சமூகம்சார் பொறுப்புகளை உரிய முறையில் நிறைவேற்றுவோம்

0 144

எமது நாடு பொரு­ளா­தார ரீதியில் பல்­வேறு நெருக்­க­டி­களை எதிர்­நோக்­கி­யுள்ள வேளையில் நாம் சில தினங்­களில் புனித ரம­ழானை அடை­ய­வுள்ளோம்.

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்­பது இஸ்­லாத்தின் ஐம்­பெரும் கட­மை­களில் ஒன்­றாகும். இம்­மா­தத்­திலே அல்லாஹ் அல்­குர்­ஆனை இறக்கி வைத்தான். இம்­மாதம் ஒவ்வோர் அடி­யானும் அல்­லாஹ்­வுடன் நெருக்­க­மான தொடர்­பினை ஏற்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக அரு­ளப்­பட்­ட­தாகும். இது துஆ­வி­னதும் பொறு­மை­யி­னதும், ஸத­கா­வி­னதும் மாத­மாகும்.

ரம­ழானின் இறுதி 10 தினங்­களில் இஃதிகாப் எனும் அமல் முக்­கி­யத்­துவம் பெறு­வதால் இந்த அமலை ஊர் மக்கள் நிறை­வேற்­று­வ­தற்­கான ஏற்­பா­டு­களை மஸ்ஜித் நிர்­வா­கிகள் செய்து கொடுக்க வேண்டும்.

ஒரு மனிதன் தன்­னு­டைய இச்­சை­க­ளையும், ஆசை­க­ளையும் அடக்கி பிற­ரது உணர்­வு­களை மதிக்கும் பயிற்­சியை வழங்கும் மாத­மாகும். ரமழான் காலப்­ப­கு­தியில் நாம் சமூகம் சார் பொறுப்­பு­களை உரி­ய­மு­றையில் நிறை­வேற்ற வேண்டும். எவ­ருக்கும் தீங்கு ஏற்­படா வண்ணம் எமது தனிப்­பட்ட குடும்ப, சமூக விட­யங்­களை கையாள வேண்டும்.

எமது நாடு பல்­லின, பல கலா­சா­ரங்­களை உள்­ள­டக்­கி­ய­தாகும். எனவே எமது சமயக் கட­மைகள், இரவு நேர வணக்க வழி­பா­டுகள் ஏனைய சமூ­கங்­க­ளுக்கு இடை­யூறு ஏற்­படா வண்ணம் அமைய வேண்டும். முஸ்­லிம்கள் நாம் தேசிய ஒற்­று­மை­யையும், நல்­லி­ணக்­கத்­தையும் பேணு­ப­வர்கள் என்­பதை நிரூ­பிக்கும் வகையில் எமது செயற்­பா­டுகள் அமைய வேண்டும்.

வீடு­களில் இரவு நேர வணக்க வழி­பா­டு­களில் ஈடு­படும் போதும், ஸஹர் நேரத்­திலும் , பிற­ருக்கு இடைஞ்சல் ஏற்­ப­டாத வகையில் நடந்து கொள்­வ­துடன், வானொலி மற்றும் தொலைக்­காட்­சியின் சப்­தத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.

மஸ்­ஜித்கள் அமல்­களை ஏற்­பாடு செய்­யும்­போது அதனைச் சூழ­வுள்ள மக்­க­ளுக்கு இடைஞ்சல் ஏற்­படா வண்ணம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இளை­ஞர்கள் ரம­ழானின் இர­வு­நே­ரங்­களை பாதை­யோ­ரங்­களில் விளை­யாட்­டு­களில் வீணாக கழித்து ஏனைய சமூ­கத்­தி­ன­ருக்கு இடை­யூறு விளை­விக்கக் கூடாது. அனைத்துப் பள்­ளி­வாசல் நிர்­வா­கி­களும் ஊர் ஜமா­அத்­தி­னரை இது தொடர்பில் தெளி­வு­ப­டுத்த வேண்டும்.

எமது சமூ­கத்தில் வசதி வாய்ப்பு நிறைந்த தன­வந்­தர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெரும் எண்­ணிக்­கை­யி­லான எமது சமூ­கத்­தி­ன­ருக்கு உத­விக்­கரம் நீட்ட வேணடும். இஸ்­லாத்தின் மூன்­றா­வது கட­மை­யான ஸக்காத் வறு­மையை ஒழிப்­ப­தற்கு இறைவன் எமக்குத் தந்­துள்ள ஒரு சிறந்த வழி­மு­றை­யாகும்.
ஆடம்­பர இப்­தார்கள் வீண் செல­வுகள் தவிர்க்­கப்­பட்டு அந்­நிதி வறி­ய­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்டும். எமது அர­சாங்கம் அரச மற்றும் அரச நிறு­வ­னங்கள் இப்­தா­ருக்­காக செல­விடும் பணத்­தினை காஸாவில் பாதிக்­கப்­பட்­டுள்ள எமது உற­வு­க­ளுக்கு வழங்க தீர்­மா­னித்­துள்­ளது. ஜனா­தி­ப­தியின் இத்­தீர்­மானம் பாராட்­டுக்­கு­ரி­யது.இப்தார் நிகழ்­வு­க­ளுக்­காக அமைச்­சுக்கள் மற்றும் அரச நிறு­வ­னங்­க­ளினால் ஒதுக்­கப்­படும் தொகையை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிதி­யத்­துக்குப் பெற்றுத் தரு­மாறு ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் அறி­வு­றுத்தல் வழங்­கி­யுள்­ள­னர்.

காஸா எல்லைப் பகு­தியில் பாதிக்­கப்­பட்ட குழந்­தை­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கு­வ­தற்­காக Children of Gaza Fund நிறு­வப்­பட்­டுள்­ளது.
இலங்கை அர­சாங்கம் ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதியூடாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெற்றுக் கொடுக்கவுள்ளது.

எமது சமூகத்தில் வசதி படைத்தவர்கள் எமது மக்களுக்கு இந்த ரமழானில் உதவிக்கரம் நீட்டுவதுடன் பலஸ்தீனர்களுக்கும் இயன்ற உதவிகளை வழங்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

பலஸ்­தீனில் நிரந்­தர சமா­தானம் நிலை­பெற புனித ரம­ழானில் நாம­னை­வரும் இறை­வ­னிடம் இரு கர­மேந்திப் பிரார்த்­திப்­போ­மா­க. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.