இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் தேரருக்கு எதிராக ஐ.சி.சி.பி.ஆர் எங்கே?

0 164

மட்­டக்­க­ளப்பு மங்­க­ளா­ரா­மய விகா­ரா­தி­பதி அம்­பிட்­டியே சும­ண­ரத்ன தேரர் அண்­மையில் தமி­ழர்­களை அச்­சு­றுத்தும் வகையில் வெளி­யிட்ட கருத்து பெரும் சர்ச்­சையைத் தோற்­று­வித்­துள்­ளது. மட்­டக்­க­ளப்பில் அமைந்­துள்ள தனது தாயின் கல்­லறை, வீதி அபி­வி­ருத்தி பணி­களின் போது உடைக்­கப்­பட்­ட­தாக குற்­றம்­சாட்­டிய அவர், இதற்குப் பதி­லாக தெற்­கி­லுள்ள தமி­ழர்­களை துண்டு துண்டா வெட்டிக் கொல்வேன் என ஊட­கங்கள் முன்­னி­லையில் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்தார்.

இன, மத பதற்­றங்­களைத் தோற்­று­விக்கும் வகையில் அமைந்­துள்ள இக் கருத்து தொடர்பில் தமிழ் அர­சி­யல்­வா­திகள் பலரும் தமது கண்­ட­னத்தை வெளி­யிட்­டுள்­ள­துடன் இத் தேர­ருக்கு எதி­ராக சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

அம்­பிட்­டியே சும­ண­ரத்­தின தேர­ருக்கு எதி­ராக ஐ.சி.சி.பி.ஆர் சட்­டத்தின் கீழ் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சட்­டத்­த­ரணி எம்.ஏ.சுமந்­திரன் பொலிஸ் மா அதி­ப­ருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்­துள்ளார்.

அதே­போன்று அம்­பிட்­டிய சும­ண­ரத்ன தேரர் வெளி­யிட்ட கருத்து குறித்து ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க, மகா­நா­யக்க தேரர்கள் உள்­ளிட்ட அனை­வரும் கவ­னத்­திற்கு எடுத்து, தேர­ருக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மனோ கணேசன் வேண்­டு­கோள்­வி­டுத்­துள்ளார்.

மேலும் இன­வா­தத்­துக்கு தூப­மிடும் வகையில் செயற்­படும் மட்­டக்­க­ளப்பு – அம்­பிட்­டிய சும­ண­ரத்ன தேர­ருக்கு எதி­ராக உரிய சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு இலங்கைத் தொழி­லாளர் காங்­கி­ரஸின் பொதுச்­செ­ய­லா­ளரும், நீர்­வ­ழங்கல் மற்றும் தோட்ட உட்­கட்­ட­மைப்பு வச­திகள் அமைச்­ச­ரு­மான ஜீவன் தொண்­டமான் பொலிஸ் மாஅ­தி­ப­ரிடம் வலி­யு­றுத்­தி­யுள்ளார். இதற்­கப்பால் மேலும் பல சிவில் அமைப்­பு­களும் தனி நபர்­களும் இத் தேரரின் கருத்­துக்கு எதி­ராக முறைப்­பா­டு­களைச் செய்­துள்­ளனர்.

குறித்த தேரர் கடந்த பல வரு­டங்­க­ளாக மட்­டக்­க­ளப்பில் சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்கு எதி­ராக தொட­ரிச்­சி­யாக வெறுப்­பு­ணர்வை வெளிப்­ப­டுத்தி வரு­பவர். அது­மாத்­தி­ர­மன்றி அரச அலு­வல்கள், பொலிஸ் அதி­கா­ரிகள் மற்றும் மதத்­த­லை­வர்­க­ளுக்கு எதி­ரா­கவும் வன்­மு­றை­களைப் பிர­யோ­கித்து தகாத வார்த்­தை­களைப் பிர­யோ­கித்து கடந்த காலங்­களி;ல் பலத்த அட்;டகா­சங்­களில் ஈடு­பட்­டவர். இவ்­வாறு பௌத்த காவி உடை அணிந்த தேரர் ஒருவர் சட்­டத்­திற்கும் அப்­பாற்­பட்டு செயற்­ப­டு­வ­தற்கு அனு­மதி வழங்­கி­யது யார்? இவரைக் கைது செய்து சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுப்­பதை தடுப்­பது யார்? என்ற கேள்­வி­க­ளுக்கு விடை காணப்­பட வேண்டும். குறித்த தேரரை உட­ன­டி­யாக கைது செய்து ஜசி­சி­பிஆர் சட்­டத்தின் கீழ் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். கடந்த காலங்­களில் அப்­பா­விகள் பலரை பொய்க் குற்­றச்­சாட்­டு­களின் கீழ் இச் சட்­டத்தின் கீழ் கைது செய்த அர­சாங்கம் இன்று இத் தேர­ருக்கு எதி­ராக இதனைப் பயன்­ப­டுத்த தயங்­கு­வது ஏன் என்ற கேள்வி எழு­கி­றது.

அண்­மைக்­கா­ல­மாக மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் வாழும் சமூ­கங்­க­ளி­டையே பதற்­றத்தைத் தோற்­று­விக்கும் வகை­யி­லான செயற்­பா­டுகள் தொடர்ச்­சி­யாக அரங்­கேறி வரு­கின்­றன. இரு வாரங்­க­ளுக்கு முன்னர் மட்­டக்­க­ளப்பு ஜாமிஉஸ் ஸலாம் ஜும்ஆப் பள்­ளி­வா­ச­லுக்கு முன்னால் இருந்த நூற்றுக் கணக்­கான ஆண்­டுகள் வர­லாறு கொண்ட மரத்தை பலாத்­கா­ர­மான தறிப்­ப­தற்கு சில சக்­திகள் நட­வ­டிக்கை எடுத்­தன. அது­மாத்­தி­ர­மன்றி தற்­போது அப் பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மான நிலப்­ப­ரப்பை அப­க­ரிக்கும் முயற்­சி­யிலும் சிலர் தமது அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்த ஆரம்­பித்­துள்­ளனர். இது அங்கு நெருக்­க­மாக வாழ்ந்து வரும் தமிழ் – முஸ்லிம் மக்­க­ளி­டையே விரி­சலைத் தோற்­று­விக்கும் விவ­கா­ர­மாக மாறி­யுள்­ளது.

அதே­போன்று மயி­லத்­த­மடு மேய்ச்சல் தரை விவ­கா­ரத்­திலும் தமிழ் – சிங்­கள மக்கள் மத்­தியில் முரண்­பாட்டைத் தோற்­று­விக்கும் செயற்­பா­டுகள் தொடர்­கின்­றன. இ;வ்வாறான செயற்­பா­டு­களின் பின்னால் சில திட்­ட­மிட்ட சக்­திகள் இருப்­பதை உணர முடி­கி­றது.

அடுத்த வருடம் தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் அரசியல்கட்சிகளுக்கும் சில அரசியல்வாதிகளுக்கும் இனவாதம் தேவைப்படுகின்றது. கடந்த கால கசப்பான அனுபவங்கள் இதனையே உணர்த்துகின்றன. அவ்வாறான தீய அரசியல் சக்திகளுக்கு துணை போகின்றவராகவே அம்பிட்டிய சுமணரத்தின தேரரும் விளங்குகிறார். இந் நிலையில் இவரது வாய்க்குப் பூட்டுப் போட வேண்டியது அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களின் கடப்பாடாகும் என வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.