செங்கடலுக்கு கடற்படையை அனுப்பும் தீர்மானம் மிக தவறானது

ஜனாதிபதியிடம் முஸ்லிம் தலைமைகள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்கிறார் ஜனாதிபதி சட்டத்தரணி சுஹைர்

0 71

அமெரிக்க தலைமையிலான படைகளுடன் இணைந்து செங்கடலில் யெமனின் ஹூதி படையினருக்கு எதிராக போரிடுவதற்கு இலங்கை ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானத்தை புரிந்து கொள்ள முடியாதுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எம்.சுஹைர் தெரிவித்துள்ளார். அத்துடன் இத் தீர்மானம் தொடர்பில் முஸ்லிம் தலைமைகள் தமது எதிர்ப்பை வலுவாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

யெமன் ஹூதி­க­ளுக்கு எதி­ராக போரா­டு­வ­தற்­கென இலங்கை கடற்­படைக் கப்­பலை செங்­க­ட­லுக்கு அனுப்ப தீர்­மா­னித்­துள்­ள­தாக ஜனா­தி­பதி அறி­வித்­துள்ளார். நிரா­யு­த­பா­ணி­களான பலஸ்­தீ­னி­யர்­களைக் கொன்று, காஸாவை முற்­றாக அழிக்கத் துடிக்கும் இஸ்­ரே­லுக்கும் அதன் நேச அணி­க­ளுக்கும் ஆத­ர­வாக இலங்­கையின் ஜனா­தி­பதி செயற்­ப­டு­கிறார் என்­பது இதன் மூலம் தெளி­வா­கி­றது.

அர­சாங்­கத்தின் இந்தத் தீர்­மா­னத்­திற்கு வெளி­வி­வ­கார அமைச்­சரும் உடந்­தை­யா­க­வுள்­ள­தா­கவே தெரி­கி­றது. அது மாத்­தி­ர­மன்றி இந்த விடயம் தொடர்பில் முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­களும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் மௌன­மா­க­வி­ருப்­பது அதிர்ச்­சி­ய­ளிக்­கி­றது.
இலங்­கையில் உள்ள எமது தலை­வர்கள் இலங்கை அர­சாங்கம் எடுத்து வரும் ஆபத்­தான தீர்­மா­னங்­களை மாற்­று­வ­தற்கு எது­வுமே செய்­ய­வில்லை. இந்த ஆண்டு ஒக்­டோபர் மாதம் தேர்தல் நடை­பெ­ற­வுள்ள நிலையில், ஆட்­சி­ய­மைக்க விரும்பும் எந்­த­வொரு அர­சியல் தலை­மையும் 1.6 மில்­லியன் முஸ்லிம் வாக்­கு­க­ளையோ அல்­லது ஏனைய சிறு­பான்மை சமூ­கங்­களின் வாக்­கு­க­ளையோ புறக்­க­ணிக்க முடி­யாது என்ற செய்­தியை முஸ்லிம் தலை­மைகள் மிக அழுத்­த­மாகச் சொல்ல வேண்டும்.

2024 ஜன­வரி முதல் வாரத்தில் ஜனா­தி­பதி வடக்­கிற்குச் சென்றார். வடக்குத் தமி­ழர்கள் எதிர்­நோக்கும் பல பிரச்­ச­னைகள் குறித்து அவர் உரை­யாற்­றினார். எனினும் வடக்கு முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம் தொடர்­பான பிரச்­சி­னை­களை ஜனா­தி­ப­தி­யிடம் எடுத்­து­ரைப்­ப­தற்­கான எந்­த­வொரு அர­சியல் அழுத்­தத்­தையும் முஸ்லிம் அர­சியல் கட்­சிகள் வழங்­கி­ய­தாகத் தெரி­ய­வில்லை.
முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் வெளிநாட்டு விஜயங்களை அனுபவிக்கிறார்களே தவிர, அதன் மூலம் துன்பப்படும் சமூகத்திற்கு எந்த நன்மையும் கிடைப்பதில்லை என்றும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.