அஹ்னப் ஜெஸீ­முக்கு மேலும் நீதி கிடைக்க வேண்­டும்

0 551

கவி­ஞரும் ஆசி­ரி­ய­ரு­மான அஹ்னாப் ஜெஸீமை சகல குற்­றச்­­சாட்­டுக்­க­ளி­லி­ருந்தும் விடு­விப்­ப­தாக புத்­தளம் மேல் நீதிமன்றம் நேற்று முன்­தினம் அறி­வித்­துள்­ளது. சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்­களை நிரூ­பிக்க முடி­யாத நிலை­யி­லேயே அவர் மீதான வழக்கு முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. இதற்­க­மைய அஹ்னாப் ஜெஸீம் மீதான குற்­றச்­சாட்­டுக்கள் அனைத்தும் பொய்­யா­னவை என்­பது நீதிமன்­றத்­தி­னா­­லேயே நிரூ­பி­க்­கப்­பட்­டுள்­ள­து.

டாக்டர் ஷாபி, சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ், ரம்ஸி ராசிக் போன்றோ­ரது வழக்­கிலும் இதுவே நடந்­தது. குற்­றச்­சாட்­டுக்­களை நிரூ­பிக்க முடி­யாத நிலையில் அவர்­­க­ளது வழக்­கு­கள் முடி­வுக்கு வந்­தன. அதே­போன்­றுதான் அஹ்னாப் ஜஸீமும் விடு­தலை செய்யப்­பட்­டுள்­­ளார்.

இது அஹ்­னா­புக்கு மாத்­தி­ர­மன்றி நம் அனை­வ­ருக்கும் மிகவும் சந்­தோ­ச­மான செய்­திதான். ஆனால் இந்தப் பொய்­யான குற்­றச்­சாட்­டு­க­ளின்கீழ் கைது செய்­யப்­பட்ட அவர் அனு­ப­வித்த வேத­னை­கள் சிறை அனு­ப­வங்கள் எழுத்தில் வடிக்க முடி­யா­தவை. அண்­மையில் நாம் அஹ்­ன­­புடன் உரை­யா­டிய போது அவர் தான் அனு­ப­வித்த கொடூ­ரங்­களை இவ்­வாறு பகிர்ந்து கொண்­டார்.
‘‘24 மணி நேரமும் என்னை கைவிலங்கிட்டே வைத்திருந்தார்கள். கதிரையுடன் சேர்த்து கைவிலங்கிட்டதுடன் சில நேரங்களில் காலுக்கும் விலங்கைப் போட்டு விடுவார்கள். மலசலகூடத்திற்குச் செல்ல வேண்டும் எனக் கேட்டால் பல மணி நேரத்திற்குப் பின்னர்தான் 4 பேர் வந்து கைவிலங்கைக் கழற்றி அழைத்துச் செல்வார்கள்.தூங்கும் போது கூட கம்பி ஒன்றுடன் சேர்த்து கைவிலங்கைப் போட்டுவிடுவார்கள். பச்சைத் தூசணத்தால் ஏசுவார்கள். கடுமையாக அடிப்பார்கள். என்னை விசாரித்துக் கொண்டு நான் பார்க்கும் வகையில் சக கைதிகளுக்கு கடுமையாக அடிப்பார்கள். அதனைப் பார்த்தால் இவ்வாறு அடி வாங்குவதை விட அவர்கள் கேட்பதை எழுதி ஒப்பமிட்டுக் கொடுப்பது மேல் என்றுதான் தோன்றும்.

தலை முடியைப் பிடித்து இழுத்து தலையை மேசையில் அடிப்பார்கள். இரவில் மது அருந்திவிட்டு வந்து போதையில் விசாரணை நடத்துவார்கள். ஒத்துழைக்காவிட்டால் கடுமையாக அடிப்பார்கள். சிலரை கோழியை உரித்து தொங்கவிடுவது போன்று கம்பியில் கட்டி தொங்கவிடுவார்கள். அடித்துவிட்டு பெனடோல் தருவார்கள். தூங்கும் போது உடம்பில் கரப்பான் எலி என்பன ஓடும். 2021 ஆரம்பத்தில் எனக்கு எலி கடித்தது.

நான் உயர் கல்வி கற்ற பேருவளையில் அமைந்துள்ள ஜாமிஆ நளீமியாவுக்கு எதிராகவும் ஜமாஅதே இஸ்லாமி அமைப்பின் மாணவர் அமைப்புக்கு எதிராகவும் பொய்ச் சாட்சியம் கூறுமாறு என்னை வற்புறுத்தினார்கள். அவர்கள் கூறுவது போல் நடந்து கொண்டால் விரைவில் விடுதலை செய்வோம் என்றும் இன்றேல் 20 வருடம் சிறையில் போடுவோம் என்றும் மிரட்டினார்கள். உயிர் போனாலும் பொய்ச் சாட்­சியம் கூட­மாட்டேன் என நான் அவர்­க­ளிடம் கூறி­னேன்­’’

இவ்­வா­றான சித்­தி­ர­வ­தை­க­ளுக்கும் தண்­ட­னை­க­ளுக்கும் முகங்­கொ­டுத்த அஹ்­னபை வெறு­மனே குற்­ற­மற்­றவர் என்று கூறி விடு­தலை செய்­வ­தால் மாத்திரம் அவ­ருக்கு நீதி கிடைத்­து­வி­டாது. இக் கைது மற்றும் பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தின் கீழான தடுத்து வைப்புகள் மூலம் அவ­ரது அடிப்­படை உரிமை மீறப்­பட்­டுள்­ளது. என­வேதான் அவ­ருக்கு அர­ச தரப்பில் நஷ்­ட­யீடு வழங்­கப்­ப­டு­வ­து­டன் வேண்­டு­மென்றே அஹ்­­னாபைக் கைது செய்து குற்­றச்­சாட்­டுக்­களை சோடித்த­வர்­க­ளுக்கு எதி­ராகவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டும் என வலி­யு­றுத்த விரும்­பு­கி­றோம்.

அஹ்­னா­புக்கு இழைக்­கப்­பட்ட அநீதி தொடர்பில் ஏலவே உயர் நீதிமன்­றத்தில் அடிப்­படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி கனக ஈஸ்­வரன் தலை­மை­யி­லான குழு­வினர் இவ்­வ­ழக்கை இல­வ­ச­மாக நடத்த முன்­வந்­துள்­ளனர். இதன் மூலம் அஹ்­னா­புக்கு மேலும் நீதி கிடைக்க வேண்டும் என பிரார்த்­திக்­கி­­றோம்.

உண்­மையில் அஹ்­­னா­புக்­காக இது­வரை ஒரு சதம் கூட கட்­டணம் பெறாமல் வழக்கு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்த இளம் சட்­டத்­த­ரணி சஞ்­சய வில்சன் மிகவும் நன்­றிக்­கு­ரி­யவர். அதே­போன்று இவ் வழக்கில் இல­வ­ச­மாக ஆஜ­ராகி சிறப்பான வாதங்­க­ளை முன்­வைத்த சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் தலை­மை­யி­லான குழு­வி­னரும் பாராட்­டுக்­கு­ரி­ய­வர்கள். மேலும் சட்­டத்­­த­ரணி சுவஸ்­திகா அரு­ளிங்கம் உள்­ளிட்ட சட்­டத்­த­ர­ணி­களும் நன்­றிக்குரிய­வர்கள்.
எத்­தனை சித்­தி­­ர­வ­தை­கள் துன்­பங்­களை அனுப­வித்த போதிலும் தான் கல்வி கற்ற நளீ­மியா கலாபீ­டத்­துக்கு எதி­ராக பொய்ச்­சாட்­சியம் கூறமாட்டேன் என உறுதி­யா­க­வி­ருந்த அஹ்­னபின் துணிச்சல் பாராட்டத்­தக்­கது. அஹ்னப் இன்று பல்­வே­று வழி­க­ளிலும் பாதிக்­கப்­பட்­­டுள்ளார். அவ­ருக்கு சமூகம் கைகொ­டுக்க வேண்டும். அவ­ரதும் குடும்­பத்­தி­னதும் வாழ்வை மேம்­ப­டுத்த உத­விகள் செய்­யப்­பட வேண்டும். இது தொடர்பில் ஆர்­வ­மு­டை­ய­வர்கள் முன்­வந்து செயற்­திட்­டங்­களை ஆரம்­பிக்க வேண்­டும் என்றும் வலி­யு­றுத்த விரும்­பு­கி­றோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.