ஹஜ் குழுவுக்கு எதிராக வழக்கு

0 57

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இவ்­வ­ருடம் (2024) ஹஜ் ஏற்­பா­டு­களில் உயர் நீதி­மன்றம் வழங்­கி­யுள்ள ஹஜ் வழி­காட்­டல்கள் மீறப்­பட்டு தங்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ள­தாக ஆறு ஹஜ் முகவர் நிலை­யங்கள் உயர் நீதி­மன்றில் வழக்கு தாக்கல் செய்­துள்­ளன.

அல்­ஹிக்மா, ஹம்தான், இமாரா, ஹலீம் லங்கா, அல்­ரிபா, அல்­மாஷா ஆகிய ஆறு ஹஜ் முகவர் நிலை­யங்­களே இவ்­வ­ழக்­கினைத் தாக்கல் செய்­துள்­ளன.
இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­களில் 2013 ஆம் ஆண்டு உயர்­நீ­தி­மன்றம் வழங்­கி­யுள்ள ஹஜ் வழி­காட்­டல்கள் மீறப்­பட்­டுள்­ள­தாக தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள இரண்­டா­வது வழக்கு இது­வாகும்.

ஏற்­க­னவே வழக்­கொன்று தாக்கல் செய்­யப்­பட்டு விசா­ர­ணையின் கீழ் உள்­ளது. அவ்­வ­ழக்­கினை யுனைடட் டிரவல்ஸ் என்ட் ஹொலிடெஸ் பிரைவட் லிமிடட் எனும் ஹஜ் முகவர் நிலைய உரி­மை­யாளர் மொஹமட் லரீப் தாக்கல் செய்­துள்ளார்.

இவ்­வ­ருடம் ஹஜ் முக­வ­ராக தான் நிய­மிக்­கப்­ப­டாமை, இது தொடர்பில் மேன்­மு­றை­யீடு செய்தும் அம்­மனு விசா­ரிக்­கப்­ப­டாமல் ஹஜ் கோட்டா பகிர்ந்­த­ளித்­தமை என்ற குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்டே இவ்­வ­ழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

எனது மேன்­மு­றை­யீட்டு மனு­வினை விசா­ரித்து தீர்ப்பு வழங்­கப்­படும் வரை ஹஜ் வழி­காட்­டல்­களின் படி ஹஜ் கோட்டா பிரித்து வழங்­கப்­பட முடி­யாது எனவும் மனுவில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்று முன்­தினம் உயர் நீதி­மன்றில் இவ்­வ­ழக்கு விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. பிர­தி­வா­திகள் தரப்பின் சார்­பாக முஸ்லிம் சமய, பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் அலு­வலர் ஒருவர் ஆஜ­ரா­கி­யி­ருந்தார். வழக்கு விசா­ரணை எதிர்­வரும் 5 ஆம் திக­திக்கு ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது.

இரு வழக்­கு­க­ளிலும் பிர­தி­வா­தி­க­ளாக புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்க முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர், மற்றும் அரச ஹஜ் குழுவின் தலைவர் உட்­பட உறுப்­பி­னர்கள் பெயர் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளனர். உயர் நீதி­மன்றம் 2013 ஆம் ஆண்டு வழங்­கி­யுள்ள ஹஜ் வழி­காட்­டல்­களில் 6 வழி­காட்­டல்கள் மீறப்­பட்­டுள்­ள­தாக மனுவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இவ்­வ­ருடம் சவூதி ஹஜ் உம்ரா அமைச்சினால் 3500 ஹஜ் கோட்டா இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இக்கோட்டா நேர்முகப் பரீட்சையொன்றின் பின் தெரிவு செய்யப்பட்ட 93 ஹஜ் முகவர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.