வக்பு சட்ட திருத்தத்திற்கான குழு வினைத்திறனாக செயற்பட வேண்டும்

0 132

எமது நாட்டில் அமு­லி­லுள்ள வக்பு சட்­டத்தில் காலத்­துக்­கேற்ற திருத்­தங்­களை மேற்­கொள்ள நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்­க­தாகும்.

1956ஆம் ஆண்டின் 51ஆம் இலக்க வக்பு சட்டம் நான்கு தசாப்­தங்­க­ளுக்குப் பின்பு திருத்­தங்­க­ளுக்கு உள்­ளா­க­வுள்­ளது. இச்­சட்டம் இறு­தி­யாக 1983ஆம் ஆண்டு திருத்­தங்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். அதற்கு முன்பு இச்­சட்டம் 1962 ஆம் ஆண்டில் திருத்­தங்­க­ளுக்கு உள்­ளா­னது.
வக்பு சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­வ­தற்கு புத்­த­சா­சனம், சமய மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்க முன்னாள் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தின் தலைவர் ஏ.டப்­ளியு.ஏ. சலாம் தலை­மையில் மேலும் எழுவர் கொண்ட குழு­வொன்­றினை நிய­மித்­துள்ளார். குழுவின் உறுப்­பி­னர்கள் வக்பு சபை, வக்பு ட்ரிபி­யுனல் நிர்­வாக சேவை உயர் அதி­காரி, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் என துறைசார் நிபு­ணர்­க­ளாவர்.

தற்­போது அமு­லி­லுள்ள வக்பு சட்­டத்தில் குர்ஆன் மத்­ர­ஸாக்கள் அர­புக்­கல்­லூ­ரிகள் என்­ப­வற்­றுக்­கான தெளி­வான வழி­காட்­டல்கள் இன்மை, பள்­ளி­வா­சல்­க­ளுக்­கான நம்­பிக்கை பொறுப்­பாளர் நிய­மனம், அவர்­க­ளது தகை­மைகள், இமாம், கதீப்­மார்­களின் 06நிய­மனம், தகை­மைகள் பற்­றியும் தெளி­வான வழி­காட்­டல்கள் இல்லை.

இதன் கார­ண­மா­கவே நாட்டின் பல்­வேறு பள்­ளி­வா­சல்­களில் நாளாந்தம் பிரச்­சி­னைகள் உரு­வா­கின்­றன. அரபுக் கல்­லூ­ரிகள் மற்றும் குர்ஆன் மத்­ர­ஸாக்­களின் கட்­ட­மைப்பு, பாடத்­திட்­டங்கள் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளன. மாண­வர்கள் தாக்­கப்­ப­டு­கி­றார்கள். கொலைச் சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றுள்­ளன.
குறிப்­பாக வக்பு சொத்­துகள் தனி­யார்­க­ளினால் அனு­ப­விக்­கப்­ப­டு­கின்­றன. சொந்தம் கொண்­டா­டப்­ப­டு­கின்­றன. கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூரி வக்பு சொத்­துக்கு உரிமை கோரி வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்டு கல்­லூரி மூடப்­பட்­டுள்­ளது. அக்­கல்­லூரி மாண­வர்கள் வெளி­யேற்­றப்­பட்­டு­விட்­டார்கள்.

வக்பு சொத்­தான பாபக்கர் பள்­ளி­வாசல் தொடர்பில் இரு தரப்­பினர் முரண்­பட்டுக் கொள்­கின்­றனர். வக்பு ட்ரிபி­யு­னலில் வழக்கு தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றது.

வக்பு சட்­டத்தில் திருத்­தங்­களை சிபா­ரிசு செய்ய நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழு இவ்­வா­றான வழக்­குகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். வக்பு சட்­டத்தை மீறி­ய­வர்­க­ளுக்கு கடு­மை­யான சட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்ளப் பட­வேண்டும்.

பள்­ளி­வா­சல்­களில் நிலவும் நிர்­வாக சிக்­கல்கள், நம்­பிக்கைப் பொறுப்­பாளர் நிய­ம­னங்­களில் குள­று­ப­டிகள் என்­பன போன்ற முறைப்­பா­டுகள் வக்பு சபைக்கு முன்­வைக்­கப்­படும் போது அப் பிரச்­சி­னை­க­ளுக்கு குறு­கிய காலத்தில் தீர்­வுகள் வழங்­கப்­ப­டு­வ­தில்லை.

பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு வக்பு சபை நீண்ட காலத்தைச் செல­வி­டு­கி­றது. இந்­நி­லைமை தவிர்க்­கப்­பட வேண்டும். பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­பதில் வக்பு சபை நீண்ட காலத்தைச் செல­வி­டு­வதால் பண விரயம், நேர விரயம் என்­பன தவிர்க்க முடி­யா­த­வை­யாகி விடு­கி­றன்­றன. வக்பு சபை உறுப்­பி­னர்கள் அனை­வரும் கூட்­டாக ஒரு­மித்து இவ்­வி­ட­யத்தில் கவனம் செலுதத் வேண்டும்.
அத்­தோடு பள்­ளி­வாசல் நிர்­வா­கத்தில் தனி­நபர் தொடர்­பான பிரச்­சி­னைகள் வக்பு ட்ரிபி­யுனில் விசா­ரிக்­கப்­ப­டும்­போது சட்­டத்­த­ர­ணி­க­ளுக்­கான கொடுப்­ப­ன­வுகள் பல்­லா­யி­ரக்­க­ணக்கில் பள்­ளி­வாசல் நிதி­யி­லி­ருந்தே செல­வ­ழிக்­கப்­ப­டு­கி­றது. இது நிறுத்தப்பட வேண்டும்.

வக்பு சபை திறன்பட செயற்படுவதற்கு முழுநேர உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். அத்தோடு வக்பு சபை வாரத்தில் இரண்டு தடவைகளேனும் ஒன்று கூடி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
திருத்தங்களை சிபாரிசு செய்ய நியமிக்கப்பட்டுள்ள குழு துறைசார் நிபுணர்கள், அனுபவசாலிகளின் கருத்துகளை அறிந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.