இலஞ்சக் குற்றச்சாட்டில் காதிநீதிவான் கைதானார்

0 168

கொழும்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த காதி நீதிவான் ஒருவர் இலஞ்சக் குற்­றச்­சாட்டின் பேரில் நேற்று முன்­தினம் இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்டு கறுவா தோட்ட பொலிஸில் ஒப்­ப­டைக்கப்பட்­டார்.

பொலிஸார் சந்­தேக நப­ரான காதி நீதிப­தியை கொழும்பு பிர­தம நீதிவான் நீதி­மன்றில் நேற்­றுக்­காலை ஆஜர்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்து நீதிவான் அவரை எதிர்­வரும் டிசம்பர் 12 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்­டார்.

ஒரு­வ­ருக்கு ஆவ­ண­மொன்­றினைக் கைய­ளிக்கும் போது ஒரு தொகைப் பணத்தைப் பெற்றுக் கொண்ட குற்­றச்­சாட்டின் பேரில் சந்­தே­க­நபர் ஸ்த­லத்­தி­லேயே இலஞ்ச ஊழல் அதி­கா­ரி­களால் கைது சேய்­யப்­பட்­டார்.

இது தொடர்பில் விடி­வெள்ளி காதி நீதி­வான்கள் போரத்தைத் தொடர்பு கொண்டு வின­வி­ய­போது சட்­ட­ரீ­தி­யான பண­ப் பரி­மாற்­றங்­க­ளுக்கு உரிய ரசீது வழங்­கப்­பட வேண்­டு­மெ­னவும் அவ்­வா­றல்­லாது பணம் பெற்­றுக்­கொள்ள முடி­யா­தெ­னவும் ஏற்­க­னவே காதி நீதி­ப­திகள் அறி­வு­றுத்­தப்­பட்­டி­ருப்­ப­தாகத் தெரி­விக்கப்பட்­ட­து. -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.