‘படு­கொ­லை­களை நிறுத்­துங்கள்’

பௌத்த சம்மேளனம் கொழும்பில் போராட்டம்

0 125

(ஏ.ஆர்.ஏ. பரீல்)
இஸ்ரேல் மற்றும் பலஸ்­தீனில் மக்கள் படு­கொ­லை­களை நிறுத்­துங்கள். இரு நாடு­களும் செய்­வது தவறு. யுத்­தத்தை உடன் நிறுத்­துங்கள். அப்­பாவி மனித உயிர்கள் பலி­யெ­டுக்­கப்­ப­டு­வதை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. எந்­த­வொரு நாட்­டிலும் சாந்­தியும் சமா­தா­ன­முமே நிலவ வேண்டும் என பௌத்த தகவல் மத்­திய நிலைய நிறை­வேற்றுப் பணிப்­பாளர் அங்­குலு கல்­லே ஸ்ரீ ஜினாநந்த தேரர் தெரி­வித்தார்.

நேற்று முன்­தினம் கொழும்பு சர்­வ­தேச பௌத்த சம்­மே­ளனம் கொழும்பு பௌத்­தா­லோக மாவத்­தையில் அமைதிப் போராட்டம் ஒன்­றினை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. ‘யுத்தம் வேண்டாம் அனைத்து மக்­க­ளுக்கும் பலஸ்­தீ­னுக்கும் அமை­தியைக் கொடுங்கள்’ என்ற தொனிப் பொருளில் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த அமைதிப் போராட்­டத்தில் சர்வ மதத் தலை­வர்கள், பள்­ளி­வாசல் சம்­மே­ள­னத்தின் பிர­தி­நி­திகள், ஜனாஸா நலன்­புரி சங்க பிர­தி­நி­திகள், சிவில் சமூக அமைப்­புகள், அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உல­மா பிரதிநிதிகள் என பலர் கலந்­து­கொண்­டனர். சிங்­கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்­தவ மக்­களும் கலந்து கொண்­டனர்.

அங்­குலு கல்­லே ஸ்ரீ ஜின­ாநந்த தேரர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,
இரு நாடு­களும் செய்­வது தவறு. யுத்தம் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வா­காது. மனித உரி­மைகள் மதிக்­கப்­பட வேண்டும். இலங்­கையும் பௌத்­தமும் சமா­தா­னத்­தையே வலி­யு­றுத்­து­கி­றது என்றார்.

உலமா சபை செய­லாளர்
அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கையில்,
பௌத்த சங்கம் இவ்­வா­றான அமைதிப் போராட்­ட­மொன்றை ஏற்­பாடு செய்­த­மை­யை­யிட்டு உலமா சபை பாராட்­டு­கி­றது. காஸாவில் மனித படு­கொ­லைகள் மேற்­கொள்­ளப்­ப­டுகின்­றன. அப்­பாவி மக்களை படு­கொலை செய்­வது நிறுத்­தப்­பட வேண்டும். இலங்­கையும் உலமா சபையும் நியா­யத்தின் பக்­கமே இருக்கும். மனித நேயத்­துக்கு மதிப்­ப­ளிக்­கப்­பட வேண்டும். யுத்தம் நிறுத்­தப்­பட வேண்­டு­மென ஐ.நா.வில் 120 நாடுகள் வாக்­க­ளித்தும் இஸ்ரேல் அதனை ஏற்றுக் கொள்­ளாமை அனு­ம­திக்­கப்­பட முடி­யாது. யுத்­தத்தை நிறுத்­து­வ­தற்கு உலக தலை­வர்கள் ஒன்று சேர வேண்டும்.

குழந்­தை­களும் பெண்­களும் வயோ­தி­பர்­க­ளு­மென காஸாவில் ஆயி­ரக்­க­ணக்­கானோர் படு­கொலை செய்­யப்­ப­டு­வது சர்­வ­தேச சட்­டத்­துக்கு அப்­பாற்­பட்­ட­தாகும் உலக தலை­வர்கள் ஒன்று சேர வேண்டும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.