காஸா­வில் ஜனா­ஸாக்­க­ளை­யு­ம் தோண்டி எடுக்கும் இஸ்­ரேல்

0 137

காஸாவின் கான் யூனுஸ் பகு­தியில் தரை­வ­ழி­யாக நுழைந்து தாக்­குதல் நடத்­திய இஸ்­ரே­லிய இரா­ணு­வத்­தினர் அங்குள்ள அடக்­கஸ்­த­லங்­க­­ளையும் தாக்­கி­ய­­ழித்­­துள்­ளனர். அது­மாத்­தி­ர­மன்றி அங்கு சமீ­பத்­திய தாக்­கு­தல்­களில் உயி­ரி­­ழந்த பலஸ்­தீ­னர்கள் அடக்கம் செய்­யப்­பட்­டிருந்த இடங்­களைத் தோண்டி ஜனா­ஸாக்­க­ளையும் எடுத்துச் சென்­றுள்­ள­­னர்.

இதே­போன்று கடந்த டிசம்பர் மாதமும் காஸாவின் பல பகு­தி­க­ளிலும் அமையப் பெற்­றுள்ள அடக்­கஸ்­த­லங்­களை தாக்கி அழித்­துள்­ள­துடன் நூற்றுக்கணக்­கா­ன ஜனா­ஸாக்­க­ளையும் தோண்டி எடுத்துச் சென்ற சம்­ப­வங்கள் பதி­வா­கி­யி­ருந்­தன. இவ்­வாறு கொண்டு செல்­லப்­பட்ட ஜனா­ஸாக்கள் பல­ஸ்தீன செயற்­பாட்­டா­ளர்­க­ளு­டை­யவை என்றும் அவர்­களது உடற்­பா­கங்­களை திரு­டு­ம் நோக்­கி­லேயே இவ்­வாறு சட­லங்­களைத் தோண்­டு­வ­தாக தாம் சந்­தே­கிப்­ப­தா­கவும் யூரே மெட் எனும் மனித உரி­­மைகள் கண்­கா­ணிப்பு நிறு­வனம் தெரி­வித்­துள்ள­து.

பலஸ்­தீனில் கடந்த 100 நாட்­க­ளுக்கும் மேலாக இஸ்ரேல் வான் வழி­யா­கவும் தரை வழி­யா­கவும் தாக்­கு­தல்­களை நடத்தி வரும் நிலையில் நேற்று வரை 24448 பேர் கொல்­லப்­பட்­டுள்­ள­துடன் 61504 பேர் காய­ம­டைந்­துள்­ள­­தாக காஸா சுகா­தார அமைச்சின் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.