மத பிர­சா­ர­கர்­க­ளுக்கு நிதானம் மிக அவ­சி­யம்

0 164

நாட்டில் அண்­மைக்­கா­ல­மாக இனங்­க­ளுக்­கி­டையில் பிள­வு­­களை தோற்­று­விக்கும் வகையில் பகி­ரங்­க­மாக கருத்­துக்­களை வெளி­யிட்டு சர்ச்­சை­களைத் தூண்­டும் சம்­ப­வங்கள் அதி­க­ரித்து வரு­கின்­றன. இவை இயல்­பா­கவே இடம்­பெ­று­­கின்­ற­னவா அல்­லது திட்­ட­மிட்டு தோற்­று­விக்­கப்­ப­டு­கின்­ற­னவா என்­பதை உறு­தி­யாகக் கூற முடி­யா­துள்­ளது. அடுத்த வருடம் ஜனா­தி­பதி மற்றும் பொதுத் தேர்­தல்கள் இடம்­பெ­ற­வுள்ள நிலையில் இவ்­வா­றான சம்­ப­வங்கள் அர­சியல் பிர­சா­ரங்­க­ளுக்கு தீனி போடு­வ­தாக அமையும் என்­ப­தில் மாற்­றுக் கருத்­தி­ருக்க முடி­யா­து.

அந்த வகை­யில்தான் இரண்டு வாரங்­­க­ளுக்கு முன்னர் மெள­லவி அப்துல் ஹமீத் எனும் மார்க்கப் பிர­சா­ரகர் பர­த­நாட்­டியம் தொடர்பில் தெரி­வித்த கருத்து தமிழ் முஸ்லிம் மக்­க­ளி­டையே பலத்த வாதப்­பி­ர­தி­வா­தங்­களைத் தோற்று­வித்­தி­ருந்­தது. இக் கருத்­துக்கு எதிராக வடக்­கிலும் கிழக்­­கிலும் ஓரி­ரு ஆர்ப்­பாட்­டங்கள் இடம்­பெற்­ற­துடன் பொலிஸ் முறைப்­பா­டு­களும் பதிவு செய்­யப்­பட்­டன. சில அமைப்­புகள் கண்­டன அறிக்­கை­க­ளையும் வெளி­யிட்­டன. சமூக வலைத்­த­ளங்­களில் இரு சமூ­கங்­­க­ளையும் சேர்ந்­த­வர்கள் தமக்­கி­டையே கருத்து மோதல்­களில் ஈடுபட்­டனர். குறிப்­பாக முஸ்லிம் சமூ­கத்­திற்­குள்­ளி­ருந்தே குறித்த மெள­ல­வியின் கருத்துக்கு கடு­மையான கண்­ட­னங்­கள் முன்­வைக்­கப்­பட்­டன. இக் கருத்து தொடர்பில் அவர் மன்­னிப்புக் கோரியிருந்த நிலையில் தற்­போது மீண்டும் மத நல்­லி­ணக்கம் தொடர்பில் அவர் தெரி­வித்­துள்ள கருத்­­தொன்று சர்ச்­சை­களைத் தோற்­று­வித்­துள்­ளது.

இவ்­வா­றான மத நல்­லி­ணக்­கத்­திற்கு குந்­த­கம் விளை­விக்கும் கருத்­துக்களை வெளி­யி­டு­வதை முஸ்­லிம்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா அண்­மையில் கோரிக்கை விடுத்­தி­ருந்­தது. ‘‘மதம் மற்றும் கலாச்சார விழுமியங்கள் நிந்திக்கப்படும் வகையில் கருத்து தெரிவிப்பது இஸ்லாமிய வழிகாட்டலுக்கு முரணானதும், கண்டனத்துக்குரியதுமாகும். மதத்தலைவர்கள் பிற மதங்களை, கலாசாரங்களை மதித்து நடப்பவர்களாக இருக்கவேண்டியதுடன், சமூகங்களிடையே புரிந்துணர்வினையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தக் கூடியவர்களாக திகழவேண்டும்’’ எனவும் உலமா சபை தனது அறிக்­கை­யில் சுட்­டிக்­­காட்­டி­யி­ருந்­தது. இந்த விவ­காரம் தொடர்பில் இந்து குருக்­களும் இந்து அமைப்­பு­களும் உலமா சபையைச் சந்­தித்து பேச்சு நடாத்­தி­யி­ருந்­த­னர்.

இது மாத்­தி­ர­மன்றி அண்­மையில் சக மதங்­க­ளைப் புண்­ப­டுத்தும் வகையில் இலங்­கையில் மேலும் சிலர் கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருந்­த­மையும் கவ­னிப்­புக்­கு­ரி­ய­தாகும். குறிப்­பாக இந்­திக்க தொட­வத்த என்­பவர் நபி­க­ளா­ரையும் இஸ்­லாத்­தை­யும் அவ­மதிக்கும் வகையில் கருத்து வெளி­யிட்­ட­மைக்­காக கைது செய்­யப்­பட்டு பிணையில் விடு­விக்­கப்­பட்டார். அதே­போன்று முதித்த ஜய­சே­கர என்­ப­வரும் முக­நூ­லில் இஸ்­லாத்தையும் அல்­லாஹ்வையும் அவ­ம­திக்கும் வகையில் பதி­விட்­ட­மைக்­காக கைது செய்­யப்­பட்டு பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ளார். நாட்டில் மிகப் பிர­ப­ல­மாகப் பேசப்­பட்ட மற்­றொரு சம்­ப­வமே கிறிஸ்­தவ போத­கர் ஜெரோம் பெர்­ணான்டோ பெளத்த, இந்து, இஸ்­லா­மிய சம­யங்­களை அவ­ம­தி­க்கும் வகையில் கருத்து வெளி­யிட்டு சர்ச்­சையில் சிக்கி நாட்­டை­விட்டுத் தப்பிச் சென்­ற­மை­யாகும். நேற்­றைய தினம் அவர் நாடு திரும்­பி­யுள்­ள­துடன் 48 மணி நேரங்­க­ளுக்குள் சிஐடியிடம் வாக்­கு­மூலம் வழங்க வேண்டும் என்றும் நீதி­மன்­றத்­தினால் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளார்.

தீவிர பெளத்த பிக்­கு­களைப் பொறுத்­த­வரை இவ்­வா­றா­ன கருத்­துக்­களை அவர்கள் சர்­வ­சா­தா­ர­ண­மாகவே வெளி­யிட்டு வரு­கின்­றனர். ஞான­சார தேரர் முதல் மட்­டக்­களப்­பி­லுள்ள அம்­பிட்­டியே சும­ண­ரத்­ன தேரர் வரை இப் பட்­டியல் நீண்டு செல்கிற­து.

நாட்டில் இன மத நல்­லு­றவைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய மத தலை­வர்­களே இவ்­வாறு மக்கள் மத்­தியில் கருத்து வேறு­பா­டு­க­ளையும் பிள­வு­­க­ளையும் தோற்­று­விக்கும் வகையில் கருத்­துக்­களை வெளி­யி­டு­வது ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல.

இவ்­வா­றான கருத்­துக்­களை வெளி­யிட்டு பின்னர் மன்­னிப்புக் கோரு­வதை விட முன்­கூட்­டியே நிதா­ன­மாக தயார்­ப­டுத்தி தமது உரை­க­ளை அமைத்துக் கொள்­வதே பொருத்­த­மா­ன­தாகும். சில நாடு­களைப் பொறுத்­த­­வரை முன்­கூட்­டியே தயார் செய்­யப்­பட்டு அர­சாங்­கத்­தினால் அங்­கீ­க­ரி­க்­கப்­பட்ட விட­யங்களையே இவ்­வா­றா­ன பிர­சா­ர­கர்கள் தமது உரை­களில் பயன்­ப­டுத்­தலாம். எனினும் இலங்­கையில் அவ்­வாறான ஜன­நா­யகத்­திற்­கு முர­ணான நடை­மு­றை­கள் இல்லை. மத தலை­வர்­க­ளுக்கும் பிர­சா­ர­­கர்­க­ளுக்கும் விரும்­பி­யதை பேச அனு­மதி வழங்­கப்­பட்டுள்­ளது. அதற்­காக வாயில் வரு­வ­தை­யெல்லாம் பேசி மக்­கள் மத்­தியில் பிள­வு­களை ஏற்­ப­டுத்­து­வ­தை அனு­ம­திக்க முடி­யாது. அவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தையும் தவ­றெனக் காண முடி­யா­து.

என­வேதான் சகல மதங்க­ளை­யும் சேர்ந்­த பிர­சா­ர­கர்கள் இவ்­வா­றான தவ­று­களை தொடர்ந்தும் இழைப்­பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என வலி­யுறுத்த விரும்­பு­கி­றோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.