பெண் செயற்பாட்டாளர் ஜுவைரியாவுக்கு உயர் விருது

0 320

முஸ்லிம் பெண்கள் அபி­வி­ருத்தி நம்­பிக்­கை­ய­கத்தின் நிறை­வேற்­றுப்­ப­ணிப்­பாளர் ஜுவை­ரியா மொஹிதீன், பெண்­களின் மனித உரிமைச் செயல்­பாட்­டிற்கு, குறிப்­பாக பெண்கள் மற்றும் குழந்­தை­களின் உரி­மை­களைப் பாது­காப்­பதில் பங்­க­ளிப்­பினை ஆற்­றி­ய­மைக்­காக சர்­வ­தேச மன்­னிப்புச் சபை­யின அமெ­ரிக்க கிளை­யினால் வழங்­கப்­படும் 2023 ஆம் ஆண்­டுக்­கான ஜினெட்டா சாகன் விரு­துக்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார்.

போலந்தில் ஜஸ்­டினா வைட்­ரிஸ்கா மற்றும் இலங்­கையின் ஜுவை­ரியா மொஹிதீன் ஆகிய இரு­வ­ருமே 2023 இல் இவ்­வி­ரு­துக்கு தெரி­வா­கி­யுள்­ளனர்.
எருக்­க­லம்­பிட்­டியைச் சேர்ந்த ஜுவை­ரியா மொஹிதீன் 1990 ஆம் ஆண்டு வடக்­கி­லி­ருந்து முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்ட போது தனது வீட்டை விட்டு வெளி­யேற நிர்ப்­பந்­திக்­கப்­பட்டு, புத்­த­ளத்­திற்கு இடம்­பெ­யர்ந்தார்.

பல சவால்கள் இருந்­த­போ­திலும், ஜுவை­ரியா ஒரு ஆர்­வ­ல­ராக விளங்­கினார். முஸ்லிம் பெண்கள் அபி­வி­ருத்தி நம்­பிக்­கை­ய­கத்தை நிறு­வி­ய­துடன் பெண்கள் மற்றும் ஒதுக்­கப்­பட்ட தனி­ந­பர்­களின் உரி­மை­க­ளுக்­காக வாதிடும் பெண்கள் செயல் வலை­ய­மைப்பில் இணைந்து செயற்­பட்டார்.

மூன்று தசாப்­தங்­க­ளுக்கும் மேலாக, ஜுவை­ரியா பாலின அடிப்­ப­டை­யி­லான வன்­மு­றைக்கு எதி­ராக உறு­தி­யாக குரல் கொடுத்து வரு­கிறார். முஸ்லிம் திரு­மணச் சட்­டத்தில் உள்ள பார­பட்­ச­மான நடை­மு­றை­களை நிவர்த்தி செய்­வ­தற்கும் பாடு­பட்டு வரு­கிறார். அவ­ரது முயற்­சிகள் முஸ்லிம் மற்றும் தமிழ் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை வளர்ப்­பதில் கவனம் செலுத்துவதுடன் சமூக மாற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் அமெரிக்க கிளை குறிப்பிட்டுள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.