்து வெப்­ப­நிலை அதி­க­ரித்து வரு­கி­றது.

தென்­கி­ழக்கு ஆசி­யா­விலும் வெப்ப அலை நிலை­மைகள் கொடூ­ர­மாக உள்­ளன. பிலிப்­பைன்ஸில் வெப்­ப­நிலை அதி­க­ரித்­ததால் ஆயி­ரக்­க­ணக்­கான பாட­சா­லைகள் மூடப்­பட்­டுள்­ளன. தாய்­லாந்தில், இந்த ஆண்டு வெப்­பத்தால் ஏற்­க­னவே 30 உயி­ரி­ழப்­புகள் பதி­வா­கி­யுள்­ளன. வியட்­நாமில், வெப்­ப­நிலை 111 டிகி­ரியை தாண்­டிய நிலையில், காட்டுத் தீ, நீரி­ழப்பு மற்றும் வெப்ப பக்­க­வாதம் ஏற்­படும் அபாயம் குறித்து தேசிய வானிலை நிறு­வனம் எச்­ச­ரித்­துள்­ளது.

இலங்­கையில், வடக்கு, வட­மத்­திய மற்றும் கிழக்கு மாகா­ணங்­க­ளிலும், மொன­ரா­கலை மாவட்­டத்­திலும் அதி­க­பட்ச வெப்­ப­நிலை மே இரண்­டா­வது வாரம் வரை 36 முதல் 37 டிகிரி செல்­சியஸ் வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்­துள்­ளது.

அதிக வெப்பம் தொடர்பில் வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்ள நிலையில், வடக்கு, வட­மத்­திய, வட­மேற்கு பகு­தி­களில் சில இடங்­களில் வெப்ப சுட்டெண் அல்­லது மனித உடலில் உண­ரப்­படும் வெப்­ப­நிலை ‘அதிக எச்­ச­ரிக்கை நிலை’ வரை அதி­க­ரிக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

எதிர்­வரும் சில தினங்­களில் இலங்­கையில் மிக வெப்­ப­மான கால­நிலை நிலவும் என மேற்கு அவுஸ்­தி­ரே­லியா பல்­க­லைக்­க­ழ­கத்தின் பேரா­சி­ரியர் சரித பட்­டி­யா­ராச்சி எச்­ச­ரித்­துள்ளார். அதிக வெப்­ப­நிலை மற்றும் ஈரப்­பதம் மற்றும் குறைந்த காற்றின் வெப்பக் குறி­யீடு 40 டிகிரி என்று அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

வடக்கு, வட­மத்­திய மற்றும் கிழக்கு மாகா­ணங்கள், குரு­நாகல் மற்றும் மொன­ரா­கலை மாவட்­டங்கள் உட்­பட 12 மாவட்­டங்கள் தீவிர வெப்ப எச்­ச­ரிக்கை நிலை­களை அனு­ப­விக்கும் பகு­தி­க­ளாக அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளன.

மேற்கு, சப்­ர­க­முவ மற்றும் தென் மாகா­ணங்கள் உட்­பட 10 மாவட்­டங்­க­ளிலும் புத்­தளம் மற்றும் மாத்­தளை மாவட்­டங்­க­ளிலும் வெப்­ப­நிலை, எச்­ச­ரிக்கை அளவை எட்­டக்­கூடும் என்று கணிக்­கப்­பட்­டுள்­ளது.

எவ்­வா­றா­யினும், கண்டி, நுவ­ரெ­லியா மற்றும் பதுளை மாவட்­டங்­களில் சாதா­ரண வெப்­ப­நிலை 27 முதல் 38 டிகிரி செல்­சியஸ் வரை இருக்கும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எனவே, வெளிப்­புற நட­வ­டிக்­கைகள் மற்றும் தொழில்­களில் ஈடு­படும் நபர்கள் தொடர்ச்­சி­யாக நீர் அருந்­து­மாறும் முடிந்­த­வரை நிழ­லான பகு­தி­களில் அடிக்­கடி ஓய்வு எடுக்­கு­மாறும் கேட்டுக் கொள்­ளப்­பட்­டுள்­ளனர்.

தற்­போது பாட­சா­லைகள் விடு­முறை என்­பதால் பிள்­ளை­களை வெளியில் அனுப்­பாது வீடு­களில் பாது­காப்­பாக வைத்­தி­ருக்­கு­மாறும் ஆலோ­சனை வழங்­கப்­பட்­டுள்­ளது.

நாட்டில் மில்­லியன் கணக்­கான மரங்­களை வளர்த்து பச்சை சூழலை உருவாக்க வேண்டிய தேவை இக்காலத்தில் வெகுவாக உணரப்படுகிறது. இது தொடர்பில் அனைவரதும் கவனம் ஈர்க்கப்பட வேண்டியது அவசியமாகும்.

குறிப்பாக எதிர்வரும் தேர்தல்களில் இலங்கை காலநிலை மாற்றத்தினால் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வுகளை முன்வைக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு அழுத்தங்கள் வழங்கப்பட வேண்டும். எதிர்கால வேலைத்திட்டங்களில் இதற்கு முன்னுரிமை வழங்காவிடின் வருடாந்தம் நாம் இவ்வாறு அதிக வெப்பத்துக்கு முகங்கொடுத்து வெந்து சாக வேண்டி வரும். – Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.