அரபு அமீரகத்தில் இந்து கோயில் திறப்பு

0 210

ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் தலை­ந­க­ரான அபு­தா­பியில் கட்­டப்­பட்­டுள்ள இந்து கோயிலை நேற்­றைய தினம் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி திறந்து வைத்தார்.

இத­னி­டையே, ஐக்­கிய அரபு அமீ­ரகம் சென்­றுள்ள இந்­திய பிர­தமர் மோடி அந்­நாட்டு அமீர் முஹ­ம்மது அல் நஹ்­யானை நேற்­று­முன்­தினம் சந்­தித்தார். அப்­போது இரு நாடுகள் இடையே 8 ஒப்­பந்தங்கள் கையெ­ழுத்­தா­னது.

கடந்த 2015 ஆம் ஆண்டு இந்­திய பிர­தமர் மோடி ஐக்­கிய அரபு அமீ­ரகம் சென்றார். அப்­போது அபு­தா­பியில் சுவாமி நாராயண் கோயில் கட்ட 27 ஏக்கர் நிலத்தை அந்த நாட்­டு­அ­ரசு வழங்­கி­யது. இதன்­பி­றகு கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்­ப­ரில்­கோயில் கட்­டு­மான பணி தொடங்­கி­யது. ரூ.700 கோடியில் கோயில் கட்டி முடிக்­கப்­பட்டு உள்­ளது.

இதைத் தொடர்ந்து அபு­தா­பியில் சுவாமி நாராயண் கோயில் நேற்று திறந்­து­வைக்­கப்­பட்­டது. இதில் பங்­கேற்­ப­தற்­காக இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி 2 நாட்கள் பய­ண­மாக நேற்­று­முன்­தினம் அபு­தாபி சென்றார். அந்த நாட்டு அமீர் முஹ­மது பின் சையது அல் நஹ்­யானை அவர் சந்­தித்துப் பேசினார். அப்­போது இந்­தியா, ஐக்­கிய அரபு அமீ­ரகம் இடையே துறை­முகம், முத­லீடு, எரி­சக்தி, வர்த்­தகம், டிஜிட்டல் பணப் பரி­வர்த்­தனை தொடர்­பான 8 ஒப்­பந்­தங்கள் கையெ­ழுத்­தா­கின. யுஏ­இ-யில் யுபிஐ மற்றும் ரூபே அட்டை திட்­டத்தை பிர­தமர் மோடி தொடங்கி வைத்தார். இதன் பிற­கு­ இந்­திய வம்­சா­வ­ளி­யினர் பங்­கேற்ற கூட்­டத்தில் அவர் உரை­யாற்­றினார்.

இரண்டாம் நாளான நேற்று சுவாமி நாராயண் கோயில் திறப்பு விழாவில் இந்­திய பிர­தமர் மோடி பங்­கேற்றார். பின்னர் ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் துபாய் நகரில் நடை­பெறும் உலக அரசு உச்சி மாநாட்டில் கலந்து கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.