பள்ளி நிர்வாகிகளால் முறைகேடாக வக்பு சொத்து கையாளப்பட்டால் தெரியப்படுத்துக

முறையீட்டாளர்களின் இரகசியம் பாதுகாக்கப்படும் என்கிறது வக்பு சபை

0 143

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­களால் முறை­கே­டாக கைய­ாளப்­படும் வக்பு சொத்­துகள் தொடர்பில் வக்பு சபையின் சட்ட அதி­கா­ரிக்கு தாம­தி­யாது எழுத்து மூலம் அல்­லது மின்­னஞ்சல் மூலம் தெரி­யப்­ப­டுத்­து­மாறு வக்பு சபை பொது­மக்­களைக் கோரி­யுள்­ளது.

வக்பு சபைக்கு கிடைக்­கப்­பெறும் இவ்­வா­றான முறைப்­பா­டு­களைச் செய்­ப­வர்­களின் பாது­காப்பு கருதி இர­க­சி­யத்­தன்மை பாது­காக்­கப்­படும் எனவும் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. வக்பு சொத்­துகள் முறை­கே­டாக கையா­ளப்­ப­டு­கின்­றமை தொடர்பில் ஜமா­அத்­தார்கள் தாங்கள் இனங்­கா­ணப்­பட்டு விடுவோம் எனப் பயப்­ப­டு­கி­றார்கள். இத­னாலே வக்பு சொத்­து­களின் முறை­கே­டுகள் வெளிச்­சத்­துக்கு வரு­வ­தில்லை எனவும் வக்பு சபை குறிப்­பிட்­டுள்­ளது.

பள்­ளி­வா­சல்­க­ளுக்­கு­ரிய கடைகள், கட்­டி­டங்கள் மற்றும் ஏனைய சொத்­துகள் மிகவும் குறைந்த வாட­கைக்கு பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளினால் வழங்­கப்­பட்­டுள்­ளன. பல தசாப்த கால­மாக மிகக் குறைந்த வாட­கையே பெற்­றுக்­கொள்­ளப்­ப­டு­கி­றது. இதனால் பள்­ளி­வா­சல்கள் உரிய வரு­மா­னத்தை இழந்து வரு­கின்­றன. அதனால் இவை மறு­சீ­ர­மைப்பு செய்­யப்­பட வேண்­டி­யுள்­ளது என வக்பு சபையின் உறுப்­பி­ன­ரொ­ருவர் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

இவ்­வா­றான முறைப்­பா­டு­களை முன்­வைக்கும் ஜமா­அத்­தார்கள் தங்கள் பெயர், விலாசம், தொடர்­பு­கொள்­ளக்­கூயை தொலை­பேசி இலக்கம், மின்­னஞ்சல் முக­வரி, வட்ஸ்அப் போன்ற விப­ரங்­களை தெளி­வாக குறிப்­பிட வேண்டும் எனவும் கேட்­கப்­ப­டு­கின்­றார்கள். முறை­ப்பாடு செய்­ப­வர்­களின் விப­ரங்கள் இர­க­சி­ய­மாக பேணப்­படும் எனவும், பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட மாட்­டாது எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பள்­ளி­வாசல் நிர்­வாகம்
பள்­ளி­வா­சல்­களின் நிர்­வாக கால எல்லை சுமார் 3 வரு­டங்­க­ளாகும். அநேக பள்­ளி­வா­சல்கள் இக்­கால எல்­லை­யையும் கடந்து புதிய நிர்­வாக சபை தெரி­வினை நடத்­தாது தொடர்ந்து இயங்கி வரு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான பள்­ளி­வாசல் நிர்வாகங்கள் தொடர்பிலும் வக்பு சபை விபரங்களைத் திரட்டுவதற்கு எதிர்பார்த்துள்ளது.

எனவே இவ்வாறான பள்ளிவாசல்கள் தொடர்பிலும் ஜமாஅத்தார் வக்பு சபையின் சட்ட அதிகாரிக்கு அறிவிக்குமாறு வேண்டப்படுகிறார்கள்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.