உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதல் விவகாரம் : உண்மைத் தன்மையை கண்டறிவதற்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிடாதீர்

கொழும்பு பேராயருக்கு போப்பாண்டவர் ஆலோசனை

0 170

(ஏ.ஆர்.எ.பரீல்)
உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்­ப­தற்கும் தாக்­கு­தலின் உண்­மைத்­தன்­மையை கண்­ட­றி­வ­தற்­கு­மான போராட்­டத்தை ஒரு போதும் கைவிட வேண்­டாம்  என போப்­பாண்­டவர் பிரான்ஸிஸ் ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­தாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்­தினால் ரஞ்சித் தெரி­வித்தார்.

பேராயர் மெல்கம் கர்­தினால் ரஞ்சித் மற்றும் இலங்கை கத்­தோ­லிக்க ஆயர்கள் பேர­வையின் உறுப்­பி­னர்கள் போப்­பாண்­ட­வருடன் ரோமில் மேற்­கொண்ட பாரம்­ப­ரிய சந்­திப்பின் போதே அவர் இவ்­வாறு ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான உண்மை மற்றும் நீதிக்­கான போராட்­டத்தைக் கைவிட வேண்டாம். இந்தப் போராட்டம் உண்­மையைக் கண்­ட­றியும் வரை நீதியைப் பெற்றுக் கொடுக்கும் வரை தொடர வேண்டும். என போப்­பாண்­டவர் எம்மை வேண்டிக் கொண்டார் என பொரள்ளை பேராயர் இல்­லத்தில் நடை­பெற்ற அவ­ரது பிறந்த தின நிகழ்வின் போது பேராயர் மெல்கம் கர்­தினால் ரஞ்சித் இவ்­வாறு தெரி­வித்தார்.
பேராயர் மற்றும் இலங்கை ஆயர்கள் பேர­வையின் உறுப்­பி­னர்கள் ரோமுக்கு போப்­பாண்­ட­வரை சந்­திப்­ப­தற்­காக மேற்­கொண்ட விஜயம் ஐந்து வருடங்களுக்கொருமுறை மேற்கொள்ளும் பாரம்பரிய விஜயம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.